நிர்வாணமாக ராதிகா ஆப்தே!



அக்‌ஷய்குமாருடன் மீண்டும் இணைந்து படம் செய்கிறார் இயக்குநர் நீரஜ் பாண்டே. புயலின் பாதிப்பை களமாக வைத்து உருவாக்கும் இப்படத்துக்கு  ‘க்ராக்’ என்று பெயரிட்டிருக்கிறார்கள்.

லீனா யாதவ் இயக்கியுள்ள ‘பாச்சர்டு’ திரைப்படம் இந்தி, ஆங்கிலத்தில் விரைவில் வெளியாகிறது. இப்படத்தில் ஆடையை முற்றிலுமாகத் துறந்து நடித்து எதிர்பார்ப்புகளை எகிற வைத்திருக்கிறார் ராதிகா ஆப்தே (அந்தப் படத்தை இங்கே பிரசுரிக்க முடியவில்லை, மன்னிக்கவும்).

நடிகர் ஜான் ஆப்ரஹாம் தயாரிக்கும் படத்தில் அக்‌ஷரா ஹாசன் நடிக்க இருக்கிறார். இதில் முக்கியமான பாலியல் தொழிலாளி வேடத்தில் நடிக்க கேட்டபோது, ஜெனிலியா மறுத்துவிட்டாராம்.

ஹூமாகுரேஷியை ஆபாசமாக வர்ணித்த காமெடியன் கபில் சர்மா பகிரங்கமாக மன்னிப்பு கேட்டிருக்கிறார்.நாற்பத்தைந்து வயது அஜய்தேவ்கன் ‘ஷிவே’ படத்தில் ரிஸ்க்கான ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்திருப்பது ஆச்சரியம் தருவதாக அவரது மனைவி கஜோல் சிலாகிக்கிறார்.

- ஜியா