உரு



உருவமெடுக்கும் எழுத்து!

நாவல் ஆசிரியரான கலையரசன், தனது மனைவி தன்ஷிகாவுடன் அமைதியாக குடும்பம் நடத்துகிறார். ஆரம்பத்தில் சக்கைபோடு போட்ட அவருடைய கதைகளுக்கு நாளடைவில் வரவேற்பு குறைகிறது. அந்த சமயத்தில் திரில்லர் கதை எழுதுவதற்காக மேகமலைக்கு செல்கிறார். அங்கு மர்மமான முறையில் சில அமானுஷ்ய சம்பவங்கள் நிகழ்கிறது.

கலையரசன் கதையில் என்ன எழுதுகிறாரோ, அது நிஜத்திலும் நடக்கிறது. ஒரு கட்டத்தில் கலையரசனின் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. கலையர சனை கொல்லவருவது யார்? அதற்கான காரணம் என்ன என்பது மீதிக்கதை. கலையரசனுக்கு வித்தியாசமான வேடம். எழுத்தாளருக்கான உடல்மொழி கச்சிதம்.  தன்ஷிகாவின் நடிப்பு அருமை. ஆக்‌ஷன் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். மைம் கோபி, ஜெயபாலன் ஆகியோரின் நடிப்பு ஓ.கே.

பிரசன்னா எஸ்.குமாரின் ஒளிப்பதிவில் காட்சிகள் ரசிக்கும்படியாக உள்ளன.  திரில்லர் கதைக்கு தேவையான விறுவிறுப்பான இசையை ஜோகன் சிவனேஷ் கொடுத்திருக்கிறார். வழக்கமான திரில்லர் கதையாக இல்லாமல் புதுமையான திரைக்கதையில் வித்தியாசமாக முயற்சி செய்துள்ள இயக்குநர் விக்கி ஆனந்துக்கு வாழ்த்துகள்.