டப்பிங் ஸ்டார்:‘புலிமுருகன்’ பாலா!



“கடந்த 22 வருஷமா நான் இந்தத் துறையில் இருக்கேன். ஆரம்பத்துல டப்பிங் தியேட்டர்ல ஒரு சவுண்ட் அசிஸ்டென்ட் ஆகத்தான் என்னோட கேரியர் ஆரம்பிச்சது...’’ என உற்சாகமாக பேச ஆரம்பிக்கிறார் ஆர்.பி.பாலா.

‘‘சவுண்ட் அசிஸ்டென்ட்டா ஒரே அறையில் வேலை செய்யறது பிடிக்கலை. என்னோட வாய்ஸ் நல்லா இருக்கறதால டி.வி.சீரியல் ஹீரோக்களுக்கு வாய்ஸ் கொடுத்திருக்கேன். ஆயிரம் படங்களுக்கு மேல் டப்பிங் ரைட்டராக பணியாற்றிய வசந்தகுமார் சார்தான் நான் இந்தத் துறைக்கு வருவதற்கு இன்ஸ்பிரேஷன்.

பெரிய பெரிய நடிகர்கள் எல்லாம் அவரது படங்களுக்கு டப்பிங் பேச வருவாங்க. ஒரு மொழிமாற்று படத்துக்கு எப்படி சிரத்தை எடுத்து ஒர்க் பண்றதுங்கறதை அவர்கிட்ட தான் கத்துக்கிட்டேன். அதன்பிறகு ‘போக்கிரி’ டயலாக் ரைட்டர் வி.பிரபாகர் சார்கிட்ட அசோசியேட்டா சேர்ந்தேன். என் லைஃப்ல திருப்புமுனையா அமைஞ்சது அங்கேதான்.

ஒரு காலத்தில் வசூலைக் குவித்த ‘ஜக்கம்மா’, ‘புதுவை மாநகரம்’னு நிறைய படங்கள் மொழிமாற்றம் பண்ணினேன். மோகன்லால் நடிச்சு மலையாளத்தில் சூப்பர் டூப்பர் ஹிட் ஆன ‘புலிமுருகன்’ படத்தை 3டி தொழில்நுட்பத்தில் தமிழில் டப் பண்ணினது மறக்கமுடியாத அனுபவம்’’ என்கிறார் ஆர்.பி.பாலா.