நீங்க ஷட்டப் பண்ணுங்க!



‘மக்கள் ஸ்டார்’ ஆகிவிட்டார் ஓவியா.ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் ‘காஞ்சனா-3’ படப்பிடிப்பில் பிஸியாகஇருக்கிறார். “இப்போ எனக்கு ரசிகர்களிடம் இமேஜ் ரொம்பவும்மாறிப்போயிருக்கு.

அதுக்காக நான் மாறிட்டேன்னு அர்த்தமில்லை. இதோ இந்தப்படத்துலே கூட பழைய கிளாமர் டால் ஓவியாவை நீங்க பார்க்கலாம்” என்று பேசிக்கொண்டி ருந்தவர், ‘ஷாட் ரெடி மேடம்’ என்கிற உதவி இயக்குநரின் குரலுக்குஓடினார். மீண்டும் பிரேக்கில் வந்து பேச ஆரம்பித்தார்.

 “நான் ப்ரெஸ்ஸோட ரொம்ப ஃப்ரெண்ட்லி அப்ரோச்சா பழகுற நடிகை. உங்களுக்கே தெரியும். தயங்காம என்ன வேண்டுமானாலும் கேளுங்க. உங்களோட எல்லா கேள்விக்கும் எங்கிட்டே பதில் இருக்கு” என்றார். கிடுகிடுக்க வைக்கும் மழைக்கால கடற்கரைக் காற்று. நள்ளிரவு. எதிரில் இருந்த சிமெண்ட் பெஞ்சில் ஒய்யாரமாக அமர்ந்திருந்தார் கவர்ச்சித் தாரகை ஓவியா. இமை மூடவும் இடைவெளி விடாமல் அவரிடம் பேசத் தொடங்கினோம்.

 “பரபரப்பான இளம் நடிகை நீங்க. திடீர்னு காணாமப் போயிருந்தீங்களே?”

 “சினிமாவை மறந்து துறவு வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்த நாட்கள் அவை. அந்தநேரத்தில் நான் கொந்தளிப்பான மனநிலையில் இருந்தேன். அம்மா கேன்சரில்திடீர்னு இறந்துட்டாங்க. அப்பாவுக்கு நான் ஆதரவு. எனக்கு அவர் ஆதரவு. இந்தநிலையில் தினமும் ஷூட்டிங்குக்கு போகணுமான்னு தோணிச்சி. பாங்காக், கோவா, சென்னை, கேரளான்னு ஊர் ஊரா சுற்றித்தான் என் மனநிலையை சமப்படுத்தினேன்.”

“இப்போ இளசுகளோட ட்ரெண்டிங் டாக், ‘நீங்க ஷட்டப் பண்ணுங்க’தான். சமூகவலைத்தளங்களில் கொஞ்சு தமிழை ஓவியா தமிழ்னே சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க...” “என் மனசுல என்ன தோணுதோ அதை ஒளிவுமறைவு இல்லாம பேசுவேன். வீணா யாரையும் காயப்படுத்தி பேச மாட்டேன். எல்லாருக்கும் மரியாதை தருவேன்.

நான் பெரிய ஸ்டார் அப்படின்னு எப்பவுமே நினைச்சதில்லை.நான் சொன்ன வார்த்தையை இன்னொரு முறை கவனிச்சு பாருங்க. ‘நீங்க ஷட்டப் பண்ணுங்க’ அப்படின்னுதான், அதாவது, ‘நீ’ன்னு ஒருமையில் விளிக்கலை.‘நீங்க’, ‘பண்ணுங்க’ன்னு மரியாதையாதான் சொல்லியிருப்பேன். ஒரு ஆவேசத்துலே சொன்ன வார்த்தை இளசுகள் மத்தியில் ஸ்லோகனா மாறும்னு நான் நெனைச்சே பார்க்கலை...”

 “கமல்ஹாசன் கட்சி ஆரம்பிச்சா, அவருக்கு ஆதரவு தருவேன்னு தைரியமா சொல்லியிருக்கீங்களே? அரசியலில் குதிக்கிற ஐடியா இருக்கா?”

  “கமல்சார் ரொம்ப நல்லவர். அவரை மாதிரி இருக்கிறவங்க அரசியலுக்கு வர்றது நல்லதுதானே? அதனால்தான் அப்படி சொன்னேன். அவரை எனக்கு ரொம்பப் பிடிக்கும். எங்கிட்ட அவர், ‘நல்ல படங்களா தேர்வு பண்ணி நடிங்க. எப்பவும் சந்தோஷமா, ஜாலியா, நிம்மதியா இருங்க’ன்னு அட்வைஸ் பண்ணினாரு.

அவருக்கு புகழ் இருக்கு.பணம் இருக்கு. ஜனங்க கிட்ட நல்ல செல்வாக்கு இருக்கு. அதுக்காகவெல்லாம் அவர் அரசியலுக்கு வரலை. மக்களுக்கு சேவை செய்ய நினைக்கிறார். அதில் எந்த தப்பும் கிடையாது.

அவர் அரசியல் கட்சி ஆரம்பிச்சா, அதில் சேருவேனான்னுகாலம்தான் பதில் சொல்லணும். நல்ல எண்ணத்தோட, ஜனங்களுக்கு யார் நல்லது பண்ணணும்னு வர்றாங்களோ, அவங்களுக்கு நான் சப்போர்ட் பண்ணுவேன்.”

 “தமிழில் இப்போ செகண்ட் பார்ட் ஜுரம் அடிச்சிக் கிட்டிருக்கு. ‘கலகலப்பு-2’, ‘களவாணி-2’ன்னு. நீங்க நடிச்ச படங்களோட இரண்டாம் பாகம் தயாராகுது. ஆனா, இதுலே எல்லாம் நீங்க இல்லையே?”

 “இப்ப, ‘காஞ்சனா-3’யோடஷூட்டிங்கில்தான் நாம பேசிக்கிட்டிருக்கோம். முதல் ரெண்டு பாகத்துலே நான் நடிக்கலையே?
அதுக்கு என்ன பண்றது?

அப்புறம், ‘காட்டேரி’ படத்தில் நடிக்கறது பத்தி யோசிச்சிக்கிட்டிருக்கேன். எனக்கு கிடைக்கிற வாய்ப்புகளை நல்லா செய்யணும்னுதான் என் நோக்கம். எனக்கு கிடைக்காத வாய்ப்புகளைப் பற்றி எங்கிட்டே கேட்டா நான் என்ன சொல்லுறது?

நான் என்ன நினைக்கிறேன்னா ‘கலகலப்பு-2’, ‘களவாணி-2’ படங்கள் பற்றிய திட்டம் உருவாகிட்டிருந்த காலத்தில் நான் செல்போனைக்கூட ஸ்விட்ச் ஆஃப் பண்ணியிருந்தேன். என்னை தொடர்பு கொள்ள முடியலைன்னுகூட அவங்க வேற ஹீரோயின்ஸை யோசிச்சிருக்கலாம் இல்லையா?”

 “இந்த ‘காஞ்சனா-3’யில் வேதிகா இருக்காங்களே?”

  “இருக்காங்க. ஆனா, நானும் இதிலே ஹீரோயின்தான். அல்ட்ரா மாடர்ன் கேரக்டர். ராகவா லாரன்ஸ் டைரக்‌ஷன் செம மிரட்டலா இருக்கும். ெரண்டு பாகங்களை விட, மூன்றாவது பாகம்பிரமாண்டமா, ரொம்ப கமர்ஷியலா இருக்கும்.”

 “நீங்க நினைச்சா, நிறைய படங்களில் நடிக்கலாம். ஆனா ஏன் ரொம்ப செலக்டிவ்வான படங்களில் மட்டுமே நடிக்கிறீங்க?”

 “முன்னாடியே சொன்னதைத்தான் இப்பவும் சொல்றேன். நான் யார்கிட்டேயும் போய் வாய்ப்பு கேட்க மாட்டேன். சினிமா என்பது வாழ்க்கையில் ஒரு பகுதி மட்டுமே. அதுவே எனக்கு முழுமையான வாழ்க்கை கிடையாது.

என்னைத் தேடி வர்ற எல்லா படங்களிலும் நடிச்சு, கொடுக்கிற பணத்தை எல்லாம் வாங்கிப் போட்டுக்கிட்டு, லைஃபில் ஒரேயடியா செட்டிலாகணும்னு நான் நினைக்கலை. என் மன திருப்திக்காக சினிமாவில் நடிக்கிறேன். என் இதயத்துக்குப் பிடிச்ச மாதிரி வாழ்க்கை நடத்தறேன். வாழ்க்கையில் நிறைய விஷயங்கள் இருக்கு. பணம், காசு மட்டுமே எல்லா சுகத்தையும் கொடுக்காது.”

 “இப்பவும் நீங்க படுகிளாமரா நடிக்கிறீங்களே?”

 “அப்ப மட்டுமில்லை, இப்பவும் நான் அழகிதானே? நீங்களே சொல்லுங்க, நான் அழகாத்தானே இருக்கேன்? உடம்பை ஸ்லிம்மா வெச்சிருக்கேன். ஒரு நடிகைன்னா, ஷூட்டிங் ஸ்பாட்டில் டைரக்டர் சொல்றபடி நடிக்கணும்.

எந்தக் காட்சிக்கு எந்த டிரெஸ் பொருத்தமா இருக்குமோ அதை போட்டுக்கிட்டு நடிக்கணும். சினிமாவில் நடிக்க வந்த பிறகு, நான் இப்படி நடிக்க மாட்டேன், அப்படி நடிக்க மாட்டேன்னு முரண்டு பிடிக்கக் கூடாது. கிளாமர் டிெரஸ் போட்டுக்கிட்டு நடிக்கமாட்டேன்னு சொல்றவங்க, சினிமா துறைக்கே வரக்கூடாது. நான் தொடர்ந்து கிளாமரா நடிப்பேன். நீங்க கேட்ட மாதிரி, படுகிளாமரா இல்லைங்க.”

 “புதுப்பட வாய்ப்பு கிடைக்க, படுக்கையைப் பகிர்ந்துக்க வேண்டிய கட்டாயம் இருக்குன்னு சில நடிகைகள் திடீர் திடீர்னு சர்ச்சையைக் கிளப்புறாங்களே?”

 “இவ்வளவு பெரிய சமூகத்தில், பலதரப்பட்ட மக்கள் இருக்காங்க. எல்லாரோட சிந்தனையும் ஒரே மாதிரி இருக்காது. சினிமாத் துறையிலும் அப்படித்தான். நீங்க கேள்வியில் கேட்ட அந்த நெருக்கடியான விஷயம் என் லைஃபில் நடந்தது கிடையாது. அப்படி யாராவது பேசினால், ‘உங்க படமே தேவையில்லை’ன்னு போய்க்கிட்டே இருப்பேன்.

சினிமா நடிகை  என்பதால், இங்கே  யாரும் நம்மகிட்ட தவறா நடந்துக்க முயற்சி பண்ணப் போறதில்லை. கதை பிடிச்சு, சம்பளம் சரிப்பட்டு வந்தா நடிக்கலாம்.எதுவும் சரிப்பட்டு வரலைன்னா, அடுத்த படத்துக்கு போயிடலாம். இங்கே யாரும், யாரையும் வற்புறுத்தி பணிய வைக்க முடியாது. சினிமாவில் இருக்கிற நெகட்டிவ் விஷயங்களைத் தவிர்த்துவிட்டு, என் வழி தனி வழின்னு போய்க்கிட்டே இருக்கணும்.பாலியல் சுரண்டல் என்பது ஓர் உலகளாவிய பிரச்சினை. அதை வெறுமனே சினிமாத்துறையோட குறுக்கிப் பார்க்கக்கூடாது.”

 “உங்க எதிர்காலத்தை எப்படி தீர்மானிச்சிருக்கீங்க? மேரேஜ் பிளான் பற்றி சொல்லுங்க...”  “என்  வாழ்க்கையில் எதையும் முன்கூட்டியே பிளான் பண்ண மாட்டேன். எது நடக்கிறதோஅது தானாகவே நடக்க விட்டுடுவேன். எந்த விஷயத்துக்கும் டென்ஷனாக மாட்டேன்.இந்த வருஷம் இதைச் செய்யணும், அடுத்த வருஷம் அந்த நாட்டுக்கு போகணும்னுபிளான் பண்ணது கிடையாது.

தினமும் ஒவ்வொரு விநாடியும் நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். இந்த சந்தோஷம் என் கடைசி காலம்வரை இருந்தா போதும். எல்லாரும் எழுபது, இல்லன்னா, எண்பது வயசு வரைக்கும் வாழலாம். இடைப்பட்ட காலத்தில் எதுக்காக ஒருத்தரோட ஒருத்தர் சண்டை போட்டுக்கிட்டு, பொறாமை வார்த்தைபேசிக்கிட்டு இருக்கணும்? நெகட்டிவ் எண்ணங்களை ஒதுக்கி வெச்சிடுங்க. மேரேஜ் என்ற வார்த்தையிலும், அந்த பந்தத்திலும் இப்ப எனக்கு நம்பிக்கை இல்லை.மேரேஜ் என்பது ஒரு கான்ட்ராக்ட்.”

 “இன்றைய காலகட்டத்து இளைஞர்கள், பல்வேறு காரணங்களால் மன உளைச்சலால் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். நீங்களும்...?”

  “உண்மைதான். ஆனா, அந்த மன உளைச்சலுக்கு என்ன காரணம்? யார் அந்த மன அழுத்தத்தை உண்டாக்கறாங்கன்னு பார்க்கணும். நான் கூட டிப்ரஷனில் நிறைய நாட்கள்அவஸ்தைப்பட்டிருக்கேன். கவலைகள் எப்பவும் நம்மை விரட்டிக்கிட்டேதான் இருக்கும். அதை எதிர்த்து நிற்க கத்துக்கணும். பயந்து ஓடினா, அது இன்னமும்வேகமா நம்மை துரத்திக்கிட்டு வரும்.

மன உளைச்சலில் இருந்து மீண்டுவரணும்னா, இந்த உலகத்தில் நாம் வாழும் வாழ்க்கையை நல்லா என்ஜாய் பண்ணி வாழ கத்துக்கணும். தேவையில்லாத விஷயங்களை மனசுல நினைச்சு, இதயத்தை டார்ச்சர்  பண்ணக்கூடாது. நான் சினிமாவில் நடிக்க வந்த காலத்தில் இருந்தே எந்தவிஷயத்தையும் வித்தியாசமா அணுகுவேன். நிறைய யோசிச்சு பேசுவேன்.

‘களவாணி’ படத்தில் நடிச்சுக்கிட்டிருந்த நேரத்தில் இந்த மாதிரி விஷயங்களை நான்பேசியிருந்தா, ‘ஓவியா சரியான பைத்தியம்’னு சொல்லி கிண்டலடிச்சிருப்பாங்க. இப்ப நான் பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் எல்லாரும் உன்னிப்பா கவனிக்கிறாங்க. ஸோ, அன்னைக்கு இருந்த அதே ஓவியாதான் இன்னைக்கும் பேசிக்கிட்டிருக்ேகன். நாம் சந்திக்கும் சூழ்நிலைதான் எல்லா விஷயங்களையும் முடிவு பண்ணுது.”

- தேவராஜ்