143



காதலனுக்கு கத்திக்குத்து!

வேலையில்லா இளைஞரான ரிஷி நண்பர்களுடன் ஜாலியாக ஊர் சுற்றுகிறார். ஒரு கட்டத்தில் அப்பாவின் வற்புறுத்தலுக்காக சென்னைக்கு வேலைக்கு வருகிறார். வேலையோடு வேலையாக தன் வீட்டிற்கு எதிர் வீட்டில் உள்ள பிரியங்கா ஷர்மாவை காதலிக்கிறார் ரிஷி. காதல் கனிந்த நிலையில், திடீரென ரிஷி கத்தியால் யாரோ ஒருவரால் குத்தப்படுகிறார். ரிஷி உயிர் பிழைத்தாரா, எதற்காக கொலை முயற்சி என்பதே ‘143’.

நாயகனாக நடித்திருக்கும் ரிஷியின் நடிப்பு பாராட்டும்படியாகயிருக்கிறது. புதுமுகத்துக்கான அடையாளமே இல்லாமல் சிறப்பாக நடித்திருக்கிறார். குட்டை பாவடையுடன் தரிசனம் கொடுத்து ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கிறார் பிரியங்கா ஷர்மா. கே.ஆர்.விஜயா, விஜயகுமார், ராஜசிம்மன் உள்பட அனைவரும் நன்றாக நடித்துள்ளனர்.

நெல்லை சிவாவின் வெள்ளந்தியான காமெடி சிரிக்க வைக்கிறது. விஜய் பாஸ்கர் இசையில் பாடல்கள் இனிமை. ஜே.கே.ராஜேஷ் ஒளிப்பதிவில் காட்சிகள் கண்களுக்கு விருந்து. காதல் கதைக்கான இலக்கணத்தோடு வித்தியாசமான ஒரு கிளைமேக்ஸ் அமைத்து கவனம் ஈர்க்கிறார் இயக்குநர் ரிஷி.