ஸ்டாக் காலி!



சரோஜாதேவி பதில்கள்

* அணைப்பு - அரவணைப்பு. விளக்கவும்?
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.
விளக்கை அணைத்தபிறகே குத்துவிளக்கை அரவணைப்பது நம் பண்பாடு.

* எதைக்கண்டு நீங்க பெருமூச்சு விடுவீர்கள்?
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.
பிரும்மாண்டமா எதைப் பார்த்தாலும்....

* அல்வாவுக்கு என்ன அப்படியொரு ஸ்பெஷல்?
- எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு (வேலூர்)
வாயில் போட்டதுமே கரைகிறது. அவ்ளோதான்.

*திடீரென பிரபல நடிகைகள் கவர்ச்சி காட்டமாட்டேன் என்று அடம்பிடிக்கிறார்களே?
- கே.கே.பாலசுப்பிரமணியன், குனியமுத்தூர்.
ஸ்டாக் காலி ஆயிட்டிருக்கும்.

* படைத்தவனைக் கண்டால் என்ன கேட்பீர்கள்?
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.
அதுக்கான மெக்கானிஸத்தை ஏன் இவ்வளவு சிக்கலாகப் படைத்திருக்கிறீர்கள் என்று கேட்பேன்.