நேத்ரா



காதலனை தொலைக்கும் காதலி!

ஹீரோ தமன்குமாரும், ஹீரோயின் சுபிக்‌ஷா வும் காதலிக்கிறார்கள். சுபிக்‌ஷாவுக்கு வேறு ஒருவருடன் திருமண ஏற்பாடுகள் நடக்கின்றன. இது பிடிக்காமல் கனடாவில் இருக்கும் தன் நண்பர் வினய்யிடம் அடைக்கலம் தேடிச் செல்கிறார்கள்.
அங்கே திடீரென தமன்குமார் மாயமாக மறைகிறார். கனடாவுக்கு சுபிக்‌ஷா தனியாகத்தான் வந்தார் என்று அனைவரும் அடித்துச் சொல்கிறார்கள். வினய் யார், தமன்குமாரை சுபிக்‌ஷா கண்டறிந்தாரா, இருவரும் இணைந்தார்களா என்பதே விறுவிறு மீதிக்கதை.

தமன்குமார் - சுபிக்‌ஷா ஜோடிப்பொருத்தம் அபாரம். வினய், வித்தியாசமான வேடத்தில் மிரட்டியிருக்கிறார். இமான் அண்ணாச்சி, ரோபோ சங்கர், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் எல்லாம் இருந்தும் காமெடி ஏரியா, சரியாக செல்ஃப் எடுக்கவில்லை.

முதல் பாதியில் முடிச்சுகளை வேகமாக போடும் இயக்குநர் ஏ.வெங்கடேஷ், இரண்டாம் பாதியில் அவற்றை ரொம்பவே மெதுவாக அவிழ்த்து சோதிக்கிறார்.காந்த் தேவாவின் இசை ஓக்கே ரகம். ஏ.ஜெயப்பிரகாஷின் ஒளிப்பதிவு, கனடாவின் அழகை அள்ளிப் பருக வைக்கிறது. படத்தின் நீளத்தில் கொஞ்சம் கத்தரி வைத்திருக்கலாம்.