கண்ணுக்கு விருந்து! கருத்துக்கு மருந்து!!



ரீடர்ஸ் கிளாப்ஸ்!

“நான் ஓர் இயக்குநர். நடிகர்களை உருவாக்குவேனே தவிர, நானே நடிக்க மாட்டேன்” என்கிற இயக்குநர் ஜெயபாரதியின் தன்மானம், வருமானத்திடம் தோற்றுவிட்டதே?
- எம்.லோகு, திருவண்ணாமலை.

“வடிவேலு இல்லாம சிரமப்படறோம்” என்கிற போண்டாமணியின் கருத்துதான் ரசிகர்களின் கருத்தும்.
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

‘சரோஜாதேவி பதில்கள்’ பக்கத்தில் அழகுமங்கை ஒருவர் தலைமீது கைவைத்திருப்பது எங்கள் கேள்வியின் வீரியத்தைக் கண்டா அல்லது தங்களது பதில்களில் சொட்டும் காமரசத்தை கண்டா?
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

வித்தியாச இயக்குநர் ஜெயபாரதி பற்றிய கட்டுரை அருமை. அவர் ‘தேநீர்’ என்றொரு படம் எடுக்க முயற்சித்ததையும், ‘திரைச்சுவை’ என்கிற பத்திரிகையின் ஆசிரியர்ப் பொறுப்பு ஏற்றதையும் சேர்த்துக் குறிப்பிட்டிருக்கலாம்.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

பாடலாசிரியர் நண்பர் ஜெயம்கொண்டான், தன்னம்பிக்கை விடாமுயற்சியால் பயம்வென்றான் என்றால் அது மிகையல்ல. அவருடைய பேட்டி சிறப்பு. திறமைகளை இருட்டடிப்பு செய்வோருக்கான சாட்டையடி. வெற்றிமுகட்டில் பறக்கட்டும் அவர் புகழ்க்கொடி.
- கவிஞர் கவிக்குமரன், கொளத்தூர்.

‘குடிசை’ ஜெயபாரதியின் பதிவுகளை சுமந்து வந்த ‘மின்னுவதெல்லாம் பொன்தான்’, சினிமாப் பிரியர்களுக்கு சிறந்த வழிகாட்டி மட்டுமல்ல. பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷமும்கூட.
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.

‘வண்ணத்திரை’யின் புளோஅப்புகள் கண்ணுக்கு விருந்தெல்லாம், அதற்கு எழுதப்படும் வாசகங்கள் கருத்துக்கு மருந்து.
- கவிஞர் கா.திருமாவளவன், திருவெண்ணெய்நல்லூர்.