நோக்கம் என்ன?சரோஜாதேவி பதில்கள்

* காமத்தின் உச்சக்கட்டம் எது?
- எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு.
இதென்ன சார் கேள்வி? உச்சக்கட்டம்தான் உச்சக்கட்டம்.

* ஷார்ட்டா ஒரு காதல் கதை சொல்லுங்களேன்.
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.
 “I am still Virgin”. அவளுடைய டீஷர்ட்டில் மேடிட்ட இடத்தில் அந்த வாசகத்தை கண்டதுமே அவள் மீதான தீராக்காதலில் விழுந்தான். பாவம், அவன் டீஷர்ட்டின் பின்பக்க வாசகத்தை கவனிக்கவில்லை. அங்கே “This is my Old T-Shirt” என்று எழுதியிருந்தது.

* முதல் இரவின் நோக்கம் என்ன?
- கே.முருகன், திருவண்ணாமலை.
பால், பழம் குடிப்பது.

* சாமத்தின் எல்லை விடியல், காமத்தின் எல்லை?
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.
கடவுள் என்று சில சாமியார்கள் சொல்கிறார்கள்.

* சந்துலே சிந்து பாடுவது என்றால் என்ன?
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.
நீங்கள் என்ன அர்த்தத்தில் கேட்கிறீர்களோ? சிந்து என்பது செய்யுள் வகையில் ஒன்று. சந்தத்தில் சிந்து பாடுவது என்பதே ‘சந்துலே சிந்து’ என்று மருவிவிட்டது.