குழப்பத்தில் ஜில்!“வயசுக்கு ஆகிட்டே போவுது பாப்பா. உனக்கு கல்யாணம் காட்சி பண்ணிப் பார்த்து பேரப்புள்ளைங்களை பார்க்க வேணாமா?” என்று பெற்றோர் நச்சரிக்கத் தொடங்கி விட்டார்களாம்.யெஸ்.‘ஜில்’ நடிகைக்கு 30 வயசு ஆகிவிட்டது. அடுத்த ஆண்டு சினிமாவுக்கு வந்து பத்தாவது ஆண்டு. இருப்பினும் அம்மணியின் மார்க்கெட் கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாகதான் பிக்கப் ஆகிவருகிறது.

ஆசைப்பட்ட இடத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் கல்யாணம் ஆகிவிட்டால் அக்கா, அண்ணி கேரக்டருக்குதான் கூப்பிடுவார்களே என்று தயங்கிக் கொண்டிருக்கிறாராம் நடிகை. என்ன செய்வது என்று தன்னுடைய நலம் விரும்பியான மக்கள் செல்வனிடம் ஆலோசனை கேட்டிருக்கிறாராம். ‘காலாகாலத்துலே நடக்க வேண்டியதெல்லாம் கரெக்டா நடந்துடணும்’ என்று அவர் யதார்த்தமான யோசனையை சொல்லியிருக்கிறார்.இருந்தாலும் குழப்பத்தில்தான் இருக்கிறார் ஜில்.

- ராஜேஷ்