வீடு



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine




                ற்ற எல்லாக் கடன்களையும் போலவே, வீட்டுவசதிக்கடனிலும் மிரட்டவும் குழப்பவும் கூடிய ஒரு விஷயம் & வட்டி!கடன் வாங்குகிறபோது நாம் அவ்வளவாகக் கண்டுகொள்ளாமல் விடுகிற முக்கிய விஷயமும் இதுதான். வட்டி விகிதம், திருப்பிச் செலுத்தும் மாதங்கள், மாதத்தவணை ஆகிய விவரங்களை மட்டுமே வங்கிகள் சொல்லும். வாங்கிய பிறகுதான் நமக்குள் ஆயிரம் கேள்விகள் பிறக்கும்...

வட்டியாக மட்டுமே எவ்வளவு செலுத்துகிறோம்? மாறும் வட்டியா? மாறாத வட்டியா? மாறும் வட்டியை மாறாத வட்டியாக மாற்ற முடியுமா? நாள் கணக்கிலா, மாதக் கணக்கிலா, காலாண்டு கணக்கிலா? & எந்த முறையில் வட்டி கணக்கிடப்படுகிறது? முன்கூட்டியே கடன்தொகையை திருப்பிச் செலுத்தினால் வட்டி மிச்சமாகுமா?

மாறும் வட்டி (ஃப்ளோட்டிங்) முறையில் வட்டி எப்போது வேண்டுமானாலும் மாறுபடும். இது எப்படிக் கணக்கிடப்படுகிறது? ரிசர்வ் வங்கி குறிப்பிட்ட கால இடைவெளியில் றிக்ஷீவீனீமீ லிமீஸீபீவீஸீரீ ஸிணீtமீ என்ற அடிப்படை கடன் வட்டி விகிதத்தை மாற்றியமைத்து அறிவித்து வந்தது. இந்த வட்டிக்கணக்கு அடிப்படையில்தான், வீட்டுவசதிக்கடன் உள்பட அனைத்துவகைக் கடன்களின் வட்டி விகிதமும் நிர்ணயிக்கப்பட்டது. 2010 ஜூலை 1 முதல் ப்ரைம் லென்டிங் ரேட்டுக்கு மாற்றாக ஙிணீsமீ ஸிணீtமீ முறையைக் கொண்டு வந்திருக்கிறது ரிசர்வ் வங்கி. வங்கிகள் வசூலிக்கக்கூடிய குறைந்தபட்ச வட்டி அளவுதான் இந்த ‘பேஸ் ரேட்’.

பணவீக்க விகிதம் அதிகமாகும்போதெல்லாம் வீட்டுக்கடன் வாங்கியோர் அடிவயிற்றில் புளியைக் கரைக்கும். பணவீக்கம் என்ற தொடர்வினையில் ரிசர்வ் வங்கியே அடுத்த குண்டு போடும். பேஸ் ரேட் உயர்ந்த உடனே, வங்கிகள் கடன் வட்டிவிகிதத்தை உயர்த்தும். நம் கடன்களிலேயே மெகா கடனான வீட்டுக்கடன் தவணை ஜிவ்!

பேஸ் ரேட் அதிகமானால் மட்டும்தான் வீட்டுக்கடன் வட்டி அதிகமாகும் என்ற அவசியமில்லை. அறிவிப்பு எதுவும் இல்லாமலும்கூட வீட்டுக்கடன் வட்டி உயரக் கூடும். ஆண்டுக்கு ஒருமுறையாவது உங்கள் கடன் விவரங்களைக் கேட்டு அறியுங்கள்.

 பேஸ் ரேட் காரணமாக வட்டி குறைந்தோலோ, அதிகமானாலோ, பொதுவாக தவணைத்தொகை மாறாது. தவணை செலுத்தும் காலத்தில் மாற்றம் ஏற்படலாம்.

 சில வங்கிகள் வித்தியாசத் தொகையை மொத்தமாகச் செலுத்தும்படி கூறுவதுண்டு.

  வட்டி விகிதம் அதிகமாகி, பணி ஓய்வு பெற்ற பிறகும்கூட தவணை கட்டும் சூழல் ஏற்பட்டால், அதைத் தவிர்ப்பதற்காக, இப்போதே மாதத்தவணையை அதிகரிப்பதும் உண்டு.

 இதுபோன்ற சூழல் ஏற்பட்டால் மாதத்தவணையை அதிகரித்துக் கட்டுவதற்கு முதல் முன்னுரிமை கொடுக்கலாம். முடியாவிட்டால் ஆண்டுகளை அதிகரித்துக் கொள்ளலாம். பணவீக்க விகிதம் தொடர்ந்து அதிகமாக இருப்பின், இன்றைய பணத்தின் மதிப்பைவிட, பல ஆண்டுகள் கழித்து பணத்தின் மதிப்பு மிகவும் குறைவாகவே இருக்கும்.

 வருமானம் அதிகரித்து வருகிறதா? வட்டி உயர்வால் அதிகம் பாதிக்கப்படாமல் இருக்கவும், வட்டியை மிச்சப்படுத்தவும் வழியிருக்கிறது! இடையிடையே பணம் கட்டி கடன்தொகையைக் குறைக்கலாம். மாதத்தவணையையும் அதிகரித்துக் கட்டலாம்.

 வங்கிகளின் நடவடிக்கையை கூர்ந்து கவனிக்க வேண்டும். கடன்தாரரின் வயது குறைவாக இருக்கும்போது வட்டி அதிகரித்தால், வங்கிகள் சொல்லாமலே மாதத்தவணையை மாற்றாமல், தவணைக் காலத்தை நைசாக அதிகரித்து விடுகின்றன. இதையறிந்து, போனஸ், அலவன்ஸ் என உபரித்தொகை கிடைக்கும்போதெல்லாம் மொத்தமாகக் கட்டி கடனைக் குறைப்பதுதான் நல்லது.

  ரெக்கரிங் டெபாசிட், ஃபிக்ஸட் டெபாசிட் முதிர்வுத் தொகை, இன்சூரன்ஸ் மணிபேக் போன்ற வரவுகளையும் வீட்டுக்கடனுக்குக் கட்டினால், மொத்தத்தில் வட்டித்தொகையை சேமிக்கலாம்.
ஃப்ளோட்டிங் வட்டி விகிதம் அதிகரிக்கிறது என்பதற்காக நிலையான வட்டி விகிதத்துக்கு மாறுவது இன்றைய நிலையில் புத்திசாலித்தனம் அல்ல. நிலையான (ஃபிக்ஸட்) வட்டி முறையில் திருப்பிச் செலுத்தப்படும் காலம் வரை வட்டிவிகிதம் மாறாது என்றே நம்மில் பலர் நினைக்கிறோம். ஆனால்... கொஞ்சம் பொறுங்கள்!

இப்போது நிலையான வட்டி விகிதம் என்பதே, பெரும்பாலும் 3 & 5 ஆண்டுகளுக்கு மட்டுமே நிலையானதாகவும், அதன்பிறகு மாற்றப்படுவதாகவும் மாறி இருக்கிறது. அதுமட்டுமல்ல... மாறும் வட்டியை விட நிலையான வட்டி 2 சதவிகிதம் வரை அதிகமாகவும் இருக்கும். அதனால் நிலையான வட்டி விகிதம் லாபம் தரும் வாய்ப்பு மிகக்குறைவு.

அதிகரிக்கும் வட்டி உயர்வுக்கு ஏற்ப மாதத்தவணையை அதிகரிக்கலாம். அல்லது அதற்கு இணையான தொகையை கட்டி கடனைக் குறைக்கலாம். இதுதான் சிக்கல் தீர நல்ல வழி!
வேறெந்த வழிகளில் வட்டியைக் குறைக்க முடியும்? அது அடுத்த வாரம்...
(கட்டுவோம்!)
தாஸ்