கண்ணுக்குள் டாட்டூ



- ரோனி

ஃபேஷனுக்கு லிமிட்டே கிடையாது. கூலர்ஸ் கண்கள், லூயிபிலிப் ஷர்ட், டாட்டூ புஜங்கள், ஸ்பைக் முடி என பலதையும் ட்ரை செய்தால்தானே சூப்பர் டீனாக உலகையே உற்று கவனிக்க வைக்க முடியும்? அதைத்தான் கட் கலிங்கரும் செய்தார்; கொஞ்சம் ஓவர்டோஸ் ஆகிவிட்டது. கனடாவைச் சேர்ந்த மாடல் கட் கலிங்கர், புத்தம் புதிதாக யோசித்து ஸ்லேரா டாட்டூவை ட்ரை செய்தார். எங்கே? கண்ணுக்குள். விளைவு, பார்வையே பறிபோகும் நிலை. தன் பாய்ஃப்ரெண்ட் எரிக் ப்ரௌன் கொடுத்த கேரண்டியில் கண்ணுக்குள் இங்க் ஊற்றி டாட்டூ குத்தினார்.

சில நாட்களிலேயே கண்களிலிருந்து இங்க் நிற்காமல் வழிய பீதியாகி டஜன் ஹாஸ்பிடல்களாக ஏறி இறங்கி வைத்தியம் பார்த்து வருகிறார். உடலில் டாட்டூ குத்துவதில் கால்சதம் அடித்தவரான இவர், தன்னுடைய கண்களை போட்டோ பிடித்து இணையத்தில் போட்டு உஷார் என விழிப்புணர்வு செய்துவருகிறார். டாட்டூவுக்குப் பின் சூரியநமஸ்காரம்!