Hand job cabin படத்தின் காப்பிதான் இருட்டு அறையில் முரட்டு குத்து சினிமாவா?



‘‘இந்தப் படத்தோட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதுமே பலரும் இப்படி சொன்னாங்க. ‘அட’னு குஷியானேன். என் அசிஸ்டெண்ட்ஸ், ‘சார், அந்தப் படத்தோட டிவிடி கிடைச்சா சீன்ஸ் சுடலாம்’னு காதை கடிச்சாங்க! ‘நல்ல ஐடியா... டவுன்லோட் பண்ணுங்க’னு சொன்னேன். ஆனா, ‘நெட்ல தேடித்தேடி சலிச்சதுதான் மிச்சம். டிரெயிலர் மட்டும்தான் இருக்கு. படமே இல்லை’னு புலம்பினாங்க. அப்பதான் அப்படியொரு படமே இல்லைனு அவங்களுக்கு புரிய வைச்சேன்!

ஹாலிவுட்ல வெளியான ‘Cabin in the woods’ படத்தை கிண்டல் செஞ்சு வெளியிட்ட டிரெயிலர்தான் ‘Hand job cabin’! மத்தபடி அப்படியொரு படம் ரெடியாகவே இல்லை. உண்மை இப்படியிருக்கிறப்ப, எடுக்காத படத்தைப் பார்த்து நான் காப்பி அடிச்சிருக்கேன்னு சொன்னா எப்படி?! கிராமப்புறங்கள்ல ‘ஒரு பேய் வந்து அந்தப் பையனை கற்பழிச்சிடுச்சு... அது ஒரு கன்னிப்பேய்’னு ஒரு கதையோ, சம்பவமோ சொல்வாங்க இல்லையா... அப்படியொரு கன்னிப்பேய்கிட்ட வெர்ஜின் பசங்க மாட்டிக்கறாங்க. இதுதான் ‘இ.அ.மு.கு’ படத்தோட சப்ஜெக்ட்!’’ என்கிறார் இயக்குநர் சன்தோஷ் ஜெயக்குமார்.                                          

- மை.பாரதிராஜா