நண்பர்களுக்கு மகளை தாரை வார்த்த தந்தை!லக்னோவின் சிதாபூர் மாவட்டத்தைச் சேர்ந்த கம்லாபூரில் நடந்த விழா ஒன்றுக்கு தந்தையுடன் மகள் சென்றார். அப்போது மான்சிங் என்ற தன் நண்பருடன் பைக்கில் அமர வைத்து மீரஜ் என்பவரின் வீட்டுக்கு மகளை அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கு தந்தையின் நண்பர்கள் அப்பெண்ணை கூட்டாக பலாத்காரம் செய்துள்ளனர்.

இதற்கு அத்தந்தையே உடந்தையாக இருந்திருக்கிறார் என்பதுதான் கொடுமை. 18 மணி நேரங்களுக்குப் பின் தப்பி வந்த பெண், தாயுடன் சேர்ந்து போலீசில் புகார் அளித்துள்ளார். பதினாறு ஆண்டுகளுக்கு முன் திருமணமானவருக்கு 14 வயதில் குழந்தை உண்டு. அவருக்குத்தான் இந்த வன்கொடுமை தந்தையின் ஏற்பாட்டில் நிகழ்ந்திருக்கிறது.    

- ரோனி