96 வயது பள்ளி மாணவி!



மெக்சிகோவைச் சேர்ந்த குவாடலூப் பேலசியஸ், தன் 96 வயதில் பள்ளிக்குச் சென்று வருகிறார். அக்கடா என ஈசி சேரில் சாயும் வயதில் எதற்குப் பள்ளி? படிக்கும் ஆசைதான் காரணமாம். சிறுவயதில் வறுமையால் படிக்க முடியாமல் விவசாயப் பண்ணை வேலைக்குச் சென்ற பேலசியஸுக்கு இரு திருமணங்களின் மூலம் ஆறு குழந்தைகள் உண்டு. 2015ம் ஆண்டு தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி படிப்பை முடித்தவர், மேல்நிலைப் படிப்புக்கு பள்ளியில் வந்து சேர அரசு கூறியதால் பள்ளி யூனிபார்மோடு வந்து வேதியியல், கணக்கு பாடங்களில் குறிப்புகள் எடுத்துப் படித்து வருகிறார், ‘டோனா லுபிடா’ என்ற செல்லப்பெயர் கொண்ட மெக்சிகோ பாட்டி!   


- ரோனி