ஆசைப்பட்டது பெண்... பிறந்த 14ம் ஆண்!அமெரிக்காவின் மிக்சிகனில் வசிக்கும் ஜே, கடெரி ஸ்வாந்த் தம்பதியருக்கு அண்மையில் ஆண் குழந்தை பிறந்தது. உடனே அவசரப்பட்டு வாழ்த்துக்களைச் சொல்லாதீர்கள். இது அவர்களுக்குப் பிறந்திருக்கும் 14வது ஆண் வாரிசு! இந்தியாவில் ஆண் குழந்தைக்கு தவிக்கிறார்கள் என்றால் இக்குடும்பம் பெண்ணுக்காக தவித்து பதிமூன்று ஆண்களைப் பெற்றெடுத்து இப்போது அதற்கடுத்த குழந்தைக்கும் பர்த்டே பாட்டு பாடி வருகிறது.‘‘பெண் குழந்தைக்கான போராட்டம் போதும். இனி என் பிள்ளைகளுடன் சந்தோஷமாக ஒவ்வொரு நிமிடத்தையும் கொண்டாடி வாழ்வேன்!’’ என்கிறார் ஜே. பதிமூன்றாவது குழந்தை பிறந்தபோதும் இதே வார்த்தையைத்தான் ஜே சொல்லியிருந்தார்!                     


- ரோனி