coffee table
இயற்கையின் காதலி
 ‘மீண்டும் ஒரு காதல் கதை’ ஹீரோயின் இஷா தல்வாரை நினைவிருக்கிறதா?
இப்போது மல்லு, பாலிவுட்களில் கலக்கி வரும் அவர், ரிலாக்ஸ் ட்ரிப்பாக மேகாலயா பறந்து வந்திருக்கிறார். பனி மலைகளின் இயற்கை எழிலில் மனதைப் பறிகொடுத்தவர், அங்கே விதவிதமாக க்ளிக்கி அதை அப்படியே தன் இன்ஸ்டா பக்கத்தில் தட்டிவிட, இஷாவுக்கு லைக்குகள் குவிகின்றன.
 ஸ்லிம் ப்யூட்டி
எமி ஜாக்சன் நடித்து வரும் டிவி சீரியஸான ‘சூப்பர் கேர்ள்’ மூன்றாவது சீஸனைத் தொட்டிருக்கிறது. உடலை எப்போதும் ஸ்லிம் ப்யூட்டியாக வைத்துக்கொள்வதில் எமிக்கு நிகர் எமியே. அந்த வகையில் தனது ஃபிட்னஸ் பேக்கேஜில் புதிதாக யோகாவையும் இணைத்திருக்கிறார். லண்டனில் உள்ள ஒரு அழகிய பூங்காவில் கண்களை மூடிக்கொண்டு தவ நிலையில் இருக்கும் எமியின் யோகா புகைப்படம் ஒன்று இணையத்தைக் கலக்கிவருகிறது.
 ஸ்மார்ட்போன்
‘‘ஒரு மாடல் ஸ்மார்ட்போனில் இருக்கும் வசதிகள் இன்னொரு மாடலில் இல்லை...’’ என்று அதிர்ச்சியைக் கிளப்பியிருக்கிறார்கள் ஸ்மார்ட்போன் பயனாளிகள். இந்தியா முழுவதும் சுமார் 15 ஆயிரம் பேரிடம் எடுக்கப்பட்ட சர்வேயில்தான் இப்படி நொந்து நூலாகியிருக்கிறார்கள் அலைபேசிக்காரர்கள்.
21% பேர் வாட்டர்ப்ரூஃப் வசதியில்லை என்றும், 20% பேர் சாஃப்ட்வேர் நாட்கள் செல்லச் செல்ல மெதுவாகிறது என்றும், 19% பேர் சார்ஜே சுத்தமாக நிற்பதில்லை என்றும், 10% பேர் கேமரா சரியாக வேலை செய்வதில்லை என்றும் புகார் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், அனுதினமும் புது மாடல் ஸ்மார்ட்போன் சந்தையில் இறங்குவது குறைந்தபாடில்லை.
ஹாலோவீன்
பிலிப்பைன்ஸில் டெரர் டாக்கே மாயா என்ற இரண்டு வயது சிறுமியைப் பற்றித்தான். கடந்த வாரம் அங்கே ஹாலோவீன் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. மற்றவர்களைப் பயமுறுத்தும் வகையில் வேஷம் போட்டுக்கொண்டு வீதிகளில் உலா வருவது இத்திருவிழாவின் ஸ்பெஷல்.
இதில் மாயாவின் வேஷம் மற்றும் அவர் அணிந்து வந்த ஆடை பலரை குலைநடுங்கச் செய்ததோடு, சிறந்த ஹாலோவீன் பரிசையும் தட்டியிருக்கிறது. அருகில் இருக்கும் புகைப்படத்தைப் பார்த்தாலே அதன் டெரர் புரியும். மாயாவின் உடையை வடிவமைத்தவர் அவரின் அம்மா என்பதுதான் இதில் ஹைலைட்!
குங்குமம் டீம்
|