ஏரியா லிட்ரேச்சர்



பட்சி ரெண்டு சிரிக்குது
படபடன்னு இருக்குது

அய்னாவரம்
ஊருக்குள்ளே
பஸ் டெப்போ
இருக்குது
இத்த சொன்னா
சிட்டிக்குள்ளே
பட்சி ரெண்டு
சிரிக்குது!

மயிலாப்பூரு
டேங்குலே
தண்ணி உண்டா
காட்டு...
லஸ் கார்னரு
சிக்னலுலே
நிக்குறாரு
பாரு ஏட்டு...

ஜோதி தியேட்டரு
இருக்குறது
கத்திப்பாரா
ஜங்ஷன்
திநகர் தெருக்களிலே
தெனந்தோறும்
ஃபங்ஷன்!

பட்லீஸோட
லவ்வு
கடற்கரைலே
பொறக்குது
எஸ்.ஐ.டி. காலேஜ்
பக்கம் வந்தா
மனசு ரெக்கை
கட்டி பறக்குது!

சீத்தலைப் பாட்டனார்