அக்கட தேசத்தில் ஆட்டம்!‘‘இனி என்ட ஸ்டேட் கேரளா...’’ என சன்னி லியோன் சொன்னாலும் சொல்வார் போலிருக்கிறது!மலையாளத்தில் சந்தோஷ் நாயர் இயக்கத்தில் ‘ரங்கீலா’வில் டைட்டில் ரோலில் நடிக்கிறார் சன்னி. தவிர அங்கே மம்முட்டியுடன் ‘மதுரராஜா’விலும் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடியிருக்கிறார்.

‘‘கேரளா ரொம்ப பிடிச்சிருக்கு. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி, ஒரு கடைத்திறப்பு விழாவிற்காக போயிருந்தேன். நாடே திரண்டிருந்தது. அந்த பிரமிப்பு இன்னும் கண்ணுக்குள்ளேயே நிக்குது. மம்மூட்டி சாரின் ‘மதுரராஜா’வில் ஒரு பாடலுக்குத்தான் ஆடியிருக்கேன். அந்தப் படத்தில் கோலிவுட் நடிகர் ஜெய்யும் இருக்கார். அவரோட ‘வடகறி’யில் ஒரு பாடலுக்கு ஆடியிருக்கேன்...’’ என கண்களில் கபடி ஆடுகிறார் சன்னி.l

மை.பா