3வது கண்!தன் கணவர் நிக் ஜோனஸுடன், தான் இருக்கும் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் ‘அட் ஹோம்’ என தலைப்பிட்டு பிரியங்கா சோப்ரா பதிவிட்டார்.இதோ இங்கு பிரசுரமாகி இருக்கிறதே... அதே போட்டோதான்.
கடந்த டிசம்பரில்தான் இருவரும் சதி பதி ஆகியிருக்கிறார்கள். சின்னஞ்சிறுசுகள். உண்மையிலேயே பிரியங்காவை விட நிக் ஜோனஸ் சிறியவர்தான்; வயதால்!ஜோடி மகிழ்ச்சியாக இருக்கட்டும் என இப்படத்துக்கு ஹார்ட்டினை டிக் செய்யலாம். வாழ்த்துகள் என மறுமொழி இடலாம்.

மாறாக நெட்டிசன்களில் பலர் கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்.யெஸ். ‘இந்தப் படத்தை எடுத்த 3வது மனிதர் யார்..?’, ‘அந்தரங்கமாக நீங்கள் இருப்பதை இன்னொருவர் பார்க்க அனுமதிப்பீர்களா..?’ என்றெல்லாம் வினாக்கள் தொடுக்கிறார்கள்.நொந்து நூலாகியிருக்கிறார் பிரியங்கா.ம்... பிரபலமாக இருப்பதன் துன்பம் பிரபலங்களுக்குத்தான் தெரியும்!

காம்ஸ் பாப்பா