சின்னத்தம்பிக்காக கண்ணீர் வடிப்பதற்கு முன் இதைப் படியுங்கள்!



என்ஜிஓ அமைப்பான Wildlife trust of India, யானைகளின் 96 வலசைப் பாதைகளை மீட்கும் பணியை மேற்கொள்ளப் போகிறது. இந்த நிறுவனம் தமிழகத்திலும் செயல்பட தயாரிப்புகள் செய்து வருகிறது.

இதற்கு நான்கு வழிகளைப் பயன்படுத்துகிறது.
1. மக்களின் நிலங்களை விலைகொடுத்து வாங்குதல்.
2. அரசு மூலம் கையகப் படுத்துதல்.
3. சமூக கையகப்படுத்துதல்.
4. Public securement model

இந்த முறைகளைப் பயன்படுத்தி மக்களை இடம் மாற்றிக் குடியமர்த்தி காடுகளை மீட்டு யானைகளின் வலசைப் பாதையைச் செப்பனிடப் போகிறார்கள்.வேறொன்றுமில்லை. அதே மக்களும் விலங்குகளும் ஒன்றாக வாழ முடியாது என்ற விவகாரம்தான். காட்டிலிருந்து மக்களை வெளியேற்றும் அதே வேலைதான். யானையால் லட்சம் மரம் வாழ்கிறது, ஓடை வாழ்கிறது, உயிர் வாழ்கிறது வகையறா பிரசாரம் எல்லாம் இதற்குத்தான் பயன்படும்.

இந்த வைல்ட் லைஃப் டிரஸ்ட் என்பது International  fund for animal welfare, International union for the conservation of nature, Netherlanads, மற்றும் World land trust ஆகிய பன்னாட்டு என்ஜிஓக்களோடு இணைந்து செயல்படுகிறது.

காட்டிலிருக்கும் ஆசிரமங்களையும், சுரங்கங்களையும், அணைகளையும் வெளியேற்ற இந்த வழிமுறைகள் தேவையில்லையே? என்ஜிஓக்களின் ஒரே குறி விவசாயிகளும் பழங்குடிகளும்தானே! எனவே, கண்ணீரை மிச்சப்படுத்துவோம். பின்பு மக்களுக்காகச் சிந்த அது தேவைப்படும்.

(‘மிளிர்கல்’, ‘முகிலினி’, ‘செம்புலம்’ ஆகிய நாவல்களை எழுதியவரும்,‘ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்’ உள்ளிட்ட பல மொழிபெயர்ப்புகளைச் செய்திருப்பவருமான வழக்கறிஞர் இரா.முருகவேள், தன் முகநூல் பக்கத்தில் எழுதிய பதிவு இது)                
                    
இரா.முருகவேள்