COFFEE TABLE



ஃப்ரோஸன் பேபி

டோலிவுட்டில் பொங்கல் ஸ்பெஷலாக அல்லு அர்ஜுன் படம் வெளியாவதில் பூரிக்கிறார் பூஜா ஹெக்டே. புது வருஷத்தைக் கொண்டாட வியன்னா பறந்தவர், அடுத்து உறைபனி சீஸனில் மின்னும் ஆஸ்திரியாவில் சிறகடிக்கிறார். இனிய ஹாலிடே தருணங்கள் ஒவ்வொன்றையும் இன்ஸ்டாவில் தட்டிவிட்டு, லட்சக்கணக்கில் ஹார்ட்டின்களைக் குவிக்கிறார் இந்த ஃப்ரோஸன் பேபி.

பால் இயந்திரம்!

சில மாதங்களுக்கு முன் பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு பதிலாக மெட்ரோ டிக்கெட்டை இலவசமாகக் கொடுத்து அசத்தியது ரோம். இப்போது இங்கிலாந்தில் உள்ள ஆல்டர்னிஸ் வைல்டு டிரஸ்ட் என்ற நிறுவனம் பால் வழங்கும் இயந்திரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இயந்திரத்தின் வழியாக பால் வாங்குபவர்களுக்கு ஒரு கண்ணாடி பாட்டிலைத் தருகிறார்கள்.

அதில் நாம் பால் பிடித்துக்கொள்ளலாம். அந்தக் கண்ணாடி பாட்டிலைக் கழுவி மறுபடியும் மறுபடியும் பால் பிடித்துக்கொள்ளலாம். இதனால் பாலை பாக்கெட் செய்வதற்கான பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு குறைகிறது. இந்தத் திட்டம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

அழகி

‘பாலிவுட் நடிகைகளிலேயே அழகிப் போட்டிகளில் அதிகம் பங்கேற்று, பட்டங்கள் வென்றவர்’ என கெத்து காட்டுகிறார் ஊர்வசி ரவுட்டேலா.  ‘திருட்டு பயலே 2’ இந்தி ரீமேக் ஹீரோயின் இவர். இன்ஸ்டாவில் 22 லட்சம் ஃபாலோயர்ஸை வைத்துள்ளார். ஆனால், இந்த பேபியோ சிம்பிளாக 90 பேரை மட்டுமே பின்தொடர்கிறார். புது வருஷத்தை ஃபிரான்ஸில் கொண்டாடிய இவர், அந்த ஹேப்பி மொமண்ட்டை இன்ஸ்டாவில் பதிவிட்டு லைக்குகளை அள்ளியிருக்கிறார்.

சார்ஜர் கேமரா

நீங்கள் வெளியூர் செல்லும் நாட்களில் வீட்டைக் கண்காணித்துக் கொள்வதற்காக வந்துவிட்டது சார்ஜர் கேமரா.  போன் சார்ஜரைப் போல இருக்கும் இதை பிளக்-இன் செய்துவிட்டால் போதும், ஹெச்.டி. தரத்தில் வீட்டுக்குள் நடப்பதை ஒரு நொடி விடாமல் வீடியோ பதிவு செய்துவிடும்.

அதே நேரத்தில் இதை கேமரா என்று யாராலும் கண்டுபிடிக்க முடியாது. தவிர, போன் சார்ஜராகவும் இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம். விலை ரூ.1599லிருந்து ஆரம்பிக்கிறது.

தந்தையின் ஹெல்மெட்

ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ ருத்ரதாண்டவம் ஆடியது. தீயை அணைக்கும் போராட்டத்தில் பலர் உயிரிழந்தனர். அதில் தீயணைப்பு வீரர் ஆண்ட்ரூவும் ஒருவர். அவரது இறுதிச்சடங்கில் 19 மாதங்களே ஆன அவரின் மகள் சார்லட்டும் கலந்துகொண்டாள். அந்த பிஞ்சுக் குழந்தைக்கு தந்தையின் ஹெல்மெட்டை அணிவித்து கௌரவித்தனர். இந்தக் காட்சி இணையத்தை உலுக்கி எடுத்துவிட்டது.

குங்குமம் டீம்