705 கோடி பார்வைகள்!யூ டியூப்பில் அதிகமாக பார்க்கப்பட்ட வீடியோ என்ற சாதனையைப் படைத்திருக்கிறது ‘பேபி ஷார்க்’.

வெறும் 2.16 நிமிடங்கள் மட்டுமே ஓடக்கூடிய குழந்தைப் பாடல் இது. பிங்க்ஃபாங் என்ற கல்வி நிறுவனம் தயாரித்த இந்தப் பாடலை கொரியன், ஆங்கிலம் உட்பட 19 மொழிகளில் கேட்கலாம். குட்டி சுறா மீன்களுடன் குழந்தைகள் நடனமாடி பாடுவதைப் போல காட்சிகள் அனிமேஷனில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.

நான்கு வருடங்களுக்கு முன் யூ டியூப்பில் வெளியானபோதே இப்பாடல் வைரல் ஹிட் அடித்தது. அன்றிலிருந்து இடைவிடாமல் ஸ்ட்ரீமிங் ஆகிக் கொண்டே இருக்கிறது. ஸ்ட்ரீமிங் ஆன நேரத்தை கணக்கிட்டால் சுமார் 30 வருடங்கள் வரும்! இதுவரை 705 கோடி முறை பார்க்கப்பட்டுள்ள இந்தப் பாடலின் மூலம் தயாரிப்பு நிறுவனத்திற்கு 37 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. கடந்த வாரம் வரை யூ டியூப்பில் அதிகமாக பார்க்கப்பட்ட வீடியோவாக ‘டெஸ்பாஸிடோ’ என்ற பாடல் இருந்தது.

த.சக்திவேல்