மன ஆரோக்கியத்துக்கு ஃபிட்னஸ் முக்கியம்!



‘‘சரியான உடற்பயிற்சி செய்யாததால் ஃபிட்னஸ் பலவீனமடைந்து மனச்சோர்வும் கவலையும் உண்டாகிறது...’’ என்று அதிர்ச்சியளிக்கிறது லண்டனைச் சேர்ந்த மருத்துவ நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்று. 40 முதல் 69 வயதுக்குட்பட்ட 1,52,978 பேரிடம் நடத்தப்பட்டிருக்கிறது இந்த ஆய்வு.
ஒரே மாதத்தில் செய்யப்பட்ட ஆய்வு அல்ல இது. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களை ஏழு வருடங்களாக கண்காணித்து, பலமுறை பகுப்பாய்வு செய்து முடிவை வெளியிட்டிருக்கின்றனர்.

ஒரு நாள் கூட விடாமல் உடற்பயிற்சி செய்தால் மனச்சோர்வு வராதா என்று கேட்கலாம். நிச்சயமாக மனச்சோர்வும், கவலையும் வரும். ஆனால், உடற்பயிற்சி செய்யாத 100 பேரில் 98 பேருக்கு மனச்சோர்வும், 60 பேருக்கு கவலையும் 81 பேருக்கு மனரீதியான பிரச்னைகளும் உண்டாகிறது என்றால் உடற்பயிற்சி செய்து ஃபிட்னஸை பராமரிக்கும் 100 பேரில் 50 பேருக்குத் தான் இந்தப் பிரச்னைகள் வருகிறது. அதுவும் ஆபத்து குறைவாக.     

த.சக்திவேல்