வலைப்பேச்சு



@M. Senthil Kumar  ஒரு மாசமாச்சி, மறுபடியும் இன்னைலேர்ந்து வேலைக்கு போகணும். காலையிலேயே பளிச்னு சேவிங் பண்ணியாச்சி. காலங்காத்தால குளிக்கிறதுங்கிறதே மறந்து போச்சே. தண்ணி என்ன இவ்வளவு சில்லுனு இருக்கு.இந்த வெய்யக்காலத்திலும் நடுங்கிக்கிட்டே குளிக்கிறது நல்லாதான் இருக்கு. குளிச்சிட்டு வந்து தேடுனா, டிரெஸ்லாம் செல்ஃப்ல இருக்கு. பனியன் கூட கிடைச்சிடுச்சி. ஆமா இந்த ஜட்டிய எங்க வச்சேன்?!

@நிலா நிலவழகி  ஒரு நீண்ட முத்தத்தில் முதலில் விலகுவது பெண்ணாக இருப்பதில்லை.

@Gokul Prasad  Shoot your shot என்கிற டேட்டிங் குழுமத்தில் ‘flirt செய்வது எப்படி?’ என்பதைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்பதாகத் தகவல் வந்தது. ‘ஊரடங்கு நாட்களைப் பயனுள்ள வகையில் கழிக்கும் விதமாகப் புதிதாக எதையாவது கற்றுக்கொள்வோமே’ என்கிற ஆர்வத்தில் இணைந்தால் ‘நான் செகண்ட் டோஸ் வாக்சின் போட்டுட்டேன். நீங்க எப்ப போடுவீங்க?’ என்று ஆளாளுக்குக் குசலம் விசாரித்துக்கொண்டிருக்கிறார்கள். நான் சேர்வதற்கு முன்பு வரை ஜாலியாகத்தான் போய்க்கொண்டிருந்ததாம். இடையில் ஒருத்தி புகுந்து பேச்சைத் திசைதிருப்பி விட்டாளாம். அடியே… மோசக்காரி!

@Lakshmanasamy Odiyen Rangasamy  கோவிட்டால் கணவனை இழந்த பெண்கள், மனைவியை இழந்த ஆண்கள் என சரியான  எண்ணிக்கையும் விவரமும் கிடைக்கும்போது மனச் சமநிலை குலைந்துபோகும்.யாரேனும் இந்த விவரங்களை வைத்திருக்கிறார்களா?

@இந்திரா கிறுக்கல்கள்  சமைக்கிறதுக்கு ஒரு மணி நேரம் போதும். ஆனா, என்ன சமைக்கலாம்னு முடிவெடுக்கத்தான் மூணு மணி நேரம் யோசிக்க வேண்டியிருக்கு.
நைட்டுக்கு என்ன டிபன் செய்யலாம்?அட முதல்ல லன்ச்சை தின்னுதொலைங்கடா!

@Ganesh Bala   எனதுஇனிய நண்பர்கள் சுரேஷ், பாலா இணைந்து சுபாவாக இரட்டை எழுத்தாளர்கள் என்ற பெயர் பெற்று எழுதுவதைப் படித்திருப்பீர்கள். இவர்களைப் போல அந்த நாளில் பாலு பிரதர்ஸ் ஓவியர்கள். இரட்டை ஓவியர்கள். வரைந்தது பாலுவாக இருந்தாலும், சீனுவாக இருந்தாலும் ஓவியத்தில் பெயர் பாலு பிரதர்ஸ்தான்.

@Bogan Sankar  இன்றுதான் கவனித்தேன். நாம் இறந்து போய்விட்டால் நமது முகநூல் கணக்கை என்ன செய்யலாம் என்று முகநூல் சில தெரிவுகளைக் கொடுத்திருக்கிறது.
ஒருவர் சொத்தை எழுதி வைப்பது போல் தனது பிரியமானவர்க்கு தனது முகநூல் கணக்கையும் எழுதி வைக்கலாமாம். அவர் நமக்கான அஞ்சலிகளுக்கு நன்றியோ, செத்துப்போன பிறகு நம் மீது வைக்கப்படும் அவதூறுகளுக்கு பதிலோ சொல்லலாம்.நான் என் மகனிடம் சொல்லலாம் என்று நினைத்தேன்.

ஆனால், this day in memory என்று ஒவ்வொரு நாளும் ஃபேஸ்புக் அவனிடம் காண்பிக்கும் அல்லவா? அது அவனுக்கு ஒரு வேதனையாகவோ, தன் தனிப்பட்ட வாழ்க்கையைத் தொடர முடியாத தடையாகவோ இருக்கக்கூடும்.இறந்த பிறகும் நான் இறந்தது தெரியாமல் என்னுடன் சிலர்  பேச விரும்பக் கூடும்தான். இன்னும் சிலர் என்னைப் பற்றிய மதிப்பீடுகளை மாற்றிக் கொள்ளக்கூடும். நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ. எனக்கு ஒரு கணம் வியப்பு ஏற்பட்டது. வாழும்போதும் வாழ்க்கை முடிந்த பிறகும் கூட கடவுள்கூட வழங்காத சில வாய்ப்புகளை ஃபேஸ்புக் எனும் ஒரு app  வழங்குகிறது!மார்க் சக்கர்பெர்க்! சலாம் சகாவே!

@Subathra L  ஏய்... அம்மா ஆஃபீஸ்லருந்து mail வந்திருக்கு உங்களுக்கெல்லாம்.
எங்களுக்கா? எங்க வாசிங்க...
ம்...

பச்சைக்கிளி ஆபீஸுக்கே சென்று வேலை பார்ப்பதாகப் பாவித்து டீ உள்ளிட்ட பகல் நேர வஸ்துகளை நீங்களே பார்த்துக் கொள்ளவும். முடிந்தால் அவருக்கும் போட்டுத் தரவும்...
அப்டினு போட்ருக்குப்பா. ஆமா.

@SundarrajanG  இந்தியா போன்ற நாடுகளில், தண்ணீர் சுமப்பதற்காக பெண்கள் தங்களுடைய வாழ்நாளில் சுமார் 14,000 கி.மீ தூரம் நடக்கிறார்கள்.

@Umanath Selvan  வீட்டைக்கட்டிப்பார் கல்யாணம் செய்து பார்ரெண்டு பசங்களை ஆன்லைன் கிளாசில் உட்கார வைத்துப்பார்!

@Uzhavan Navaneetha Krishnan  ‘இந்த மேம் வரணும்; இந்த மேம் வரக்கூடாது’ என்கிற வேண்டுதல்களோடு இந்த ஆண்டுக்கான ஆன்லைன் வகுப்புகள் இன்று ஆரம்பமாகின.

@Umanath Selvan  டூட் என்ன தேட்றீங்க?
இந்த லீவ் சைலன்ட்லி பட்டன்...
அடேய்! இது க்ளையன்ட் கான்ஃபரன்ஸ் கால்டா!

@manipmp  முட்டைக்கோஸ் பொரியல் என்பது கருப்பு பேன்ட் மாதிரி... எல்லா சாப்பாட்டுக்கும் மேட்ச் ஆகிரும்!

@இரா.ச.இராச வேல்.  முன்னோர்கள் எல்லாம் முட்டாள்களில்லை! மைதானத்துக்குப் போக வெட்கப்படுற என்னை மாதிரி ஆட்களுக்காகவே கண்டுபிடிக்கப்பட்ட மைதானம்.

@queentwtz  நட்பு ஒரு புத்தகம் போன்றது, அதை நிமிடங்களில் அழித்து விடலாம்... ஆனால், அதை எழுத ஆண்டுகள் ஆகும்!

@Ilango Krishnan  இங்க ஃபேஸ்புக்ல இருக்க மாதிரியே கிளப்ஹவுஸ்லயும் இருப்பேன்னு நினைச்சுட்டு அங்க வராத... அங்க நான் ரணகளமா இருப்பேன்.

@RajarajanRj  ஸ்டாலினை சுத்தி இருக்கறவங்க அறிவாளிகள்னு நம்ம இன்டலக்சுவல்ஸ் சொல்றது மறைமுகமாக முதலமைச்சரை மட்டம் தட்டுவதற்காகத்தான்.மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் மிகச்சிறந்த முதல்வர் என காலம் உணர்த்தும். அப்போதும் நம்ம இன்டலக்சுவல்ஸ் Creditsஐ தூக்கி வேறு யாருக்காவது கொடுப்பார்கள். அவ்ளோ வெறி.

@ItsJokker  எல்லாருக்கும் இனிமே வேக்ஸின் ஃப்ரீ.
வாவ், சூப்பர் தலைவா...
ஆனா, பெட்ரோல் ரேட் இனிமே 120 ரூ..!

@thoatta  எதை வேணா
பேச சொல்லு... ஆனா, அழுகுற மாதிரி மட்டும் நடிக்க வேணாம்னு சொல்லு...
#மாலை பிரதமர் உரை  செய்தி

@Rishaban Srinivasan  ஏற்கப்படுவதும் நிராகரிக்கப்படுவதுமான துலாக்கோல் வாழ்க்கை. காய்கறிக்குள்ள அதே விதி. எடுத்து வைத்த வெண்டைக்காய்களில் நாலைந்து எடை கூடுதல் என்று வெளியேற்றப்படும். என் வீட்டிற்கு வரப் போவதாய் ஆசையாய் கூடைக்குள் வந்தவை. கூடைப்பூவில் எந்த இடத்தில் துண்டிக்கப்படும் என்று தெரியாமல் சரம் இரு கை இணைப்பில் ஆடும். ரெண்டு முழம் குடும்மா என்றதும் துண்டிக்கப்பட்டு சற்று முன் வரை ஒரு கூடைப் பூக்களாய் இருந்தவை திசை பிரியும்.

ஓடும் நதியில்... ஆழக் கிணற்றில்... எந்தத் தையலும் இல்லாமல் ஒட்டியிருந்த நீரை ஒரு சொம்பில் முகர்ந்து எடுத்ததும்... போய் வா என்று சொல்லக் கூடத் தோன்றாமல் அமைதியாய் நிற்கும் தண்ணீர்.அறிமுகமாகி... புன்னகைத்து... பேசி... இனி என்னோடு பேச வேண்டாம் என்று நீயும் சொல்கிறாய்.இயற்கை எனக்கொரு பாடம் ஏற்கெனவே புகட்டி வைத்திருக்கிறது... என் போக்கில் போக.நல்லா இருன்னு நீயும் நானும் சொல்லிக்கொள்வோம். சரியா.

@Kaalachakram Narasimmaa Tan  சென்னை நகரம் வள்ளுவரின் மனையாள் வாசுகியைப் போன்று, பின் தூங்கி முன் எழுபவள். ஊரடங்க இரவு பன்னிரண்டு ஆகும். விடியல் ஐந்து  மணிக்கெல்லாம், பால் மற்றும் காய்கறி வியாபாரிகள், பேப்பர் போடுபவர்கள், ஆலயத்திற்கு செல்பவர்கள், வாக்கிங் செல்பவர்கள் என்று சென்னை சுறுசுறுப்பு அடையும்.
பெங்களூரு நகரம்தான் குளிர் காரணமாக முன்  தூங்கி பின் எழும். எட்டுமணிக்குப் பிறகு கூட, தலையில் மஃப்ளர், உடலில்  ஸ்வெட்டர் அணிந்தவர்கள் கண்களில் படுவார்கள்.

ஆனால், கொரோனா  லாக்டவுனுக்குப் பிறகு சென்னை வாசுகி வெறும் சுகியாக மாறிவிட்டாள் என்று நினைக்கிறேன். எட்டுமணி ஆகியும், பொழுது விடிந்ததற்கான அறிகுறியே இல்லை.
வீட்டில்தான் இருக்கப்போகிறோம் ! எப்ப எழுந்தால் என்ன என்கிற மனோபாவம் அனைவருக்கும் வந்துவிட்டது. கொரோனா போனாலும், சென்னையின் பழைய சுறுசுறுப்பைக் காண முடியுமா என்பது  சந்தேகமாக உள்ளது.

@Varavanaisen  இவ்வளவு பயம் இருக்கிற கோபாலு ஏன் வெள்ளையடிக்க வரணும்!

@Ramanujam Govindan  18 ++ டாக்டர்! வீரமே இல்லை. என்ன செய்ய?
சே குவாரா, நெப்போலியன் வரலாறு படிங்க. இல்லை வைகோ, சீமான் வீடியோவெல்லாம் பாருங்க!!அதில்லை டாக்டர்! கல்யாணம் ஆன புதுசில் இருந்த வீரம் இப்ப இல்லை.அது எல்லாருக்கும் கல்யாணம் ஆயிட்டாலே அப்படித்தாம்பா. அமைதியா ஆயிடுவோம்... எனக்குக்கூட அப்படித்தான்.

அதில்லை டாக்டர். உடம்புல வீரமே இல்லை.
ஓ! அதைச் சொல்றீங்களா? அது வீரியம்ங்க!!
 தாறுமாறு தமிழ்

@நிரஞ்சனா  இது காலம்... மேட்ரிமோனி column..!

@kumarfaculty  தடுப்பூசி போட்ட பிறகு எதிர்ப்பு சக்தி அதிகமாகி இருக்குனு எதை வைத்து சொல்றிங்க?
நேற்று என் மனைவியை பெயர் சொல்லி கூப்பிட்டேனே!

@சசி தரணி  மா அரவேக்காடு  வேணும் எனக்கு...
அரவேக்காடா..?
Half boil மா!

@Indira Prabhakaran  இப்படிக்கா படிக்கணுமா அப்படிக்கா படிக்கணுமா?