வலைப்பேச்சு



@imemyselfkarthi - இம்புட்டு சம்பாரிச்சு என்ன பிரயோஜனம்... சரக்கடிக்க ஒரு வெள்ளி டம்ளர் வாங்க முடியலையே, ப்ச்!

@Manoharan Thangavel - ஆணுக்கு பொதுவாக காதலி / மனைவியின் சகோதரிகள், தோழிகள் மீது ஓர் அக்கறை, பாசம் இருக்கத்தான் செய்யும். இதையெல்லாம் பெரிது படுத்தாதீர்!

@Tazhasugumar - எப்படி உழைக்கத் தெரிந்தவனிடம் நிறைய காசு இருப்பதில்லையோ அதேபோல் வாழத் தெரிந்தவனிடம் நல்ல வாழ்க்கையும் இருக்காது போல.

@Saravanakarthikeyan Chinnadurai - மின்தொழில்நுட்பங்கள் நம் வாழ்வை அளவுக்கு மீறி பாதிக்க ஆரம்பித்து விட்டன. உதாரணமாக, சிலர் பழக்க தோஷத்தில் முதலிரவில் ம்யூட் பட்டன் தேடி இருக்கிறார்கள்.

@Kannan_Twitz - சும்மா எனக்குத்தான் எல்லாம் தெரியும்னு ஆடக்கூடாது... காலையில எழுந்தாத்தான் நைட்டு எப்போ தூங்குனோம்கிறதே நமக்கு தெரியும்! அவ்வளவுதான் வாழ்க்கை!!!

@prabhu65290 - தலைவரே... நிறைய பேர் வீடியோ ரிலீஸ் ஆகி இருக்கு, உங்க வீடியோ எப்போ ரிலீஸ் ஆகும்னு தொண்டர்கள் கேக்கறாங்க...

@Kannan_Twitz - இந்த அன்பு, பாசம், நேசம், நட்பு இதெல்லாம் கொடுக்க எப்போதும் ஆள் இருக்கும்... ஆனா, காசு இல்லைனா கொடுக்க ஒருத்தனும் இருக்கமாட்டான். சோ, முதல்ல சம்பாதிக்கணும்! ஓரளவுக்காச்சும்!!

@Shobana Narayanan - மகன்: மா... எங்க ரெண்டுபேர்ல ( மகனும் மகளும்) யார் அழகு சொல்லு..?
மீ: ஒங்கப்பாதான்டா அழகு...
மகள்: டேய் ஒண்ணு வைடா இந்த அம்மாவ...
மகன்: சரிம்மா. அப்பா அழகுதான். அடுத்து யார் அழகு சொல்லு..?
மீ: அடுத்தது நாந்தான் அழகு...
மகள்: டேய் ரொம்ப வெறுப்பேத்துறாடா... அடிச்சிரலாம்டா...
மகன்: இருடி... இருடி... சரிம்மா. அப்பாக்கு அப்புறம் ஒனக்கு அப்பறம் எங்க ரெண்டுபேர்ல யார்தான்மா அழகு..?
மீ: விஜய் சேதுபதிதான்டா அழகு...
கணவர்: டேய்... வாய்லயே அடிடா அவளை..!
மை மைண்ட் வாய்ஸ்: நீ் போனைத்தானே மேன் நோண்டிட்டிருந்த... டக்குனு அட்டெண்டன்ஸ் போடறியே..!

@prabhu65290 - 1000 கோடி பணம் வெச்சிருக்கறவங்க அறிவுரை சொன்னாதான் அது மற்றவர்கள்கிட்ட போயி சேருது...
ஆமா அவர் என்ன அறிவுரை சொன்னார்..?
பணம் மட்டும் நிம்மதியைத் தராதுன்னு..!

@ItsJokker - பிஜேபியன்ஸ்  பேசுறத ஒட்டுக் கேட்க எங்ககிட்ட ‘பிகாசஸ்’ ஆப் இருக்கு.
- எங்ககிட்ட வீடியோ கால் ரெக்கார்ட் பண்ற ஆப்ஷன் இருக்கு...

@iam_nithankrish - எல்லா பிட்டு பட வெப்சைட்டயும் தடை செஞ்சுட்டு, நீங்களே வீடியோ ரிலீஸ் பண்ணிட்டு இருக்கீங்க... யார்ரா நீங்கலாம்?

@Bogan Sankar - உருவத்தில் என்னை மாதிரியே இருக்கிற டிரைவர், டாக்டர், பேஷன்ட், மாடு மேய்ப்பவர், சர்வர், எழுத்தாளர், கலெக்டர், நடிகர் எல்லோரையும் பார்த்துவிட்டேன். என்னை மாதிரியே இருக்கும் நடிகையையும் பார்த்துவிட்டால் காதலில் விழுந்துவிடுவேன்.

@Vinayaga Murugan - வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் ஆலிவ் ஆயிலுக்கு 5% ஜிஎஸ்டி. உள்நாட்டில் உற்பத்தி செய்யும் தேங்காய் எண்ணெய்க்கு 18% ஜிஎஸ்டியா? என்ன மேடம் லாஜிக் இது? பீட்சாவுக்கு 5% ஜிஎஸ்டி; கடலைமிட்டாய்க்கு 18% ஜிஎஸ்டி போட்டோம் இல்லையா? அதே லாஜிக்தான். ஸ்விக்கி, ஸோமோட்டோ பற்றி கேளேன்...
எதுக்கு வம்பு? ஏற்கனவே ஹோட்டல்ல ஏன் சாப்பிடுறீங்க... வீட்ல சாப்பிட்டா என்ன கேடுன்னு கேட்டீங்க. அதுக்கே நாங்க நாக்கை பிடுங்கிக்கிட்டு சாகலை!

@amuduarattai - அடுத்த 3 ஆண்டில் ரயில்வேயில் 50,000 பேருக்கு தொழில் திறன் பயிற்சி - ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைணவ்.அடுத்த 3 ஆண்டுகள் வரை ரயில்வே துறை இருக்குமான்னே தெரியல.

@sultan_Twitz - திமுகவை வீழ்த்த பலமான கூட்டணி தேவை - கரு.நாகராஜன்
பலமான கூட்டணின்னா... TMT முறுக்கு கம்பியை சேர்த்துப்பியா?!

@Sen Balan - பழைய காலத்தில் ஒரு முழுப்படத்தையும் திரும்பத் திரும்ப பார்ப்பாய்ங்க. அப்புறம் காலம் மாறுன பிறகு, முழுப் பாட்டையும் திரும்பத் திரும்பத் திரும்ப கேட்டாய்ங்க. இப்ப என்னன்னா 20 செகண்ட் கட் பண்ணி வச்சு திரும்பத் திரும்ப ஓட விடுறாய்ங்க.

@Ramanujam Govindan - Dad’s little princess எனத் தகப்பன் செல்லம் கொடுத்து வீட்டு வேலையே செய்யத் தெரியாத பெண்களைப் பற்றிய ஜோக்குகளை நகைச்சுவை என்ற அளவில் ரசிக்கலாம். ஆனால், நிஜத்தில் Mom’s little prince எனத் தாய்மார்களால் ஒரு வீட்டு வேலைகூட செய்யத் தெரியாமல் வளர்க்கப்பட்டு, திருமணத்துக்குப் பிறகு மனைவி சொன்னாலும் தாய்மார்களால் ஏற்றுக் கொள்ள முடியாமல் இருக்கும் ஆண்களே அதிகம்!

@athisha - ஏழையாக இருப்பது அழகானது, குடிசை வீடு மகத்தானது, சைக்கிள் ஓட்டுவது சுகமானது, அதுதான் அருமையான வாழ்வு... என்று சொல்லிக் கொடுக்கிற பணக்கார அறிஞர்களிடம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். அடிமைகளை அடிமைகளாகவே வைத்திருக்கிற அடிமை வாழ்வை Glorify பண்ணுகிற யுக்திகளில் ஒன்று அது.

@Senthilvel79 - GSTக்குள் உள்ள சிலிண்டர் விலை தாறுமாறாக உயரும் போது, பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வந்தால் விலை குறையும் என்பது ஏமாற்று வேலை.

@Bilal Aliyar - கை சின்னம் வேணா காங்கிரஸ்காரங்களோடதா இருக்கலாம்... ஆனா, அதை கரெக்டா யூஸ் பண்றவங்க பாஜககாரனுங்கதான்..!

@Abdul Hameed Sheik Mohamed - இந்த இருபதாண்டுகளில் செல்போன்களின் பரிணாம வளர்ச்சி படு பயங்கரமானது. பத்து வருடத்திற்கு முன்பு வந்த செல்போன்கள் அதற்குள் புராதனச் சின்னம்போல இருக்கின்றன. ஒன்றைக் கவனித்தேன். பத்து வருடங்கள் முந்தைய செல்போன்கள் பெரும்பாலானவை க்யூட்டாக உள்ளங்கையில் வைத்து மூடிக்கொள்ளலாம் போல அவ்வளவு சிறியவையாக இருக்கின்றன. இப்போது ஹையர் எண்ட் போன் என்றாலே பலகை பலகையாக இருக்கிறது.

அந்தக் கால சோனி எரிக்ஸன் மாடல் எல்லாம் வெகு அழகு. யாராவது பத்து வருடங்களுக்கு முந்தைய பீரியாடிக் படம் எடுத்தால் என் நண்பரை அணுகலாம். அவர்தான் இந்த பழைய மாடல்களை எல்லாம் சேகரித்து வைத்திருக்கிறார். பத்து வருடம் எல்லாம் பீரியாடிக்கா என்று திகைக்காதீர்கள். மூன்று வருடங்களுக்கு ஒருமுறை இப்போதெல்லாம் தலைமுறையே மாறுகிறது. அப்போது 2 ஜிதானே..? வீடியோ கால் எல்லாம் பேசி சந்தி சிரிக்காத பொற்காலம்.