ஸ்கை டைவிங் மேக் அப்!



இன்ஸ்டாகிராமில் 1.30 லட்சத்துக்கும் அதிகமான ஃபாலோயர்களுடன் வலம் வரும் பிரபலம், மெக்கென்னா நைப். அந்தரத்தில் இருந்து குதித்து சாகசம் செய்யும் ஸ்கை டைவிங் விளையாட்டில் ஜாம்பவான் இவர்.
வெறுமனே ஸ்கை டைவிங் மட்டும் செய்யாமல், டைவிங்கின்போது ஏதாவது வித்தியாசமாக செய்து அசத்துவார். அத்துடன் அதை வீடியோவாக்கி இன்ஸ்டாவில் தட்டிவிட, எல்லா வீடியோக்களும் வைரலாகிவிடும்.

ஒரு மாதத்துக்கு முன்பு ஸ்கை டைவிங்கின்போது குளிர்பானத்தைக் குடித்து அப்ளாஸை அள்ளினார். கடந்த வாரம் ஸ்கை டைவிங் செய்துகொண்டே, 10 ஆயிரம் அடி உயரத்தில் மிதந்துகொண்டே தனது முகத்துக்கு மேக் அப் போட்டிருக்கிறார்.

இப்படி ஸ்கை டைவிங்கின் போது மேக் அப் செய்வது இதுதான் உலகில் முதல்முறை. இதை வீடியோவாக்கி இன்ஸ்டாவில் தட்டிவிட, 5 லட்சத்துக்கும் அதிகமாக பார்வைகளை அள்ளிவிட்டார் மெக்கென்னா. பூமியில் செய்யக்கூடிய ஒவ்வொன்றையும் ஸ்கை டைவிங்கின் போது செய்ய வேண்டும் என்பதுதான்அவரது லட்சியம்.

த.சக்திவேல்