இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் இசையமைப்பாளர்!
ஏ.ஆர்.ரஹ்மான் என்றுதானே சொல்ல நினைக்கிறீர்கள்..?
உண்மைதான். இந்திய சினிமாவில் ‘அதிக சம்பளம் வாங்கிய’ இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்தான். அப்படியானால் ‘அதிக சம்பளம் வாங்கும்’ இசையமைப்பாளர்..?
சாட்சாத் அனிருத் ரவிச்சந்திரன்தான்!  ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வாய்ப்புகள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தாலும், அவர் எல்லாவற்றையும் ஒப்புக்கொள்வதில்லை. ஸோ, ரஹ்மான் படங்கள் முன்பு போல் இப்போது அதிகம் வெளிவருவதில்லை. அனிருத்தின் சம்பளம் கிடுகிடுவென உயர்வதற்கு மூன்று காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. முதல் காரணம், அடுத்தடுத்த ஹிட் படங்களும், தமிழ் சினிமா என்ற எல்லையைத் தாண்டி இவரது டியூன்கள் பெரும் வரவேற்பைப் பெறுவதும்; அடுத்து, இன்றைய இளசுகளின் மனத்திற்கேற்ற பாடல்கள்; மூன்றாவதாக, சினிமாவைத் தாண்டி மேடை நிகழ்ச்சி களில் மாஸ் காட்டுவது...இதனால்தான் அனிருத்தின் மார்க்கெட் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது என்கிறார்கள்.32 வயதில் இன்று 10 கோடி சம்பளம் வாங்கும் இசையமைப்பாளராகி இருக்கிறார் அனிருத். பாலிவுட்டில் ‘ஜவான்’ மூலம் அடியெடுத்து வைத்திருக்கும் அனிருத்திற்கு இப்போது ஏறுமுகம் என்கிறார்கள்.
காம்ஸ் பாப்பா
|