சிவகார்த்திகேயன் ஜோடி ஸ்ருதிஹாசன்?
அப்படித்தான் பேச்சு அடிபடுகிறது. ‘மதராஸி’, ‘பராசக்தி’யைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கப் போகிறாராம். இப்படத்தில்தான் எஸ்கேக்கு ஜோடி ஸ்ருதிஹாசனாம்.தனுஷ், ஸ்ருதிஹாசன் நடித்த ‘3’ படத்தில்தான் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார் சிவகார்த்திகேயன். இப்போது ஸ்ருதிஹாசன் ஜோடியாகவே நடிக்கப்போகிறார் என்பதுதான் லேட்டஸ்ட் கோடம்பாக்கம் டாக்.
 விரைவில் இதற்கான அதிகார பூர்வ தகவல் வர உள்ளது. படத்தை தயாரிப்பது யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.கடந்த ஆண்டு உருவான ஆல்பத்தில் லோகேஷ், ஸ்ருதிஹாசன் இணைந்து நடித்தனர். அப்போது லோகேஷ் கனகராஜ் ஹீரோ ஆகப்போகிறார்... அதில் ஸ்ருதிஹாசன் ஹீரோயின் என பேசப்பட்டது. இப்போது திடீர் திருப்பமாக இந்தப்படம் குறித்த பேச்சு கிளம்பியுள்ளது.
காம்ஸ் பாப்பா
|