கண்மணி ஹன்சிகா!



Untitled Document



விலையேற்றம் செய்யாமல் அழகிய 2012 காலண்டரை அன்பளிப்பாகத் தந்த உங்கள் ஞாபகம் ஆண்டுமுழுவதும் எங்களுக்கு இருக்கும்.
- வெ.லட்சுமி நாராயணன், வடலூர்.


பிளாட்பாரவாசிகளின் நல்வாழ்வுக்கு அரசு உதவி செய்ய வேண்டும் எனும் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலுக்கு மாநில அரசுகள் செவிசாய்க்க வேண்டும்.
- சி.மகேஷ், சென்னை-83.
 
வேற்று மதத்தின் புனித நூலை சரி வரப் புரிந்துகொள்ளாமல் போர்க்கொடி உயர்த்தும் ரஷ்ய கிறிஸ்துவ அமைப்புக்கான பதிலடி, கட்டுரையின் கடைசியில் உள்ள ஒற்றை வரிதான்!
 
 
- உமா மோகன்தாஸ், திண்டுக்கல்.


2012ம் ஆண்டின் கனவுக்கன்னியாக ரசிகக் கண்மணிகள் இதய சிம்மாசனத்தில் வெற்றி பெற்றிருக்கும் கண்மணி ஹன்சிகாவுக்கு புன்னகையுடன் ஒரு பூங்கொத்து!
 
- ந.பேச்சியம்மாள், கடலூர்-1. 


தமிழ்ப் படவுலகை ஆரோக்கியமான அடுத்த களத்துக்குக் கொண்டு செல்லும் ‘மௌனகுரு’ போன்ற நல்ல படங்களை மனம்திறந்து பாராட்டும் உங்கள் விமர்சனம், கலைஞர்களுக்கு உற்சாக டானிக்!
 
- எம்.சம்பத், கரூர்.
 

பழநிபாரதியின் ‘காற்றின் கையெழுத்து’ மூலம் திரு.வி.க., மகாகவி பாரதி, புதுமைப்பித்தன் போன்றோர் மொழிக் காதலோடு இல்லறம் நடத்திய விதம் அறிந்து வியந்தேன்!
 
 
- பி.ஆர்.மயிலப்பன், ஈரோடு.>


தமிழ்நாட்டு மக்களுக்கு நிறைய செய்ய வேண்டும் என்கிற எண்ணம் ரஜினிக்கு இருக்கிறது என்பது தெரிந்த விஷயம்தான். ஒரு நாட்டின் பிரதமர் மனது வைத்தால் 2 மணி நேரத்தில் முல்லைப் பெரியாறு பிரச்னையைத் தீர்த்து வைத்து விடமுடியும். அவருக்கு ஏன் செய்ய மனம் வரவில்லை என்பது இந்து மக்கள் கட்சிக்குப் புரிய வேண்டும். ரஜினியை மாட்டி விட வேண்டாம்... ப்ளீஸ்!
 
- விஜி.சத்தியநாராயணன், சென்னை-61.
 

அம்பேத்கர் சிலைகள் செய்வதை தனது பிறவிப்பயனாகக் கருதி செயலாற்றி வரும் சிவானந்தத்தின் பொதுப்பணி சிறப்படைய அமைப்புகளும் கட்சிகளும் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
 
- எஸ்.மந்திரமூர்த்தி, புதுச்சத்திரம்.
 

ஜல்லிக்கட்டுக்கான மல்லுக்கட்டு இந்த ஆண்டும் அரங்கேறி வரும் பின்னணியை ‘ஆக்ஷன்’ படங்களுடன் படு அசத்தலான கட்டுரையாகத் தந்து அசத்திட்டீங்க!
 
 
- இரா.வளையாபதி, கரூர்.


நான்கு கால்கள் இருந்தால் மட்டுமே நடக்கக்கூடிய பன்றி, தன் ஊனத்தைப் பெரிதாக நினைத்து ஒதுங்காமல் இரண்டு கால்களால் நடக்கப் பழகியதென்றால், அந்த தன்னம்பிக்கை மனிதர்களுக்கும் வர வேண்டும்!
 
 
- எம்.ஜி.பரத், திண்டுக்கல்