தத்துவம் மச்சி தத்துவம்





எங்க இட்லி ‘மல்லிகைப் பூ மாதிரி இருக்கும்’னு ஓட்டல் நடத்தறவர் சொல்லலாம்; எங்க மல்லிகைப் பூ ‘இட்லி மாதிரி இருக்கும்’னு பூக்கடை நடத்தறவர் சொல்ல முடியுமா?
- சாம்பார் குளத்தில்
இட்லியை மூழ்க வைத்து ருசித்துக் கட்டுவோர் சங்கம்
- வி.சி.கிருஷ்ணரத்னம், காட்டாங்குளத்தூர்.

என்னதான் பெரிய எழுத்தாளரா இருந்தாலும், டீக்கடைக்கு போனா லைட் டீ. ஸ்டிராங் டீ மட்டும்தான் குடிக்க முடியும்; ‘ராயல்டி’யை குடிக்க முடியாது!
- ஞானபீட விருது வாங்கும்
அளவுக்கு ஞானமில்லாதோர் சங்கம்
- பர்வீன் யூனுஸ், சென்னை-44.

‘‘கட்சி ஆபீசுக்கு ஏன் சினிமா டைரக்டர் வந்திருக்கார்..?’’
‘‘மகளிர் அணித்தலைவிய தலைவர் எப்படி காதல் பார்வை பாக்கணும்னு டைரக்ட் பண்ண வந்திருக்காராம்..!’’
- அம்பை தேவா, சென்னை-116.

‘‘எங்க வீட்ல திருடினவன் தெலுங்குல பேசினான்னு சொன்னதும் ரொம்ப அதிர்ச்சி ஆயிட்டீங்களே... ஏன் இன்ஸ்பெக்டர்?’’
‘‘மாமூல் வாங்க ஆந்திரா வரைக்கும் போயாகணுமே! அதை நினைச்சுத்தான்...’’
- மு.மதிவாணன், அரூர்.

‘‘கூட்டணிக் கட்சி நடத்துற உண்ணாவிரதப் போராட்டத்துல கலந்துக்கப் போன நம்ம தலைவர் ஏன் கோவிச்சுக்கிட்டு வந்துட்டாரு..?’’
‘‘அவரை ‘சாப்பிடறீங்களா’ன்னு யாரும் கேட்கலையாம்..!’’
- எஸ்.எஸ்.பூங்கதிர், வில்லியனூர்.

‘‘சோறு கண்ட இடம் சொர்க்கம்னுதானே சொல்லுவாங்க... நீங்க என்ன நரகம்னு சொல்றீங்க?’’
‘‘என் மனைவி பண்ற சமையலைச் சொன்னேன்..!’’
- வி.சாரதி டேச்சு, சென்னை-5.

‘‘தலைவர் சினிமா பார்த்து ரொம்பக் கெட்டுப் போயிட்டார்...’’
‘‘ஏன்... என்னாச்சு?’’
‘‘ரெய்டுக்கு வந்த சி.பி.ஐ. ஆபீசர்களை மயக்கறதுக்கு கவர்ச்சி நடனம் ஏற்பாடு பண்ணியிருக்கார்!’’
- அ.ரியாஸ், சேலம்.