நயம்படபேசு





இனி இந்தியாவுல ஒவ்வொரு குடும்பத்துக்கும் வருஷம் ஆறு கேஸ் சிலிண்டர்கள்தான் மானிய விலையில் கிடைக்கும்னு அரசாங்கம் கட்டுப்பாடு விதிச்சிடுச்சு. அடுத்து ஒவ்வொரு இந்தியனும் ஒரு நாளுக்கு நூறு மில்லி தண்ணிதான் பயன்படுத்தணும்; மூணு வேளையும் சேர்த்து 30 கிராம் உணவுதான் சாப்பிடணும்; சாம்பார், ரசம் எல்லாம் இங்க் ஃபில்லர்லதான் ஊத்திக்கணும்; மன்மோகன் தினம் பேசுற வார்த்தைகள்ல பாதிதான் இனி இந்தியர்கள் பேசணும் போன்ற கட்டுப்பாடுகளும் பரிசீலனையில் இருப்பதாக நம்பத் தகாத வட்டாரங்கள் கூறுகின்றன.
ஒவ்வொரு வீட்டிலும் சமைக்கும் கணவன்மார்களே! அவர்கள் சமைப்பதைப் பார்க்கும் தாய்மார்களே! வருஷத்துக்கு சிலிண்டர் ஆறா, பத்தாங்கறது ஆராய்ச்சியில இருந்தாலும், இப்போதைக்கு இருக்கிற ஆறு சிலிண்டர்களை சிக்கனமாய் எப்படி பயன்படுத்துறதுன்னு பார்ப்போம்...

இந்திய தேசத்தின் வளர்ச்சிக்கு தீவிரவாதிகளை விட அச்சுறுத்தல் தருபவர்கள் சொந்தக் காசுல மோர் கூட வாங்கித் தராம, அடுத்தவன் காசுல ஒம்போது பீர் குடிக்கும் தீ‘பீர’வாதிகள்தான். ‘சரக்கு விலைய சொல்லிட்டு ஏத்தறாங்க, சைட் டிஷ் விலைய சொல்லாம ஏத்தறாங்க’ன்னு ஒவ்வொரு குடிமகனும் புலம்பிக்கிட்டு இருக்கான்... இதுல நம்மளையே ஒட்டிக்கிட்டு ஓசி சரக்கடிக்கிற வெட்டி ‘பீர்’பால்களை அடையாளம் கண்டு துரத்தி, பட்ஜெட்டுக்குள் சரக்கடித்து செலவை மிச்சம் பண்ணுவது எப்படின்னு பார்ப்போம்.

*  எப்பவும் வேக வேகமா குடிக்கிறவன நம்பாதீங்க. அவன்தான் முதல்ல புலம்ப ஆரம்பிப்பான். ‘‘அஞ்சல மச்சான் அவ... என் ஐஸ்வர்யா ராய்டா! மூணு வருஷம் உயிருக்குயிரா காதலிச்சேன்’’னு பழைய பாட்ட மறுபடியும் ரீமிக்ஸ் பண்ணுவானுங்க. உண்மையில அந்தப் புள்ள இவன்கிட்ட, ‘கேண்டீன் எப்படி போகணும்’னுதான் கேட்டிருக்கும். அதையே இவன், ‘கல்யாணம் எப்ப பண்ணிக்கலாம்’னு கேட்ட ரேஞ்சுல ஃபீல் காட்டுவான். இந்த மாதிரி ஆளுங்க கண்டிப்பா பில்லுக்கு பணம் தர மாட்டானுங்க. அவன கூட்டிக்கிட்டு போனதுக்கு, அவன் புலம்பல் மட்டும்தான் என்டர்டெயின்மென்ட்.
*  அவ்வளவு நேரம் நம்ம கூடதான் மொக்க போட்டுக்கிட்டு இருப்பாங்க. கரெக்டா பில் வர்றப்ப, கஸ்டமர் கேருக்கு கால் போட்டு, ‘‘எஸ் மேடம், நோ மேடம், ஆல் ரைட் மேடம்’’னு பில்ல கண்டுக்காம வெத்து ஸீன் போடுவாங்க. அவங்க உறவை அடியோடு டைவர்ஸ் பண்ணணும்.

*  இன்னும் சில பேரு இருக்காங்க. பில் வர்றதுக்கு பத்து நிமிஷத்துக்கு முன்னால செல்போன்ல கால் வர்ற மாதிரி அலாரம் செட் பண்ணி இருப்பானுங்க. மணி அடிச்ச உடனே, ‘‘என்னது... மச்சினிச்சி பாத்ரூம்ல வழுக்கி விழுந்துடுச்சா? மாமியார் காதல்ல விழுந்துடுச்சா? காந்தி செத்துட்டாரா?’’னு பெரிய பெரிய அதிர்ச்சிய காட்டுவாங்க. நாமளும், ‘‘ஐயோ, சீக்கிரம் கிளம்பு மச்சி’’ன்னு வழியனுப்புவோம். இனி இந்த மேட்டர்ல உஷாரா இருங்க தோழர்களே!

*  சில ‘மப்பு’சுல்தானுங்க இருக்காங்க. எல்லாம் முடிஞ்சு பில்லு வரப்போற நேரத்துல, ‘‘ஆம்லெட் பத்து ரூபாயா? எங்கூருல பத்து ரூபாவுக்கு ஆம்லெட் தருவாங்கடா’’ போன்ற பொருளாதார பிரச்னையில் ஆரம்பிச்சு, உச்சா போற பீங்கான் தொட்டிய பார்த்து, ‘‘எவன்டா வாஷ்பேசின செவுத்துல தூக்கி வச்சது’’ன்னு உரிமை பிரச்னை வரை சண்டை போட ஆரம்பிச்சிடுவாங்க. இவங்களோட உள் நோக்கம், பா.ஜ.க போல ‘பார்’லிமென்டை விட்டு வெளிநடப்பு செய்யணும்... இல்ல, வெளியேற்றப்படணும்.

*  சில மானஸ்தனுங்க இருக்காங்க... பில் வந்த உடனே, அமௌன்ட் கூட்டி டோட்டல் சரியா இருக்கான்னு எல்லாம் பார்ப்பாங்க. பார்த்துட்டு, ‘‘மச்சி, சரியா இருக்கு’’ன்னு சர்டிபிகேட் கொடுப்பானுங்களே தவிர, சட்டைப் பையில இருந்து சில்லற எடுக்க மாட்டாங்க. மீறியும், ‘‘மாப்ள, ஏதாவது பணம் இருக்கா?’’னு கேட்டுப் பாருங்க... ‘‘சட்டைய மாத்தி போட்டுட்டு வந்துட்டேன்’’னு சால்ஜாப்பு சொல்வாங்க. இவனுங்களோடல்லாம் அன்னம் ‘தண்ணி’ புழங்கக்கூடாது.

*  ஒவ்வொரு முறையும் பில் வரப்ப, கரெக்டா எந்திரிச்சு உச்சா போறான் பாருங்க... அவனுக்கெல்லாம் எம்.ஜி.ஆர், நம்பியார்கிட்ட அடிவாங்குற மாதிரி மூணு சான்ஸ்தான். நாலாவது தடவை பின்னி பெடலெடுத்து தொரத்தி விட்டுரணும்.

*  எல்லா புட்டியும் காலியாகி எந்நேரமும் பில் வரலாம்ங்கிற நிலைமையில, மட்டயான மாதிரி நடிக்கிறவன் நிறையா பேரு இருக்கான். அப்போதான் நாம அவன்கிட்ட பைசா கேட்க மாட்டோமாம். அவன்கிட்ட, ‘‘மச்சி! இந்த நூறு ரூபா உன்னுதா?’’ன்னு சும்மானாச்சிக்கு கேளுங்க, அலறிக்கிட்டு ‘‘ஆமா’’ன்னுவான். மேல கூறிய, ‘டகில் பாட்சா’க்களிடம் ஏமாறாமல், சிக்கனமாய் குடித்து, ‘கிக்’கனமாய் வாழ வேண்டுகிறேன்.
(பேசுவோம்)

ஆல்தோட்ட பூபதி

*  தினம் சமைக்கிற பழக்கத்தை விட்டுறணும். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அந்த வாரத்துக்குத் தேவையானதை சமைச்சு ஃப்ரிட்ஜ்ல போட்டு வச்சுக்கிட்டா, மீதி ஆறு நாள் கேஸ் செலவ மொத்தமா குறைக்கலாம்.

*  சாம்பார், ரசம், பொரியல், கூட்டுன்னு தனித்தனியா சமைக்கிற பழக்கத்தை விடணும். மொத்தமா தண்ணிய சூடா காய்ச்சி வச்சுட்டா போதும். சாம்பார் வேணுங்கிறவங்க காய்கறிகளோடு மஞ்சத்தூள், மொளகா பொடி, பெருங்காயத்த வாயில போட்டு அப்படியே வெந்நீரைக் குடிக்கணும். ரசம் வேணுங்கிறவங்க, வெறும் மிளகு, சீரகம், பூண்டு, பெருங்காயத்த வாயில போட்டுக்கிட்டு சுடு தண்ணியக் குடிக்கலாம்.

*  காபி, டீ குடிக்கிற பழக்கம் உள்ளவங்க, மொதல்ல அடியோட அந்தப் பழக்கத்தை விடுங்க. முடியலைன்னா, ஐஸ் வாட்டர்ல காபி, டீ போட்டு குடிச்சுப் பழகலாம். அப்படியும் முடியல... சூடாத்தான் காபி குடிப்பேன்னு சொல்றவங்க, முட்டைய வேக வைக்கிற தண்ணியிலயும் குக்கர்ல சாதம் வைக்கிற தண்ணியிலயும் டிகாஷன் போட்டு பிரிகாஷன் தேடிக்கலாம்.

*  கேஸ் சிலிண்டரை மிச்சம் பண்ணவும், உடல் இளைக்கவும் டூ இன் ஒன் மெத்தட் இருக்கு. அதாவது, நாலு பேருக்கு சமைக்கிறதுக்கு பதிலா, ஒருத்தருக்கு சமைச்சு வச்சுக்கணும். அப்புறம் நாலு பேரோட பேரையும் சீட்டுல எழுதி குலுக்கிப் போட்டு எடுக்கணும். யாரு பேரு வருதோ அவங்க மட்டும் சாப்பிடலாம். மத்தவங்க டயட்.

*  கேஸ் சிலிண்டரை மிச்சம் பண்ண இன்னொரு ரிஸ்க்கான வழி இருக்கு, அது கரன்ட் அடுப்பு வாங்குறது. இதுல என்ன பெரிய ரிஸ்க்னா, அதுல சமைக்க தமிழ்நாட்டுல கரன்ட் இருக்காது... அவ்வளவு தான்!

*  சிலிண்டரில் இருக்குற கேஸை ஒரு பாலிதீன் பையில் அடைச்சு, பேங்க்ல டெபாசிட் பண்ணலாம். பேங்க் மாசாமாசம் தர்ற வட்டியை கேஸாக வாங்கி, அதில் சமைத்து இன்புறலாம்.

*  இதையெல்லாம் விட சிறந்த வழி... சமையல் சிலிண்டரை வாடகைக்கு விட்டுட்டு, வரும் காசில் நல்ல ஹோட்டலா பார்த்து சாப்பிடலாம்.

கிச்சு கீச்சு

இந்தியாவை பணக்கார நாடாக்க அன்று ஆட்சி பொறுப்பேற்ற காங்கிரஸ், இன்று இந்தியாவை பணக்காரர்களின் நாடாக்கிக்கொண்டு இருக்கிறது!

ஈமு கோழிகளுக்கு தீவனம் வாங்க பெரிய மனசோட அம்மா ஒரு கோடி கொடுத்திருக்காங்க... யாரு யாரு சாப்பிடப் போறாங் களோ?