தீபாவளி தத்துவம் 2




‘‘அமைச்சரே, எனக்கு ஒரு தகவல் தேவை!’’
‘‘என்ன மன்னா..?’’
‘‘இந்த வருடம் நான் எந்தெந்த அரசிகளுடன் தலை தீபாவளி கொண்டாட
வேண்டும்..?’’
- வீ.விஷ்ணுகுமார், கிருஷ்ணகிரி.

என்னதான் பட்டாசோட ‘திரி’யைக் கிள்ளினாலும், அது வலியில ‘ஆ’ன்னு எல்லாம் கத்தாது!
- அடிக்கடி காதலி இடுப்பைக் கிள்ளி, அவள் செல்லமாய் சிணுங்குவதை ரசிப்போர் சங்கம்
- பெ.பாண்டியன், காரைக்குடி.

‘‘தலைவரை அநியாயத்துக்குப் பழி வாங்கறாங்கனு எப்படிச் சொல்றே..?’’
‘‘வருமானத்துக்கு அதிகமா ‘தீபாவளி பலகாரம்’ செஞ்சதா அவர் மேல வழக்கு போட்டிருக்காங்களே...’’
- பர்வீன் யூனுஸ், சென்னை-44.

‘‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ‘பொட்டு’ வெடி மட்டுமல்ல... ‘ஸ்டிக்கர் பொட்டு’ வெடியும் அறிமுகப்படுத்துவோம் என்பதை சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.’’
- பெ.பாண்டியன், காரைக்குடி.

என்னதான் பட்டாசுக் கடைக்காரர்னாலும், தீபாவளிக்கு புது ஜட்டி வாங்கித்தான் போடுவார். ‘பூச்சட்டியை’ வாங்கிப் போட்டுக்க மாட்டார்!
- ஜட்டிகள் பற்றி கெட்டியான ஆராய்ச்சிகள்
செய்வோர் சங்கம்
- பெ.பாண்டியன், காரைக்குடி.

‘‘தீபாவளி சமயத்துல தலைவருக்கு பட்டம் குடுக்கப் போறாங்கன்னு சொன்னபோதே சந்தேகப்பட்டேன்...’’
‘‘ஏன்... என்னாச்சு?’’
‘‘அரசியல் புஸ்வாணம்னு பட்டம் குடுத்துட்டாங்க...’’
- பர்வீன் யூனுஸ், சென்னை-44.

‘‘தீபாவளிக்கு என் மனைவி செஞ்சிருந்த ஸ்வீட்ஸை வீட்டு ஓனர்கிட்ட டேஸ்ட் பார்க்கத் தந்தது தப்பாப் போச்சு!’’
‘‘ஏன்?’’
‘‘ஸ்வீட்டை காலி பண்றீங்களா... இல்ல, வீட்டை காலி பண்றீங்களான்னு கேட்டுட்டார்..!’’
- வீ.விஷ்ணுகுமார், கிருஷ்ணகிரி.