பாட்டு பிடிக்காத பல்லி!





‘கழுகு’ படத்தில் நடித்த அழகு மயில், பிந்து மாதவி. இப்போது கோலிவுட், டோலிவுட் ரெண்டு ஏரியாவிலும் பிஸி. முட்டை விழி அழகில் மனசை பொடிமாஸ் போடும் பிந்து, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ ஷூட்டிங் பிரேக்கில் சிக்கினார், ஜாலி பேட்டிக்கு! இனி, கடலையும் பொரியும்....

‘‘அதென்ன உங்களுக்கு ரெண்டு பேரு?’’
‘‘சேர்த்து படிச்சா ஒரே பேருதான். ‘மாற்றான்’ பார்த்துட்டீங்க போல, அதான் உங்களுக்கு ரெண்டு ரெண்டா தெரியுது.’’

‘‘பிந்துமாதவிக்கு பிந்துகோஷ்
தெரியுமா?’’
‘‘ம்... அவ்வளவு பெரிய உருவம் தெரியாம இருக்குமா?’’

‘‘‘வரும்... ஆனா வராது’ - இந்த டயலாக் பேசின நடிகர் பெயர் தெரியுமா?’’
‘‘என்... என்... என்ன...த்த
ம்! சரியா சொல்லத் தெரியல. ‘தெரியும்... ஆனா தெரியாது’ன்னு போட்டுக்குங்க!’’

‘‘கேடி, கில்லாடிக்கு அர்த்தம் தெரியுமா?’’
‘‘மீனிங்தானே? ‘கேடி’ன்னா கொஞ்சம் கெட்ட ஆளு மாதிரி. ‘கில்லாடி’ன்னா கொஞ்சம் நாலெட்ஜ் உள்ளவர்னு நினைக்கிறேன்!’’

‘‘அப்போ நடிகர்களில் யாருக்கு நாலெட்ஜ் அதிகம்?’’
‘‘அய்யய்யோ... நீங்கதான் ‘கேடி’ன்னு புரியுது. ஆள விடுங்க பிரதர்!’’

‘‘சொந்த ஊரு மதனப்பள்ளின்னு தெரியும். உங்க வீட்டு பாத்ரூம்ல பல்லி இருக்கா?’’
‘‘பாத்ரூம்ல பாடுற பழக்கம் இருக்கு. ஆனா, பல்லி பார்த்ததில்லை. ஐ திங்க், என் பாட்டு பிடிக்காம ஓடிடும் போல!’’



‘‘பி.டி.உஷா மாதிரி நீங்க எப்போதாவது ஓடி இருக்கீங்களா?’’
‘‘மே மாச வெயில்ல ஒரு தடவை மாட்டிக்கிட்டு நிழலைத் தேடி ஓடின ஓட்டத்தை நினைச்சா இப்பவும் எனக்கு மூச்சு வாங்கும்...’’

‘‘பகல்லயே பசு மாடு தெரியாதப்போ இருட்டுல எருமை மாடு தெரியுமா?’’
‘‘அதானே... எப்படித் தெரியும்! இல்ல... இல்ல... லைட் அடிச்சு பார்த்தா தெரியுமே!’’

‘‘டாக்டர்கிட்ட மூச்சை இழுத்து விட்டு செத்துப் போன பேஷன்ட்டை பார்த்திருக்கீங்களா?’’
‘‘அய்யோ... இதுக்கு ஜாலி பேட்டின்னு பேரு வைக்கறதுக்கு பதில் ‘காலி’ பேட்டின்னு வச்சிடுங்கப்பா!’’

‘‘பறக்குற ஃபிளைட்டிலிருந்து கீழே விழுந்தா என்னாகும்?’’
‘‘ஃபிளைட்ல ஒரு சீட்டு காலியாகும். கரெக்ட்டா கணக்கு போடுறேனா?’’

‘‘பசு மாட்டுக்கு எருமை கன்னுக்குட்டி பிறந்தா என்ன நடக்கும்?’’
‘‘பசு மாட்டை காளை மாடு சந்தேகப்படும். எப்புடி நம்ம கடி?’’
- அமலன்