தத்துவம் மச்சி தத்துவம்





‘‘உன் அம்மாவும், மனைவியும் மேக்கப் போட்டுக்கிட்டு எங்கே கிளம்பிட்டாங்க..?’’
‘‘ஒரு சேஞ்சுக்கு அவுட்டோர் போய் சண்டை போடப் போறாங்களாம்..!’’
- பெ.பாண்டியன், காரைக்குடி.

‘‘தலைவரே! உங்க ஜாதகத்துல குருவை சனி பார்க்கிறான். சூரியனை ராகு பார்க்கிறான்...’’
‘‘அவங்க பார்க்கிறது இருக்கட்டும் ஜோசியரே... மகளிரணித் தலைவி என்னைப் பார்க்க என்ன பரிகாரம் செய்யணும்?’’
- ராம்ஆதிநாராயணன், தஞ்சாவூர்.

‘‘யோவ்... என் பேச்சைக் கேட்க வந்ததே அந்த நாலு பேர்தான்! அவங்களையும் எதுக்கு விரட்டுறே..?’’
‘‘தலைவரே! அவங்க, உங்க பேச்சைக் கேட்டுட்டு அவதூறு வழக்கு போடற எதிர்க்கட்சிக்காரங்க...’’
- ம.விருதுராஜா, திருக்கோவிலூர்.

‘‘அந்த டாக்டரை ஏன் கைது பண்றாங்க..?’’
‘‘பேஷன்ட்ஸ்கிட்ட மருந்து சீட்டு நடத்தி மோசடி பண்ணிட்டாராம்..!’’
- வீ.விஷ்ணுகுமார், கிருஷ்ணகிரி.

‘‘தலைவர் மேல நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போட்டுட்டாங்க...’’
‘‘எதுக்கு..?’’
‘‘எனது வழக்கை விசாரிக்க வரும் நீதிபதி அவர்களே வருக வருகன்னு கோர்ட் வாசல்ல பெரிய பேனர் வச்சிருக்கார்..!’’
- அ.பேச்சியப்பன், ராஜபாளையம்.

என்னதான் ஸ்வீட் பிரியரா இருந்தாலும், மீன் கடைக்குப் போனால் ‘ஜிலேபி’ மீன் மட்டும்தான் வாங்க முடியும்; ‘லட்டு’, ‘பாதுஷா’ ‘மைசூர்பாக்’, ‘பால்கோவா’ மீன் எல்லாம் வாங்க முடியாது!
- காரமாக மீன் வறுவல் சாப்பிடும்போது இனிப்பாக தத்துவம் சொல்வோர் சங்கம்
- ஏ.எஸ்.யோகானந்தம், ஔவையார்பாளையம்.

என்னதான் ஒரு பொண்ணு டிராஃபிக்ல சைகை காட்டினாலும், அதையெல்லாம் நாம காதல் சிக்னலா எடுத்துக்கக் கூடாது!
- டிராஃபிக் கான்ஸ்டபிள் பொண்ணை லவ் பண்ணுவோர் சங்கம்
- பெ.பாண்டியன், காரைக்குடி.