லட்சுமி தரிசனம்!



ஏதேது... தொடர்ந்து நல்ல வாய்ப்புகள் வந்தா லட்சுமி மேனன் முழுநேரப் பாடகியாவே மாறிடுவாங்க போலிருக்கு. அவரின் தரிசனம் கிடைக்க விடுங்கப்பு!
- மு.மதிவாணன், அரூர்.

தமிழ் சினிமாவில் எதிரும் புதிருமாக இருந்த சிம்புவும் தனுஷும் இப்போது ஒருவர் தயாரிப்பில் ஒருவர் நடிக்கத் தயாராய் இருப்பதும் அதற்காக சம்பளத்தைக் குறைப்பதும் இன்ப நிகழ்வுகளே!
- ஓ.எஸ்.பாலகிருஷ்ணன், கோவில்பட்டி.

குப்புறப் படுத்துத் தூங்குவதில் இவ்வளவு விஷயம் இருக்கா? எனக்கு மென்மையான மனது எனச் சொல்லிக் கொள்பவர்கள் எல்லாம் இனி குப்புறப் படுத்துத்தான் தூங்குவார்கள் சாமி!
- ஜி.கே.மணிகண்டன், காங்கேயம்.

அட்டையில் ரஜினி ஸ்டில் வந்தாலே இதழ் சினிமா சிறப்பிதழாக மாறி விடுகிறது. அதிலும், ரஜினி-கமல் என ஒரே இதழில். ‘லிங்கா’, ‘பாபநாசம்’ படச் செய்திகள், ஸ்டில்கள் அனைத்தும் பரவசம்!
- லட்சுமி செங்குட்டுவன், நாமக்கல்

மறைந்த தெலுங்கு ஓவியர் பாபுவுக்கு அஞ்சலியாக வந்திருந்த ஓவியர் மணியம்செல்வனின் கட்டுரையைப் படித்தபோது, ‘அவர் ஒரு மஹானுபாவ ஓவியர்தான்’ என்பது தெள்ளத் தெளிவானது!
- வெ.லட்சுமி நாராயணன், வடலூர்.

நாத்திகர் கமல், வைணவ ஜீயரை சந்திக்கும்போது நெற்றி யில் பட்டையும், உடலில் சட்டையும் அணிந்தது முரண்பட்ட விதிமீறல்கள். கமல் என்றாலே சர்ச்சைகளும் உண்டு என்ற உங்கள் கணிப்பு சரிதான்!
- மனோகர், சென்னை-18.

மதுவில்லா சமுதாயத்தை உருவாக்கும் கேரள அரசின் சாதனை முயற்சியை தமிழகத்திலும் நடைமுறைப்படுத்த முடியும்! ஆனால், அரசின் நிழலில் வளரும் மதுபான முதலாளிகள் இதற்கு
ஒப்புக்கொள்ள வேண்டுமே!
-எம்.சம்பத், வேலாயுதம் பாளையம்.

உதயநிதியும்-ஹன்சிகாவும் இரண்டாவது முறையாக ஜோடி சேர்வதில் தவறில்லை! ஆனால், நம்மூர் கிசுகிசு சிகாமணிகளுக்கு இது பொறுக்காதே என்பதுதான் எங்க கவலை!
- எச்.ஞானவேல், புதுச்சேரி.

கேரன்டிக்கும் வாரன்டிக்கும் வித்தியாசம் அறியாமல் குழம்பிக் கிடந்த எங்களுக்கு நல்ல விளக்கத்தை தெள்ளத் தெளிவாக, புரியும்படி கொடுத்தீர்கள். பாராட்டுக்கள்!
- கன்யாரி, நாகர்கோவில்

தமிழ்ப் பேரரசன் ராஜேந்திரனைப் பற்றி சரித்திரச் சான்றுடன் வெளிவந்த தொடர் கட்டுரை அருமை. பலரும் அறியாத தகவல்கள் அதில் இடம் பெற்றது சரித்திர ஆர்வலர்களுக்கும், மாணவர்களுக்கும் வரப்பிரசாதம்!
பி.ஜெயராஜ், சென்னை-91.