பூ



‘‘நெருக்கமா கட்டின மல்லிம்மா... பத்து முழம் இருக்கு. நூறு ரூபா பூவு. அறுபது ரூபா குடுத்திட்டு எடுத்துக்கம்மா...’’ - கோயிலுக்கு வந்த கோகிலாவிடம் கண்ணாத்தா பாட்டி சொன்னாள்.

‘‘ரெண்டு முழம் போதும் பாட்டி!’’‘‘பத்து முழம் போட்டா அம்பாளுக்கு நெறஞ்சு இருக்கும்மா. உன் வேண்டுதலும் நிறைவேறும். இந்த கண்ணாத்தா சொன்னா அப்படியே நடக்கும் பாரு!’’
‘‘சரி, கொடுங்க...’’ - அறுபது ரூபாக்கு பூ வாங்கிச் சென்றாள் கோகிலா. இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஒருநாள்...

‘‘பாட்டி, இந்தாங்க..!’’ - ஸ்வீட் பாக்ஸோடு நின்றாள் கோகிலா. ‘‘நீங்க சொன்ன மாதிரியே அம்மனுக்கு பத்து முழம் பூ போட்டதுல வேண்டுதல் நிறைவேறிடுச்சு. கல்யாணமாகி எட்டு வருஷமா குழந்தை இல்லாத நான், இப்ப கர்ப்பமாகியிருக்கேன்!’’‘‘தப்பா எடுத்துக்காதம்மா... அது சும்மா பூவை விக்கிறதுக்காகச் சொன்னது. உன் வேண்டுதல் பலிச்சதுக்கு அம்மன்தான் காரணம். பூவோ, நானோ இல்லம்மா!’’

‘‘இருக்கட்டும் பாட்டி... அந்த அம்மனே உங்க உருவத்துல வந்து பேசினதா நான் நம்பறேன்!’’‘‘மவராசியா இரும்மா... இந்தா இது இந்தப் பாட்டியோட அன்பளிப்பு’’ - இப்போது பாட்டி கொடுத்த பூவில் அதிக மணம் வீசியது.

கோமதி பழனிச்சாமி