பிட்காய்ன் என்ற மின்பணம்





சம்பவம் 1: கடந்த மாதம் 23ம் தேதி ட்ரேட்ஃபோர்ட்ரெஸ் என்ற தனியார் ஆஸ்திரேலிய இணைய வங்கி ஹேக் செய்து கொள்ளையடிக்கப்பட்டது. பறிபோன பணத்தின் மதிப்பு, 1.3 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் (ஏழரை கோடி ரூபாய்). அவ்வங்கி கையாண்டது வழக்கமான பணம் அல்ல; பிட்காய்ன் என்றொரு புதுரக கரன்சியை.

சம்பவம் 2: கடந்த மாதம் 25ம் தேதி அமெரிக்காவின் எஃப்.பி.ஐ அமைப்பு, சில்க்ரோட் என்ற ரகசியமாக இயங்கி வந்த சட்ட விரோத போதை மருந்து கும்பலின் பிட்காய்ன் கணக்கைக் கைப்பற்றியது. 28.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (180 கோடி ரூபாய்) பறிமுதல் செய்யப்பட்டன. ஒட்டுமொத்தமாய் புழக்கத்தில் இருக்கும் பிட்காய்ன்களில் இது 1.5 சதவீதம்.
சம்பவம் 3: கடந்த மாதம் 29ம் தேதி கனடாவில் ரோபோகாய்ன் என்ற முதல் பிட்காய்ன் ஏடிஎம் திறக்கப்பட்டது. அதன் மூலம் ஒரே வாரத்தில் ஒரு லட்சம் கனடா டாலர் (60 லட்சம் ரூபாய்) பரிவர்த்தனை நடத்துள்ளது. பெர்லின், லண்டன், நியூயார்க், டொரன்டோ, ஹாங்காங் நகரங்களிலும் ரோபோகாய்ன் ஏடிஎம்கள் வரவுள்ளன.

பிட்காய்ன் என்றால் என்ன?

இன்று தமிழகத்தில் நிறைய கடைகளில் 50 பைசாவுக்கு பதில் ஹால்ஸ்தான் சில்லறையாகத் தரப்படுகிறது. ஒருவகையில் இது மாற்றுச் செலாவணி   (கிறீtமீக்ஷீஸீணீtமீ சிuக்ஷீக்ஷீமீஸீநீஹ்) . அதாவது அரசாங்கம் அதிகாரபூர்வமாக ஒப்புக்கொண்ட செலாவணி முறைக்கு மாற்றாக தனி நபர் அல்லது அமைப்புகளால் பயன்படுத்தப்படுவது. சொடக்ஸோ, அக்கார் கூப்பன்கள், லைஃப்ஸ்டைல், லேண்ட்மார்க் கிஃப்ட் கார்ட்கள் போன்றவை உதாரணங்கள். முக்கியமாக இந்தப் பரிவர்த்தனையில், வங்கி இடையில் வருவதில்லை. இந்திய ரூபாய் எனில், அச்சடிப்பது ரிசர்வ் வங்கி. பிட்காய்னுக்கு அப்படி எந்த வங்கியும் இல்லை.

இன்டர்நெட் பேங்கிங் மூலம் நீங்கள் உங்கள் அக்கவுன்ட்டிலிருந்து யாருக்காவது பணம் அனுப்ப வேண்டும் என்றால், உங்கள் வங்கி, நீங்கள் யாருக்கு பணம் அனுப்புகிறீர்களோ அவர்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கி, நெஃப்ட் அமைப்பு என பல விஷயங்களைத் தாண்ட வேண்டும். பிட்காய்ன் பரிமாற்றத்தில் எந்த வங்கிக்கும் வேலை இல்லை. இது மின்பணம்! 



டிஜிட்டல் கரன்சி     என்பது மாற்றுச் செலாவணியில் ஒரு வகை. இதில் மின்னணு வடிவில் கணினிகள் மத்தியில் செலாவணி நடக்கும். உதாரணம்: ஃப்ளிப்கார்ட் கிஃப்ட் வவுச்சர், பிவிஆர் கிஃப்ட் கார்ட் போன்றவை. மறையீட்டுச் செலாவணி (சிக்ஷீஹ்ஜீtஷீ சிuக்ஷீக்ஷீமீஸீநீஹ்) என்பது இதில் ஒரு நவீன வகை. நேரடியாக அல்லாமல் மறையீடுகளின் (சிக்ஷீஹ்ஜீtஷீரீக்ஷீணீஜீலீஹ்) அடிப்படையில் எண்ணியல் செலாவணியைப் பயன்படுத்துகிறது இது. மி லிளிக்ஷிணி சீளிஹி என்பதை 143 என்கிறார்களே, அதுவே ஒரு மறையீடுதான். அதே போல் இந்த மின்னணு பணப் பரிவர்த்தனைகளில் பாதுகாப்புக்காக எல்லாத் தரவுகளும், பரிமாற்றங்களும் மறையீடு செய்யப்படும். சம்பந்தப்படாதவர்கள் பார்க்கவோ மாற்றவோ முடியாது.
‘பிட்காய்ன்’தான் முதன்

முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட மறையீட்டுச் செலாவணி முறை. இன்று அதிக புழக்கத்தில் இருக்கும் மறையீட்டுச் செலாவணியும் இதுவே. நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் மில்டன் ஃப்ரீட்மேன், கடந்த 99ம் ஆண்டு ஒரு விஷயத்தைச் சொன்னார். ‘‘எதிர்காலத்தில் எலெக்ட்ரானிக் கரன்சி வந்துவிடும். ஒருவருக்கு ஒருவர் அறிமுகமில்லாத இருவருக்கு இடையே இதன்மூலம் பரிவர்த்தனைகள் நடக்கும்’’ என்றார். 2009ல் சடோஷி நகமோடோ என்பவர் (இதைப் புனைபெயர் என்கிறார்கள். இவரை யாரும் பார்த்ததில்லை; போனில் பேசியதாக சிலர் சொல்கிறார்கள்.) பிட்காய்னை அறிமுகம் செய்தார். இன்று இதேபோல கிட்டத்தட்ட 30 வகை மறையீட்டுச் செலாவணி முறைகள் புழக்கத்தில் உள்ளன. ஃபெதர்காய்ன், லைட்காய்ன், பிபிகாய்ன், நேம்காய்ன் போன்றவை இன்னபிற பிரபல முறைகள்.

நீங்கள் பிட்காய்ன் பயன்படுத்த விரும்பினால் முதலில் அதற்கான பயனர் மென்பொருளை (Client App) உங்கள் கணிப்பொறியிலோ, ஸ்மார்ட்ஃபோனிலோ நிறுவ வேண்டும். இதுதான் உங்கள் பிட்காய்ன் பணப்பை (Bitcoin wallet). அந்தப் பணப்பையை அடையாளப் படுத்தும் வகையில் ஒரு பிட்காய்ன் முகவரி (Bitcoin address) இருக்கும். ஒவ்வொரு பரிவர்த்தனைக்குப் பிறகும் இது மாறும். இது போல் ஒவ்வொருவரும் ஒரு பணப்பையும் அதற்குரிய முகவரியும் வைத்திருப்பர்.

நீங்கள் ஒருவருக்கு பணம் அனுப்ப விரும்பினால், பயனர் மென்பொருளில் அவரது பிட்காய்ன் முகவரி கொடுத்து எவ்வளவு தொகை எனக் குறிப்பிட வேண்டும். அது அவரது பணப்பைக்கு போய்ச் சேர்ந்து விடும். அவர் தன் பயனர் மென்பொருளைத் திறந்து பார்த்தால் பணம் வரவில் இருக்கும். கிட்டத்தட்ட ஒருவரின் இமெயில் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புவது போலத்தான். ஒரே வித்தியாசம், இதில் ஒவ்வொரு முறையும் பிட்காய்ன் முகவரி மாறும்.

பிரதானமாக இரு முறைகளில் நீங்கள் பிட்காய்ன் பெறலாம். பரிமாற்றத்தின் மூலம் ஒருவர் உங்கள் பணப்பைக்கு பிட்காய்ன் அனுப்பலாம். பிட்காய்ன் எக்ஸ்சேஞ்களில் உங்களிடம் இருக்கும் ரூபாயோ டாலரோ செலுத்திப் பெறலாம். ஒருவரது பணப்பையில் இருக்கும் பணத்தை அடுத்தவர் திருடாமல் இருக்க, ஒவ்வொரு பயனர் மென்பொருளோடும் ஒரு ரகசிய தகவல் (றிக்ஷீவீஸ்ணீtமீ ரிமீஹ்) இருக்கும். பரிமாற்றத்தின்போது பிட்காய்ன் முகவரியோடு இதுவும் சேர்த்து அனுப்பப்படும். அது சரியாகப் பொருந்தினால் மட்டுமே பரிமாற்றம் வெற்றிகரமாக நடக்கும்.
இப்படி நடந்த பரிமாற்றம்   Block Chain என்ற பகிரப்பட்ட பொது கணக்கேட்டில்

பதியப்படும். இந்தக் கணக்கேட்டின் பிரதி, பயனர் மென்பொருள் வைத்திருக்கும் அனைவரிடமும் இருக்கும். எந்தவொரு பரிமாற்றமும் நடந்த 10 நிமிடங்களுக்குள் உலகம் முழுக்க
இருக்கும் பயனர்களின் கணக்கேட்டில் அது பதியப்பட்டு விடும். பயன்படுத்தப்பட்ட பிட்காய்ன் மறுபடி பயன்படுத்தப்படாமல் இது தடுக்கிறது. மிகப் பாதுகாப்பான, ஏமாற்ற முடியாத பரிவர்த்தனை.   

இதனாலேயே பிட்காயின்கள் பரவலாக சட்டவிரோத பணப்பரிமாற்றங்களில் பயன்படுகின்றன. இணையம் சார்ந்த சூதாட்டங்களிலும், போதை மருந்து விற்பனையிலும் புழங்குவது இதுதான். துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை பின்புல விசாரணை இன்றி சுலபமாய் வாங்கவும் பயன்படுகிறது. யார் வாங்கினார்கள் என பார்ப்பதற்குள் புலனாய்வு அமைப்புகளுக்கு தாவு தீர்ந்துவிடும்.
வேர்ட்ப்ரெஸ், பாய்டு, ரெட்டிட் போன்ற பெரிய நிறுவனங்கள் பிட்காய்ன் மூலம் பணம் செலுத்துவதை அங்கீகரிக்கின்றன. கடந்த ஆகஸ்ட்டில் ஜெர்மனி நிதியமைச்சகம்

பிட்காயினை சிலவரிகளில் பயன்படுத்துவதை அங்கீகரித்தது. இம்மாதம் அமெரிக்க அதிபர் தேர்தலை நடத்தும் ஃபெடரல் எலெக்ஷன் கமிஷனின் வழக்கறிஞர்கள், தேர்தல் பிரசாரத்துக்கான நன்கொடைகளை பிட்காய்ன்களாக கட்சிகள் ஏற்கலாம் என சிபாரிசு செய்துள்ளனர். சைப்ரஸ் நாட்டில் ஒரு பல்கலைக்கழகம், ‘கட்டணங்களை பிட்காய்ன் மூலம் செலுத்தலாம்’ என அறிவித்துள்ளது.
அமெரிக்க டாலரை உலக கரன்சி என்பார்கள்; அது செல்லுபடியாகாத நாடே இல்லை! எதிர்காலத்தில் பிட்காய்ன் இந்த இடத்தைப் பிடிக்கலாம்!         

 சி.சரவணகார்த்திகேயன்