facebook வலைப்பேச்சு

ஒரு மின் மிகை தொகுதியும், 233 இருட்டு குகை தொகுதிகளும் உருவானது!
# இடைத் தேர்தல்
, சாமுவேல் ராஜா

செய்யும் தவறுகள் அடுத்தவருக்குத் தெரியாத வகையில் இருந்தால், அனைவருமே இங்கே மகாத்மாதான்!
, ஹரிசுதன் சிவசுப்ரமணியன்

இழந்த நிஜங்களை இட்டு நிரப்புகிறது பிரதி
, அன்பு சிவன்

ஆற்காடு சாலை குண்டும் குழியுமாக இருக்கிறது. இதை சமன்படுத்த ஒரு லோடு ஜல்லி அனுப்பி வைக்கும்படி மத்திய அரசுக்கு ஒரு கடிதம் எழுதப்போகிறேன்.
# எதற்கெடுத்தாலும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதிவிட்டு, ‘எனக்குத் தெரியாது’ என ஒதுங்கிக் கொள்ளும் தமிழக அரசுக்கு என்னால் ஆன உதவி.
, செல்வ குமார்

கண்ணுக்குள் சில நிலவுகளை ஒளித்து வைத்திருக்கிறேன்; காலை சூரியப் பையன் பொறாமையில் சில சண்டைகளிடலாம்...
, அமுதா தமிழ்

நிலவில் இறங்கி ஆய்வு செய்ய அடுத்த மாதம் ரேபிட் ரோபோவை அனுப்புகிறது சீனா
# நாங்க 2014ல் மன்மோகன் சிங்கை அனுப்புவோம்டா!
, தமிழ் நியூஸ்
பிரார்த்தனையின் முடிவில் வந்தது கண்ணீர்த்துளி; இறைவனுக்குத் தர இது போதும்!
, ராஜா சந்திரசேகர்

மனித மூளையோட ஜிக்ஜேக் ஸ்க்ரீன்சேவர்தான் கனவுகள்!
, மோகனசுந்தரம்
மீனாட்சிசுந்தரம்

கொள்ளையடித்தது கோடிக் கணக்கானாலும் 60 நாட்களில் ஆட்டோமேடிக்காய் கிடைக்கிற பெயிலை 30 நாட்களில் வாங்கித் தர வக்கீல் பீஸ் 25 லட்சம்!
, விமலாதித்த மாமல்லன்
ருசியோடு சமைக்கிற
நாட்களில் பெரும் பாலும் பசியோடு படுக்க நேர்கிறது அம்மாக்களுக்கு...
, ரவி ரவியுதயன்

வாழ்க்கை இயல்பாகவே நியாயமற்றது.
, ரியாஸ் குரானா

உனக்காக
நீள்வட்டப் பாதையிலிருந்து
சற்றே விலகிச் சுற்றுகிறது என் பூமி.
, யாழி கிரிதரன்


கூடங்குளத்திலிருந்து வரும் மின்சாரத்தை நேரடியாக ரஷ்யாவுக்கே அனுப்புவதுதான் மீண்டும் மின்வெட்டு தாண்டவமாட காரணமா???
, முத்துகிருஷ்ணன்

கையில் சுத்தி வைத்திருப்பவனுக்கு கண்ணுல படுற பிரச்னை எல்லாம் ஆணியாவே
தெரியும்!
, இளையராஜா டெண்டிஸ்ட்

அ , அம்மா...
ஆ , ஆண்ட்ராய்டு போனில் சார்ஜ் இல்லை
இ , இன்னும் கரன்ட்டு வரலை
ஈ , ஈ.பிய மூடிட்டுப் போய்டுங்க
உ , உங்கள நம்பி அரிசியை
ஊ , ஊறப் போட்டு வச்சுருக்கோம்
எ , என்னைக்கு மாவ ஆட்டி, இட்லி தின்னு
ஏ , ஏப்பம் விடப் போறோமோ?
ஐ , ஐயோ... முடியல
ஒ , ஒரு இன்வெர்ட்டராவது
ஓ , ஓசியில் தாங்க...
ஔ , அவ்வ்வ்வ்
, பூபதி முருகேஷ்
கத்தியைக் காட்டிலும் வேகமாக விரோதிகளைச் சம்பாதிக்கிறது கருத்து.
, ஷான் கருப்பசாமி.
பாண்டிச்சேரியில் 1.5 லிட்டர்
‘சூப்பர் ஸ்ட்ராங்’ மெகா சைஸ் பீர் பாட்டில் அறிமுகம்.
# ‘குடி’மகன்களுக்காக பாடுபடும் அரசு
, மாயவரத்தான்