சிம்பு நயன்... ஃபீலிங் டீலிங்!

பல வருடங்களுக்குப் பிறகு சிம்பு,நயன் இணைந்து நடிக்கிறார்கள். அதன் பின்னே இருக்கும் ஃபீலிங்கையும் டீலிங்கையும் போட்டு உடைத்த உமக்கு ‘சினி ரத்னா’ என விருதே தரலாம்!
, த.சத்தியநாராயணன், அயன்புரம்.

ஆழம் தெரியாமல் கடலில் நீச்சலடித்து எவ்வளவோ இளைஞர்கள் உயிரிழக்கும் சம்பவங்களை ‘நீர் யோகா’ நிச்சயம் தடுக்கும். ‘நீர் யோகா’ மாஸ்டர் வீரமுத்துவின் முயற்சி ஆகா!
, ஜி.இனியா, கிருஷ்ணகிரி.

நாலு சென்ட் நிலம் வாங்க ஃபாரினுக்குப் போனவன், கடைசியில் நாலு சென்ட் பாட்டிலோடு நாடு திரும்பிய கதையை சிரிக்கச் சிரிக்க சொன்னாலும், கடைசி வரியில் இமான் அண்ணாச்சி சென்டிமென்ட் ஃபீலிங் தந்துவிட்டார்!
, எம்.மாரிமுத்து, ஈரோடு.

உலகின் முதல் சௌராஷ்டிர மொழி சினிமாவைப் பற்றி செய்தி வெளியிட்டு, சௌராஷ்டிர மொழி பேசும் பத்து லட்சம் மக்களுக்கு குங்குமத்தால் வெற்றித் திலகமிட்டு விட்டீர்கள். பாராட்டுக்கள்!
, சோலை ராகவன், மதுரை,12.

அடடா, அட்டைப் படத்தில் தமன்னா தகதகவென தங்கமாய் மின்னுகிறார். அவங்க எங்கோ பார்த்துக் கொண்டிருந்தாலும் எங்களையே பார்ப்பது போலத்தான் தோணுச்சுங்க!
, ஜி.வி.சூரஜ்குமார், புதுக்கோட்டை

ஹார்ட் அட்டாக், சர்க்கரை நோய், முடக்குவாதம் போன்ற பல பிரச்னைகளை முன்கூட்டியே கண்டு பிடித்து எச்சரிக்கும் ‘ஆர்ட்சென்ஸ்’ கருவி மருத்துவத்துறையில் இன்னும் ஒரு மைல்கல்! பிரமிப்பாகவும் இருக்கிறது... பெருமைப்படவும் வைக்கிறது!
, கல்யா, கோபிசெட்டிபாளையம்.

‘ஊர் கூடி தூர் வாரும் திருவிழா’ பற்றி படித்தபோது, மனம் சிலிர்த்தது! இம்மாதிரி தமிழகத்தில் தண்ணீர் இன்றித் தவிக்கும் அனைத்துப் பகுதியினரும் செயலில் இறங்கினால் தண்ணீர்ப் பஞ்சம் என்பதே வெறும் கடந்த காலமாகிவிடும்!
, எம்.பர்வீன் பாத்திமா, சென்னை,91.

மகளிர் பேருந்து, மகளிர் ரயில் பெட்டி போல, சென்னையில் ‘மகளிர் வங்கி’ திறக்கப்பட்டிருப்பது நற்செய்தி. எல்லாவற்றிலும் சமத்துவம் கோரும் பெண்களுக்கு இந்த ‘மகளிர் வங்கி’ முதல் சுழி!
, கே.மலர்விழி, புதுச்சேரி.

தமிழகத்தை பயமுறுத்திக் கொண்டிருக்கும் ‘கோமாரி’ நோய் பற்றிய கட்டுரை அவசிய அலாரம். அந்த நோய்க்கான வைத்தியத்தையும், வராமல் தடுக்கும் முறைகளையும் சொல்லியது ரொம்பவே ஆறுதல்!
, சி.கொ.தி.முருகேசன், குன்னத்தூர்.மானதே!
, தி.தெ.மணிவண்ணன், அங்கலக்குறிச்சி.