தத்துவம் மச்சி தத்துவம்



‘‘பொதுக்கூட்ட மேடையில் உட்கார்ந்ததும், தலைவர் பாராளுமன்றத்துக்கு போயிட்டதா நினைச்சுட்டார்னு எப்படிச் சொல்றே..?’’
‘‘நிம்மதியா தூங்க ஆரம்பிச்சுட்டாரே..!’’
- எஸ்.ராமன், சென்னை-17.

‘‘எதுக்குய்யா ஹெலிகாப்டர்ல பிரசாரத் துக்கு போகலாம்னு சொல்றே?’’
‘‘அதைப் பார்க்கற ஆர்வத்துலயாவது நமக்குக் கூட்டம் சேரலாம்ல தலைவரே, அதான்!’’
- பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.

‘‘தலைவர் மேல என்ன புகார்..?’’
‘‘தொகுதி வாக்காளர் எண்ணிக்கையைவிட அவர் கொடுத்த வாக்குறுதிகளோட எண்ணிக்கை அதிகமாம்..!’’
- அம்பை தேவா, சென்னை-116.

‘‘தலைவர் பேச ஆரம்பிச்சா நிறுத்தவே மாட்டார்...’’
‘‘அப்புறம்?’’
‘‘வீச ஆரம்பிச்சாதான் நிறுத்துவார்..!’’
- பர்வீன் யூனுஸ், சென்னை-44.

‘‘அடுத்து அமையவிருக்கும் ஆட்சி, ஊழல் இல்லாத நேர்மையான, நாணயமான, நல்லாட்சியாக இருக்கும்...’’
‘‘அப்போ நம்ம ஆட்சி அமையாதா தலைவரே?’’
- கே.ஆனந்தன், தர்மபுரி.

‘‘நள்ளிரவுல ஓட்டுக் கேட்க போறீங்களே... ஏன் தலைவரே?’’
‘‘தூக்கத்துல நடக்கறவங்ககிட்ட இப்பதான்யா கேட்கணும்!’’
- அம்பை தேவா, சென்னை-116.

வாக்குச் சாவடியில போய் ஒருத்தர் எந்த கட்சிக்கும் ஓட்டு போடலாம், நோட்டா ஓட்டும் போடலாம். ஆனா ‘அனுதாப ஓட்டு’ன்னு தனியா போட முடியுமா?
- தேர்தல் தத்துவங்களைச் சொல்லி ‘சா(க)வடி’ப்போர் சங்கம்
- ஜே.கமலம், நெல்லை.