ஹாலிவுட் பாலிவுட் ஜாலிவுட்



அமெரிக்காவிலும் கனடாவிலும் நீலப்படங்களில் நடித்து ‘வேறு மாதிரி’ புகழ் பெற்றாலும், தாய்மண்ணான இந்தியாவில் நல்ல ரோல்களில் நடித்து பெயர் வாங்க ஆசைப்பட்டார் சன்னி லியோன். ஐட்டம் டான்ஸ் ஆடும் வாய்ப்புகள்தான் அவருக்கு  வருகின்றன. ‘‘எனக்கு என்ன குறைச்சல்?

நான் கதாநாயகியாக நடிக்கக் கூடாதா?’’ என அவர் ஆதங்கப்பட்டார். ‘‘சன்னி லியோன் ஹீரோயினாக நடிக்கும் திறமை உள்ளவர்’’ என சல்மான் கானும் ஷாருக் கானும் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் பாலிவுட் நடிகைகள்தான் அவருடன் பேசவோ, சேர்ந்து நடிக்கவோ தயங்குகிறார்கள்.

வசதிகள் இருந்தா லும் எளிமையாகவே வாழ்கிறார் ஆனி ஹேதவே. கடந்த வாரம் லாஸ் ஏஞ்சல்ஸ் மார்க்கெட்டில் 80 டாலர் விலை போட்டிருந்த ஒரு பழமையான கூலிங் கிளாஸை பேரம் பேசி 55 டாலருக்கு வாங்கினார் அவர்.

14 வயது முதல் மாடலிங் செய்கிறார் மிராண்டா கெர். 30 வயதில், 3 வயதுக் குழந்தைக்கு தாயாக இருக்கும் தருணத்திலும் ஆண்டுக்கு 48 கோடி ரூபாய் சம்பாதிக்கிறார். ‘‘ஆனாலும் ஏதோ ஒரு கட்டத்தில் ரசிகர்களுக்கு நான் அலுத்துப் போகக்கூடும். அதற்கு முன்பாகவே நான் ஓய்வு பெற்று விடுவேன்’’ என்கிறார் மிராண்டா.

சோனம் கபூரின் அம்மாவுக்கு கடந்த வாரம் பிறந்த நாள். குடும்பமே அதைக் கொண்டாட துபாய் போய் விட்டது. ஷூட்டிங் முடித்து சோனம் அங்கு போய் இணைந்துகொள்வதாக பிளான். ஆனால் அவர் நடித்த விளம்பரப் படத்தின் ஷூட்டிங் எதிர்பாராமல் இழுத்தடிக்க, அம்மாவின் பிறந்த நாள் பார்ட்டியில் பங்கேற்க முடியவில்லை. அம்மாவுக்குப் பிடித்த அழகு நகைகளும் காஸ்ட்லி ஹேண்ட் பேக்கும் வாங்கிக் கொண்டு மறுநாள் போய் அம்மாவை சமாதானப்படுத்தினார் சோனம்.

இதுவும் இன்னொரு ஃபீலிங் மேட்டர்தான்! ஜாக்குலின் ஃபெர்னாண்டஸின் அம்மா பஹ்ரைனில் இருக்கிறார். ‘கிக்’ பட ஷூட்டிங் இடைவெளி இல்லாமல் நடப்பதால், அம்மாவின் பிறந்த நாளில் அருகில் இருக்க முடியவில்லை அவரால். ‘‘ஷூட்டிங் முடிந்த அடுத்த நாளே பறந்து போய் அம்மாவோடு கொண்டாட வேண்டும்’’ என ஃபீல் பண்ணியபடி நடித்துக் கொண்டிருக்கிறார் ஜாக்குலின்.