நியூஸ்வே



கிளாமரில் ஒரு கை பார்த்துவிடுவது என்ற முடிவோடுதான் இருக்கிறார் மனீஷா யாதவ். லேட்டஸ்ட்டாக டூ பீஸ் போட்டோஷூட் எடுத்து டாப் லிஸ்ட் இயக்குனர்களுக்கு அனுப்பியிருக்கிறார். தற்போது அவர் சுசீந்திரனின் ‘வெண்ணிலா கபடிக்குழு’ இரண்டாம் பாகத்தில் ‘அங்காடி தெரு’ மகேஷ் ஜோடியாக நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

இப்போது ஜோதிடம் பார்த்துத்தான் எல்லா முக்கியமான விஷயங்களை முடிவு செய்கிறார் வடிவேலு. செவ்வாய், வெள்ளி மட்டும் கண்டிப்பாக அசைவத்தை விலக்கி விடுவார். மற்ற நாட்களில், ஊரிலிருந்து வரும் அயிரை மீன் குழம்பு அவரது ஃபேவரிட்!

அஜித்திற்கு கார் ரேஸ், மலைப் பாதையில் வேகமாக கார் ஓட்டுவது எல்லாம் பிடிக்கும். அதோடு அவருக்கு துப்பாக்கி சுடுவதிலும் அலாதியான விருப்பம் உண்டு. வேட்டைக்குப் போய் விலங்குகளைச் சுடும் பழக்கம் இல்லை. பாதுகாப்புக்காக முன்பு பாயின்ட்-32 பிஸ்டல் வைத்திருந்தார். இப்போதும் வைத்திருக்கிறாரா என்பது தெரியவில்லை.

எந்த புது இயக்குநர் ஜெயித்தாலும், ஆபீசுக்கு அழைத்து பாராட்டி, மேற்கொண்டு ஏதாவது கதையிருக்கா எனக் கேட்டு அவர்களைப் பிடித்து வைக்கிறார் தனுஷ். இனி ஒருபோதும் தோல்வி அடையக்கூடாது என்ற எண்ணம்தான் காரணம்.

அமலாபாலுக்கு சமையல் சுட்டுப் போட்டாலும் வராது. டைரக்டர் விஜய்க்கு உணவு வகைகளில் ஆர்வம் அதிகம். இப்போதே அம்மாவிடம் அமலாவைக் கூட்டிப் போய் விட்டு விட்டார் விஜய். தினசரி ஒரு அயிட்டம் வீதம் விஜய்க்கு பிடித்தமான வகைகளை சொல்லித் தருகிறார் அம்மா.

ஹீரோயின் யார் என்கிற பெரிய இயக்குனர்களின் டிஸ்கஷன்களில் எல்லாம் வாணி கபூர் பெயர் அடிபடுகிறது. ஆனால் தமிழில் மேனேஜர் வைத்துக்கொள்ளாமல் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதால் வாய்ப்புகள் வந்த வழி போய் விடுகின்றன. மும்பை ஏஜென்சி ஒன்றே வாணியின் தேதிகளை கவனித்துக்கொள்கிறதாம்.

ஹரி படத்தை முடித்த கையோடு தனது சொந்த பேனரில் உடனடியாக ஒரு படத்தை ஆரம்பிக்கிறார் விஷால். இதில் விஷாலின் ரோல் தயாரிப்பாளர் மட்டுமே. விக்ராந்தை ஹீரோவாக்கி அவருக்கு ஒரு பிரேக் தர திட்டமிட்டிருக்கிறார் விஷால்.

கிளாமர் கொள்கையில் மனீஷாவின் எதிர்வீட்டில் இருக்கிறார் ‘சாட்டை’ மகிமா. ‘என்னமோ நடக்குது’ படத்துக்கு கிடைத்த நல்ல பெயர், மகிமா காட்டில் பட மழை பெய்ய வைத்துள்ளது. எனினும் கிளாமர் ரோல் என்றால் ‘மாட்டேன்’ என்று தலை ஆட்டுகிறாராம். ஆசிரியர் பணியில் இருக்கும் அவரது தாயாரே, மகிமாவை கிளாமரில் எல்லைக்கோடு தாண்டாமல் பார்த்துக்கொள்கிறார்.

தேர்தல் முடித்த கையோடு, சீட் என்ன வரும் என்றெல்லாம் கணக்குப் பார்க்கவில்லை விஜயகாந்த். மகன் நடிக்கும் ‘சகாப்தம்’ படத்திற்காக எழுதப்பட்ட வசனங்களை சரி பார்க்கிறார். தேவைப்பட்டால் வசனகர்த்தா வேலுமணியிடம் ‘‘எனக்கு இந்த மாதிரி வேணும்’’ எனச் சொல்லிக் கேட்கிறார். பையன் இன்னும் மெலிந்துவிட்டதால் அடுத்த மாதமே ஷூட் போகிறார்கள்.

கிசுகிசு கிளம்புவதற்கு வாய்ப்பாக, மீண்டும் சேர்ந்து நடிக்கிறது சிவகார்த்திகேயன் - ஸ்ரீதிவ்யா ஜோடி. படத்தின் பெயர் ‘டாணா’. சைலன்ட்டாக தயாராகி வரும் இந்த புதிய படத்தில் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ டீமே மறுபடியும் கைகோர்த்திருக்கிறது.

‘கத்தி’ படப்பிடிப்பில் நடந்த சமந்தாவின் பிறந்த தினத்திற்கு யூனிட்டே கொண்டாடி கேக் வெட்டியிருக்கிறார்கள். ஆனால், அந்தச் சமயம் செல்போனில் ‘ஹேப்பி
பர்த் டே டூ யூ’ பாடியது ‘காவியத் தலைவன்’தான். அடுத்த கல்யாணம்!

சமீபத்தில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனை பார்த்த எம்.எஸ்.வி, ‘‘நல்லா பண்றே... வாழ்த்துகள்’’ எனப் பாராட்டினாராம். எப்போதும் மனசு விட்டுப் பாராட்டுவதில் எம்.எஸ்.விக்கு ஈடு இணை இல்லை. யுவன்ஷங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், தேவா என பெருந்தன்மையாக எல்லோரது இசையிலும் பாடி இருக்கிறார் எம்.எஸ்.வி. அடுத்த மாதம் அவருக்கு 87 வயது தொடங்குகிறது.

‘‘வில்லங்கம் இருக்கக்கூடாது, விலையும் கம்மியா இருக்கணும், தெற்கு பார்த்த வாசல், தென்னை மரங்கள் இருக்கணும்...’’ - இதெல்லாம் சென்னையில் சொந்த வீடு வாங்க ரியல் எஸ்டேட் பார்ட்டிகளுக்கு நந்திதா போட்ட கண்டிஷன்கள். ‘அட்டக்கத்தி’ வெற்றியில் பிடித்த அதிர்ஷ்டத்தால் அவரது காட்டில் இப்போது அடை மழை. அரை டஜன்
படங்களில் நடித்து வருகிறார்.

பாகவதர் கிராப் வளர்ப்பதால் நிகழ்ச்சிகளுக்கோ, வெளியிடங்களுக்கோ சசிகுமார் வருவதை தடை செய்திருக்கிறார் பாலா. கரகாட்ட பயிற்சியும் வீட்டிலேயே நடப்பதால், அய்யா இந்த வெயிலுக்கு நல்ல ரெஸ்ட். ஏ.சியிலேயே இருப்பதால் சிவப்பாக நிறம் மாறி வருகிறார் சசி. ஷூட்டிங்கிற்கு பிறகு நிறம் மாறிடுமே, பரவாயில்லையா?

பார்த்திபன் எடுக்கும் புதுப் படத்தில் விஜய் சேதுபதியோடு இப்போது சிவகார்த்திகேயனும் சேர்ந்திருக்கிறார். அனேகமாக ஷாரூக்கின் ‘ஓம் சாந்தி ஓம்’ படத்தில் பத்து ஹீரோ, ஹீரோயின்கள் சேர்ந்ததுபோல இதிலும் பலரை நடிக்க வைக்க முயற்சி செய்து வெற்றி கண்டு விடுவார் என்கிறார்கள். எப்போதும் பார்த்திபன் என்றால் வித்தியாசம்தான்.