சமத்தா பேசிய சமந்தா!



மனக்குறை நீக்கும் மகான்கள்’ அமானுஷ்ய ஆன்மிகத் தொடர், எடுத்ததுமே டாப் கியரில் பயணிக்கிறது. அதிலும், ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகளின் சரிதம் படித்துப் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று!
- தி.தெ.மணிவண்ணன், அங்கலக்குறிச்சி.

பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கான தடைக்கு, தென் தமிழகத்தின் இயல்பு வாழ்க்கையைக் குலைக்கும் வெளிநாட்டுச் சதியும் ஒரு காரணம் என்பது பகீர் தகவல்!
- கவியகம் காஜூஸ், கோவை.

இயற்கை நமக்கு அளித்த விருந்தும் மருந்தும் தேன். சென்னை சிட்லபாக்கம் சுவாமிநாதன்
தேனீயைப் பற்றிக் கூறிய செய்திகள் ஒவ்வொன்றும் சுவாரஸ்யம்! படித்தேன், ரசித்தேன், சிந்தித்தேன்!
- சி.கொ.தி.முருகேசன், குன்னத்தூர்.

முதலில் பார்ப்பது தோற்றம், பின்னர் கவனிப்பது அதையும் தாண்டிய குணங்கள், பழகும் முறை... இந்த நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்கிவிட்டது, ‘சிம்மட்ரிக்’ முகக் கோட்பாடு!
- எஸ்.ஜானகி, உடுமலைப்பட்டை.

‘சொந்த ஊர் கேரளா... ஆனால், மலையாளப் படத்தில் நடிக்க முடியலையே’ என சமந்தா சொன்னதுமே ஒரு மலையாளப் படம் புக் ஆயிடுச்சே! சமத்தா பேசி சிக்ஸர் அடிச்ச சமந்தாவுக்கு வாழ்த்துகள்!
- கே.பி.ரங்கா, திருப்பூர்.

இந்த வாரம் ஆல்தோட்ட பூபதியின் குட்டி நீதிக் கதை வெகு ஜோர். என்ன தான் எல்லாவற்றையும் நக்கல் கமென்ட் அடித்தாலும் மன்மோகன் சிங்கைப் பாராட்டி பத்து வரி எழுதியிருப்பது பளிச்!
- எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

 நடுத்தர வர்க்கத்தினரிடையே அவ்வளவாக அறியப்படாத, இயற்கை அழகு கொஞ்சும் மேக
மலையின் பெருமைகளை வெளியிட்டிருந்தது, சுற்றுலா ஆர்வலர்களை துள்ளிக் குதிக்க வைத்துவிட்டது!
- இரா.வளையாபதி, கரூர்.

‘ஆன்லைனில் ஓட்டு’ பற்றிய செய்தி ஒவ்வொன்றும் பிரமிப்பு! இந்த டெக்னாலஜி விரைவில் செயல்பட்டால், வெளிநாடுகளில் வேலை பார்ப்பவர்களும் ஓட்டு போட வசதியாக
இருக்கும்.
- எஸ்.சுந்தரம், மதுரை.

என்னது... தமன்னாவே தயங்கும் அளவுக்கு ஒரு டூ பீஸ் பிகினியா? இந்தி சினிமாவில் டெக்னாலஜி ரொம்ப முன்னேறிவிட்டது என்றார்கள். தமிழ்நாட்டு கவர்ச்சிப் புயலை கட்டுப்பெட்டியாகப் பார்க்கும் அளவுக்கு கலாசாரம் முன்னேறியதை சொல்லவே இல்லையே!
- சாரதி, விழுப்புரம்

 மெய்யை பொய்யில்லாமல் உண்மைத் தன்மையுடன் படம் பிடிப்பதில் வசந்தபாலன் கெட்டிக்காரர். அவர் இயக்கத்தில், அவ்வை சண்முகம் ‘காவியத்தலைவ’னாய் சாதிப்பார். சந்தேகமில்லீங்க!
- ஆர்.கே.லிங்கேசன்,
மேலகிருஷ்ணன்புதூர்.