facebook வலைப்பேச்சு



பெரிய மனுஷங்க பெரிய மனுஷங்க தான். நானெல்லாம் ஓட்டலுக்கோ, பெட்டிக்கடைக்கோ போனா, கேட்டதை உடனே தரலைன்னா கோபம் வந்துருது. ஆனா பாருங்க... இந்த பீட்சாவுக்கு ஆர்டர் பண்ணினவங்க மணிக்கணக்கானாலும் பொறுமையா காத்திருக்காங்க.
- கார்ட்டூனிஸ்ட் முருகு

இப்போதெல்லாம் திருமணத்தில் மொய் எழுதுவதை விட, 10க்கு 12 என பக்கத்துக்கு ஒரு ஃப்ளக்ஸ்தான் நண்பனுக்குச் செய்யும் பெரிய கௌரவமாய் ஆகிப் போனது!
- மன்னை முத்துக்குமார்

எத்தனையோ ‘ஆகக் கஷ்டமான’ விஷயங்கள் இருக்கின்றன. நன்கு அறிமுகமான ஒருவரை, மனஸ்தாபத்துக்குப் பின், தெரியாதவர் போல நடிப்பது அதில் முதன்மையானது.
- விக்னேஸ்வரி சுரேஷ்

மனக்குளத்தில் போகிறபோக்கில் எறிந்து விட்டுப்போகிறார்கள் சிறு கூழாங்கல்லை. நீந்திக் கிடக்கின்ற நோக்கமில்லா எண்ண மீன்களைக் கலைத்துவிட்டு சிறிதும் பெரிதுமான வளையங்களாக எண்ண அலைகள் வியாபிக்கின்றன மனம் எங்கும்.
- ஸ்ரீப்ரியா எஸ் பி

ஒருத்தரு ஒரு பழைய டிவிஎஸ்50ல மனைவி, முன்னாடி ரெண்டு குழந்தைங்க, பின்னாடி ஒரு குழந்தை, மனைவி மடியில் ஒரு குழந்தைன்னு உக்கார வச்சு கஷ்டப்பட்டு ஓட்டிட்டுப் போறாரு.
# இப்படி கஷ்டப்பட்டு வண்டியை கன்ட்ரோல் பண்றதுக்கு பதிலா, நீ கொஞ்சம் கன்ட்ரோலா இருந்திருக்கலாம்ல...
- பூபதி முருகேஷ்

மண்ணெண்ணெய் மானியம் நிறுத்தி வைப்பு: செய்தி
# ஐயோ, இனி எப்படி தொண்டர்கள் தீக்குளிக்க முடியும்!
- வெங்கடேஷ் ஆறுமுகம்

ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 27 பேரை இலங்கைக் கடற்படையினர் இன்று கைது செய்தனர்: செய்தி
# திருப்பதியில் லட்டு வாங்கி அதை அல்வாவா மாத்தி கொடுப்போமில்ல..!
- வெங்கடேஷ்
ஆறுமுகம்

வெற்றி பெற்றவனிடம் ஆலோசனை கேட்காதீர்கள். தோல்வியடைந்தவனிடம் கேளுங்கள். ‘நீயாவது ஜெயிக்கப் பாரு’ என ஆலோசனை தருவான்.
- அம்புஜா சிமி

வெற்றி பெற்றவனிடம் ஆலோசனை கேட்காதீர்கள். தோல்வியடைந்தவனிடம் கேளுங்கள். ‘நீயாவது ஜெயிக்கப் பாரு’ என ஆலோசனை தருவான்.
- அம்புஜா சிமி

அமைதிப்படை அமாவாசையாட்டம் வானம் மர்மமா
சிரிக்குது. மழை வருமா, வராதா?
- தேசாந்திரி
வழிப்போக்கி

twitter வலைப்பேச்சு

@RavikumarMGR
குருமாவில் மிதக்கப் போகிறோமா, பிரியாணியில் வேகப் போகிறோமா என்பதைக் கோழிகள் தீர்மானிப்பதில்லை!

@kattathora 
உலகத்திலயே சிறந்த உணவு இட்லியாம், மோசமான உணவு ஊறுகாயாம்!
# ரெண்டுத்தையும் தமிழன்தான்யா கண்டுபுடிச்சிருக்கான்.

@dlakshravi
ஒண்ணு இங்க இருக்கு, இன்னொண்ணு எங்க?’’ காமெடி டயலாக் சீரியஸாகக் கேட்கப்படும் காலை நேரங்கள்...
# ரிப்பன், சாக்ஸ்

@WhoNvrCares  
கார்த்திக்கும் வந்தாச்சு; குஷ்புவும் வந்தாச்சு. அப்டியே மத்தவங்களையும் கூப்பிட்டாச்சுன்னா ‘வருஷம் 16 பார்ட் 2’ எடுத்துரலாம்...
# காங்கிரஸ்

@indirajithguru
ஒழுக்கம் சொல்லிக் கொடுக்காத பெற்றோர்கள், தாங்கள் நுழையப் போகும் முதியோர் இல்லத்திற்கு செங்கல் எடுத்துக் கொடுக்கும் சித்தாள்கள்!

@sundartsp 
‘விவசாயத்தை உயர்த்துவோம்’ என்பதை மாடியில் காய்கறிகள் போடுவது என்று நகரத்தில் புரிந்து வைத்துள்ளோம்!

@ArunothayamG 
 உலக வரைபடத்தில் மட்டும்தான் இந்தியாவின் காலடியில் கிடக்கிறது இலங்கை. மற்றபடி...

@Mr_vandu   
சில புத்தகங்கள் அறிவைத் தருகின்றன, சில புத்தகங்கள் தூக்கத்தைத் தருகின்றன, சில பல புத்தகங்கள் பேரீச்சம்பழத்தைத் தருகின்றன.

@writernaayon
திருவிழாக்களில் விற்கும் பலூன்களுக்குள் நிறைய குழந்தைகளின் ஏக்கப் பெருமூச்சும் அடங்கியிருக்கலாம்.

@Lorrykaran
தற்கொலை முயற்சி இனி குற்றமில்லை: மத்திய அரசு # அப்பிடியே இந்த கொலை முயற்சியும் குற்றமில்லைன்னு சொல்லிட்டா, ஒரு நாலஞ்சு பேர போட்றலாம்!

@pattaasu   
அவரவர் சொந்தப் பிரச்னையை, சமூகப் பிரச்னையாக மாற்றத் தெரிந்தவர்கள்தான் அரசியல்வாதிகள்.

@suryanashok
ஆபீஸ் மீட்டிங்கில் மிகவும் யோசிக்க வைப்பது, இவ்ளோ பெரிய கான்ஃபரன்ஸ் டேபிளை எப்படி இந்த சின்ன வாசல் வழியா உள்ளே கொண்டு வந்து வச்சிருப்பாங்க!

@senthilcp
நைட்டி அணிந்து கடைக்கு வந்தால் ரூ. 500 அபராதம். மகாராஷ்டிரா வில் அதிரடி! # தமிழ்நாட்டில் இந்தத் திட்டம் அமலுக்கு வந்தா அரசுக்கு நல்ல வருமானம்

@SettuSays   
ஒருத்தன்கிட்ட ஒரு வாரமா கன்னடத்துல பேசிட்டு இருந்திருக்கேன். இன்னிக்குத்தான் தெரியுது, அவன் தெலுங்குன்னு!

@karunaiimalar   
எல்லாவற்றையும் பொறுத்து மௌனமாக இருப்பவனை ஊமை என்று நினைத்து விடுகிறது இந்த உலகம்!

@revathy_rr 
உலகில் மிக அதிக முறை மொழிபெயர்க்கப்பட்ட மொழி மௌனம்தான். அடிக்கடி தவறாக மொழிபெயர்க்கப்படும் மொழியும் கூட...