facebook



டாஸ்மாக்ல கூடுற கூட்டத்த பாத்தா, மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் வருங்காலத்தில ஆட்சி அமைக்கக் கூட வாய்ப்பு உள்ளது!
- நிக்கோலஸ் கோபர்நிக்கஸ்

கரும்பு நட்டேன்
விற்கவில்லை
கம்பு நட்டேன்
விற்கவில்லை
நெல் நட்டேன்
விற்கவில்லை
கடைசியில்
கல் நட்டேன்
விற்றுவிட்டது!
- பேராசிரியர்
அப்துல் காதர்

இங்கே பெய்யும்
மழை
எங்கோ சூரியன்
உறிஞ்சிய
நீர்
- கலாப்ரியா

எனது ஒரு கன்னத்தில் அறைவதற்கு முன், உங்கள் இரண்டு கன்னங்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்...
- நந்தினி ஆர்.மூர்த்தி

டயட்டிங்ல முழு மூச்சா இறங்கணும் என்னும்போதுதான் வரிசையா திருமண அழைப்பிதழ்கள்...
- சுப மோகன்

ராணித் தேனீக்கு கூட்டைத் தாண்டி உலகம் இல்லை
- சுஜாதா செல்வராஜ்

உண்டியலில் காசு போடத் துடிக்கும்
குழந்தைக்கு வேண்டுதல்கள் இருப்பதில்லை!
- அதிஷா அதிஷா

நிசம்மாவே ஒரு டவுட்டு...
அத்தனூண்டு
வாட்ச் 3000
ரூபாய். அத்தன பெரிய வால் க்ளாக்
500 ரூபாய்.
ஏன் அப்படி?
- ஹன்சா ஹன்சா

மங்கோலியாவுக்கு ஆறாயிரம் கோடி இந்தியா கடன் உதவி - செய்தி
# அவனவன் ரெண்டு லட்ச ரூவா லோன் வாங்க நாயா அலையிறான்... ஆட்டக்காரிக்கு ஐந்நூறு ரூவா!
- ரிட்டயர்டு ரவுடி

எங்க வீட்ல மாதிரி எத்தனை வீட்ல சாம்பாருக்கும், ரசத்துக்கும் ஒரே கரண்டியோ?
# கடவுளே... இந்த ஒத்தக் கரண்டி ஃபார்முலாவுல இருந்து என்னையக் காப்பாத்து!
- தினேஷ் பழனிச்சாமி

கோடை மழை என்பது வராத கடன் வர்றதுக்குச் சமம்!
- ஈரோடு கதிர்

இனிமேல் சீனத் தயாரிப்புகளில் Made in China என்பதற்கு பதிலாக Modi in China என அச்சடிக்கப்படும் என சீன அரசு ஒப்பந்தம் போட்டிருக்கிறது!
- யுவ கிருஷ்ணா

கிராமங்களை ஒழித்தால் சாதியை ஒழிக்கலாம் என்ற நம்பிக்கையில்... ஒழிந்தது பட்டாம்பூச்சிகள் மட்டுமே!
- வாசு முருகவேல்

ஒரு டவுட்டு... ஒருவரே பிரதமராகவும் உலக நாடுகளுக்கான தூதராகவும் இரண்டு பதவிகளை
வகிக்கலாமா?
- கணேசன் கோதண்டராமன்

“எங்கப்பா மோடி மாதிரி...”
“ரீல் விடாத... அவ்ளோ பெரிய ஆளா?”
“வீட்லயே இருக்கமாட்டார்டா...”
- கார்ட்டூனிஸ்ட் முருகு

twitter

@KillerCharmz 
பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட என்று சொல்வதைவிட, ‘‘பெரியோர்களால் பேரம் பேசி முடிவு செய்யப்பட்ட’’ என்று சொல்வதுதான் சரி!
# அரேஞ்டு மேரேஜ்

@anithakanda 
யார் சரி என்று பார்க்காதீர்கள்; எது சரி என்று பாருங்கள்!

@Ramya_muralii 
விடையைத் தேடி அலைகிறேன்... கிடைத்துவிடுமோ என்ற அச்சத்துடன்!

@BulletJackie 
‘தேவர் மகன்’ கமல் மாதிரி கம்பு சுத்தலாம்னு நினைக்கும்போதெல்லாம் வாழ்க்கை வாய்லயே குத்தி ‘குருதிப் புனல்’ கமல் மாதிரி உட்கார வச்சிடுது!

@kattathora 
போண்டாக்குள்ள முழு முட்டை இருக்குறத பாக்குற நிம்மதி இருக்கே... ஏசப்பா!

@karunaiimalar 
மனிதர்கள் இரண்டு வகைதான்... ஜெம்ஸ் சாக்லேட் பாக்கெட்ட பிரிச்சு மொத்தமா ஒரே வாய்ல போட்டு சாப்புடறவங்க; இல்ல, ஒண்ணு ஒண்ணா ரசிச்சு சாப்புடுறவங்க!

@iam_kajin 
குழந்தைகள் வீடு வரைந்தால் பக்கத்திலே ஒரு மரத்தை வரைகிறார்கள். ஆனா பெரியவனாகி வீடு கட்டும்போது மரம் வைக்க மறக்கிறார்கள்!

@k_kirukkan 
ஹோட்டல் திறக்கப் போனா ரிப்பன் வெட்டச் சொல்றீங்க... பில்டிங் கட்ட கல்லு நாட்ட சொல்றீங்க... கல்யாணத்துக்கு மட்டும் தாலி கட்டக் கூடாதா..!

@umakrishh 
பலருக்கு குழந்தைகளிடம் ‘‘நல்லா படிக்கிறியா?’’ என்ற விசாரணையைத் தவிர பேசுவதற்கு வேறு இருப்பதில்லை!

@Iniyavan_Voice 
அம்மா அழைத்தால் இப்போதே அதிமுகவில் சேரத் தயார்- பவர் ஸ்டார்
# குனிஞ்சு நின்னுட்டே இருந்தா ‘விக்’ விழுந்துட்டே இருக்குமே தல?

@manipmp 
ஒரு நல்ல புகைப்படத்தின் ஆயுள், மொபைலில் ‘மெமரி ஃபுல்’ என்று காட்டும் வரைதான்..!

@mymindvoice 
எனக்கு ஆசையெல்லாம் எதுவுமே இல்லை... இருப்பதெல்லாமே தேவைகள்தான்!

@shanth_twits 
மகளிர் கல்லூரி ஒட்டிய பேருந்து நிறுத்தத்தை இத்தனை வேகமாய் கடந்திடும் யுவனொருவனின் ஈர்ப்பு வேறெதுவாய் இருக்குமென யோசித்துக்
கொண்டிருக்கிறேன்.

@nadunishi_ 
ஏழைகளின் கவலைகளையெல்லாம் கடவுளிடம் சொல்லும்போது, கடவுள் ஹெட்செட்டை அணிந்து கொள்கிறாரோ என்ற எண்ணம்
மனதுக்குள் தோன்றுகிறது!

@rajakumaari 
அருணாவின் மறைவு சொல்வது ஒன்றே ஒன்றுதான்... இந்தியாவில் பெண்கள் சுயமரியாதையோடு வாழவும் முடியாது; சாகவும் முடியாது!

@r_vichu 
சில பேர் 100 ரூபாய் செலவு செய்து கடவுளை பாக்கறாங்க. சில பேர் அந்த 100 ரூபாயையே கடவுளா பாக்கறாங்க.