நியூஸ் வேஇப்போது பெங்களூருவில் வசித்து வரும் நிக்கி கல்ராணி, ஃபேஷன் டிசைனிங் படித்தவர். ‘‘முதல்ல சயின்ஸ் சப்ஜெக்ட்தான் எடுத்துப் படிச்சேன். இன்ஜெக்‌ஷன், பிளட் இதெல்லாம் பார்த்ததும் பயந்து ஃபீல்டு மாறிட்டேன்!’’ என்கிறது இந்த டார்லிங்!

`இது நம்ம ஆளு’, ‘ஹைக்கூ’ என இரண்டையும் முடித்துவிட்ட பாண்டிராஜ், அடுத்து விஷால் நடிக்கும் படத்தைத் துவக்கிவிட்டார். அவரது வேகத்தைப் பார்த்து விஷாலே பிரமித்து நிற்கிறாராம்.

பல கோடி ரூபாயில் பிரமாண்ட வீடு கட்டியிருக்கிறார் எனக் கிளம்பிய தகவலால் அதிர்ந்திருக்கிறார் சிவகார்த்திகேயன். ‘‘சென்னை பக்கத்துல பனையூரில் வீடு கட்டியிருக்கேன். எங்க பரம்பரையிலேயே அப்படி யாரும் வீடு கட்டலை. அதுக்காக பல கோடி பிரமாண்ட வீடுன்னு கிளப்பி விட்டுட்டாங்க. நிறைய கடன் வாங்கித்தான் வீடு கட்டியிருக்கேன்’’ என்கிறார் சிவா.

அட்லி இயக்கும் விஜய் படத்துக்கு ஷூட்டிங் முழுவதும் சென்னையில்தான். பின்னணி இசைக்காக மட்டும் ரஷ்யா செல்ல திட்டமிட்டுள்ளனர்.

‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’வில் ஹீரோயின் ஆனந்தியின் கேரக்டர் பெயர் நயன்தாரா. ‘ஷூட்டிங்ல எல்லாரும் என்னை சின்னப் பொண்ணு மாதிரி பார்த்துக்கறாங்க’ என ஆனந்தி யூனிட்டில் ஆனந்தப்பட, ‘‘பார்த்தும்மா.. சின்னப் பொண்ணுன்னு சம்பளத்துக்கு பதில் சாக்லெட் தந்துடப்போறாங்க’’ என கலாய்த்திருக்கிறார்கள் தோழிகள்.

அஜித்தும் ஸ்ருதி ஹாசனும் இப்போது இத்தாலியில் உள்ள மிலன் நகரில் டூயட்டாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆட்டம் முடிந்ததும்,  கொல்கத்தா பறக்கின்றனர். அங்கிருந்துதான் அஜித்தின் ஆக்‌ஷன் போர்ஷன் ஆரம்பிக்கிறது.

ரம்ஜான் நோன்பை முன்னிட்டு இஸ்லாமிய நண்பர்களுக்கு இப்தார் விருந்து வைத்திருக்கிறார் விஜய். விருந்தில் விஜய்யும் கலந்துகொண்டு தன் கைப்பட உணவு பரிமாறி மகிழ்ந்திருக்கிறார்.

நாகார்ஜுனாவுடன் கார்த்தி, தமன்னா நடித்து வரும் படத்தின் ஷூட்டிங் இப்போது செர்பியாவில் நடக்கிறது. அடுத்து இந்த டீம் பிரான்ஸ் செல்கிறது. கார்த்தியுடன் அவரது மனைவி ரஞ்சனியும் உடன் சென்றிருக்கிறார்.

`ரஜினி முருக’னை சங்கடமில்லாமல் திரையில் கொண்டு வரும் முயற்சியில் லிங்குசாமி இறங்கிவிட்டார். அதனால், பிற படங்களின் வெளியீட்டையும் தள்ளி வைத்திருக்கிறார். சில நடிகர்கள் அவருக்கு கால்ஷீட் வழங்க ரெடியாக இருக்கிறார்கள்.

‘உத்தம வில்ல’னால் சோர்ந்து போயிருந்த கமலுக்கு ‘பாபநாசம்’ ஹிட்  உற்சாகம் அளித்துள்ளது. மீடியாவிற்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி அரங்கில் ‘பாபநாசம்’ படத்தில் இடம்பெற்ற காட்சிகளையும், கேரக்டர்களையும் செட் போட்டு  கண் முன்னே கொண்டு வந்து, தனது சந்தோஷத்தைப் பகிர்ந்திருக்கிறார் கமல்.

தெலுங்குப் பட ஷூட்டிங்கின் நடுவே சின்னதொரு ஹாலிடே கிடைக்க, குடும்பத்தினரோடு கலிபோர்னியா ட்ரிப் அடித்து வந்திருக்கிறார் காஜல் அகர்வால். அங்கே தங்கை நிஷா அகர்வால் வீடு இருப்பதால், இது டூர் அல்ல... ஃபேமிலி கெட் டுகெதர். தங்கையின் அன்பில் திளைத்து திரும்பியிருக்கிறது பொண்ணு!

ஸ்ரேயா ரெட்டி மறுபடியும் முழு வேகத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். ‘‘அக்கா, தங்கை கேரக்டர் மாதிரி இல்லாமல் மெயின் கேரக்டர் அல்லது ஹீரோயினாக மட்டுமே நடிப்பேன்’’ என சொல்லிவிட்டாராம். இப்போது அவர், ப்ரியதர்ஷன் படத்தில் ஹீரோயின்!

கமல் தன்னுடைய கவிதைகளை, சிறுகதைகளைத் ெதாகுத்து வெளியிடப் போகிறார். அதில், சில குறிப்பிட்ட அவரது பேட்டிகளையும் சேர்க்கப் போகிறார். கனமான பெரிய புத்தகமாக வெளிவரப் போகிறது.

மைக்கேல் ஜாக்சன் மகள் பாரிஸ் காதல் வலையில் விழுந்திருப்பதுதான் இப்போது செம வைரல்! ஜாக்சனின் மறைவைத் தாங்க முடியாமல் 2013ல் தற்கொலைக்கு முயன்றவர் பாரிஸ். மறுவாழ்வு மையத்தில் சிகிச்சையில் இருந்தவருக்கு தைரியம் கொடுத்து இணைந்திருக்கிறார் கால்பந்து வீரரான செஸ்டர் காஸ்டெல்லா. இப்போது `லண்டன் பிரிட்ஜ் அண்ட் தி த்ரீ கீஸ்’ என்கிற ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார் பாரிஸ். இந்த ஜோடியின் முத்த செல்ஃபிக்களால் அதிருது ஹாலிவுட்!

மணிரத்னம் அடுத்த ஸ்கிரிப்ட் வேலைக்காக கொடைக்கானலின் பண்ணை வீட்டில் உட்கார்ந்துவிட்டார். தனுஷுக்காக வெயிட்டிங்கில் இருந்த கதைதான் கார்த்திக்காக சில மாறுதல்களுக்கு உள்ளாகிறது. மம்முட்டியும், ஐஸ்வர்யா ராயும் அந்தப் படத்தில் நடிக்கப் போகிறார்கள். அது ஒரு ஸ்பை த்ரில்லர்!

`இன்று நேற்று நாளை’யின் இரண்டாம் பாகம் வரப்போகிறது. தமிழோடு தெலுங்கு, இந்தியிலும் தயாரிக்கிறார்கள். மூன்று மொழிகளிலும் ஒரே ஹீரோதான் நடிக்கப் போகிறார். ரவிகுமார்தான் மூன்று மொழிகளுக்கும் இயக்குநர்.