உயிரி இயற்பியல் படித்தால் வாழ்வில் உயரலாம்



உயிரியலின் அமைப்பு பற்றி ஆராய இயற்பியல் தத்துவங்களையும், செய்முறை களையும் பயன்படுத்தும் ஓர் பல்துறை அறிவியல் பிரிவே உயிரி இயற்பியல் (Biophysics). உயிரியல் மற்றும் இயற்பியல் துறைகளின் இணைப்புப் பாலமாக செயல்படும் இத்துறை இன்றைய நிலையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியிருக்கிறது. உயிரினங்களுக்கு ஏற்படும் நோய்களையும், அவற்றைக் களைவதற்கான தீர்வுகளையும் காண இத்துறை மூலமாகவே ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அறிவியல், மருத்துவத் துறைகளில் ஆர்வமுள்ள மாணவர்கள் இத்துறையை எடுத்துப் படிக்கலாம் என்று கூறுகிற ‘இன்ஸ்பையர் ஃபெல்லோ’ முனைவர் உதயகுமார், இத்துறையில் உள்ள வேலைவாய்ப்புகள், கல்வி வாய்ப்புகள், இத்துறையில் சாதித்த சாதனையாளர்கள், இத்துறை ஆய்வாளர்களை ஊக்குவிக்கும் அமைப்புகள் பற்றி விரிவாக விளக்குகிறார்.

‘‘செல்கள், உயிரினங்கள் மற்றும் உயிரினத் தொகுதிகளில் நடைபெறும் உயிரியல் நிகழ்வுகளுக்கு அடிப்படை ஆதாரமாக விளங்கும் ‘ஜீன்’ (மரபணு) அமைப்பை இவ்வுலகிற்கு கண்டு
பிடித்துக் கொடுத்த துறை உயிரி இயற்பியல் துறைதான். தமிழகத்தில் ‘உயிரி இயற்பியல்’ துறை, இயற்பியல் துறைக்கு இணையாகக் கருதப்படுகிறது. எனவே இத்துறையில் பட்டம் பெறுபவர் இயற்பியல் பேராசிரியராகவும் பணிபுரிய முடியும். மனிதனுக்கு ஏற்படும் நோய்களைக் களைவதற்கான அறிவியல் சார்ந்த மருந்துகளைக் கண்டறியவும், அவற்றின் செயல்பாட்டை கண்டுணரவும் பேருதவியாக விளங்கும் துறை ‘உயிரி இயற்பியல்’. அண்மைக் காலமாகவே இத்துறை பற்றிய விழிப்புணர்வு மாணவர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. பல்வேறு கல்வி நிறுவனங்களில் இப்படிப்புகள் தொடங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.  உயிரி இயற்பியல் துறை சார்ந்த படிப்புகள்/பிரிவுகள்

* ஸ்ட்ரக்சுரல் பயாலஜி,  புரோட்டீன் டைனமிக்ஸ், ஜீன் ரெகுலேஷன், பயோ எனர்ஜெடிக்ஸ், பயோ மெக்கானிக்ஸ்,  மாலிக்குலர் டைனமிக்ஸ், மாலிக்குலர் டாக்கிங், குவாண்டம் கெமிஸ்ட்ரி,  பயோ இன்ஃபர்மேட்டிக்ஸ், புரோட்டீன் ஸ்ட்ரக்சர் ப்ரெடிக்ஷன்
இந்தப் பிரிவுகளில் படிக்கலாம்
B.Sc., M.Sc., M.Phil., Ph.D., B.S., M.S., D.Phil., D.Sc., B.E.,
B.Tech., M.E., M.Tech.,
  இந்தியாவில் சிறந்த உயிரி இயற்பியல் துறையைக் கொண்ட கல்வி நிறுவனங்கள் சில...
* சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை
* பஞ்சாப் பல்கலைக்கழகம், சண்டிகர்
* இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ், பெங்களூரு
* இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, புதுடெல்லி
* இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, மும்பை
* அண்ணா பல்கலைக்கழகம், சென்னை
* ஆல் இண்டியா இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்சஸ், புதுடெல்லி
* இண்டியன் கவுன்சில் ஆஃப் மெடிக்கல் ரிசர்ச், புதுடெல்லி
* ஜே.சி. போஸ் ரிசர்ச் இன்ஸ்டிடியூட், கொல்கத்தா
* இண்டியன் கவுன்சில் ஃபார் அக்ரிகல்ச்சுரல் ரிசர்ச், புதுடெல்லி
உலக அளவில் சிறந்த உயிரி இயற்பியல் துறையைக் கொண்ட கல்வி நிறுவனங்கள் சில...
* யுனிவர்சிட்டி ஆஃப் வாஷிங்டன், அமெரிக்கா (www.washington.edu)
*  யார்க் யுனிவர்சிட்டி, கனடா (www.yorku.ca)
* ஹார்வர்டு யுனிவர்சிட்டி, அமெரிக்கா (www.harvard.edu)
* யுனிவர்சிட்டி ஆஃப் வெஸ்டர்ன் ஒன்டாரியோ, கனடா (www.uwo.ca)
* யுனிவர்சிட்டி ஆஃப் சென்ட்ரல் ப்ளோரிடா, அமெரிக்கா (www.ucf.edu)
* சைனீஸ் அகாடெமி ஆஃப் சயின்சஸ், சீனா (http://english.cas.cn)
* ஸ்டாக்ஹோம் யுனிவர்சிட்டி, ஸ்வீடன் (www.su.se)
*  யுனிவர்சிட்டி ஆஃப் வாட்டர்லூ, கனடா (www.uwaterloo.ca)
* சூச்சோ யுனிவர்சிட்டி, சீனா. (www.suda.edu.cn)
* யுனிவர்சிட்டி ஆஃப் லீட்ஸ், இங்கிலாந்து. (www.leeds.ac.uk)
இந்தியாவில் உயிரி இயற்பியல் துறையில் ஆய்வு செய்து புகழ்பெற்ற ஆய்வாளர்கள் சிலர்...
(இத்துறையில் சாதித்த பல விஞ்ஞானிகள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்)
* டாக்டர் கவிதா யாதவ்
* ஜி.என்.ராமச்சந்திரன்
* ஜே.சி.போஸ்
* கே.ஆர்.கே.ஈஸ்வரன்
* எம்.என்.பொன்னுசாமி
* பி.பலராம்
* டி.பி.சிங்
* எம்.ஆர்.என்.மூர்த்தி
* டி.வேல்முருகன்
* கே.வி.ஆர்.சாரி

உலக அளவில் உயிரி இயற்பியல் துறையில் ஆய்வு செய்து புகழ்பெற்ற வல்லுநர்கள் சிலர்...

கேரி எக்கெர்ஸ்,  டேவிட் அகார்டு, டேவிட் பேக்கர், ஜார்ஜ் வோன் பெகெசி, ஹோவர்டு பெர்க்,  ஹெலன் எம்.பெர்மென், ஜெகதீஷ் சந்திரபோஸ்,  ஏக்ஸெல் பங்கர், ஃப்ரான்சிஸ் க்ரிக், ஜி.என்.ராமச்சந்திரன்.உயிரி இயற்பியல் துறை சார்ந்த ஆய்வுகளை ஒருங்கிணைக்கவும் சாதனையாளர்களுக்கு அங்கீகாரம் பெற்றுத் தரவும்
தொடங்கப்பட்ட அமைப்புகள்/குழுக்கள் சில..

* பிரிட்டிஷ் பயோ பிசிக்கல் சொசைட்டி
* இண்டியன் பயோ பிசிக்கல் சொசைட்டி
* யூரோப்பியன் பயோ பிசிக்கல் சொசைட்டி
* இல்லினாய்ஸ் பயோ பிசிக்கல் சொசைட்டி
* தி பயோ பிசிக்கல் சொசைட்டி ஆஃப் ஜப்பான்
* ஆஸ்திரேலியன் சொசைட்டி ஆஃப் பயோ பிசிக்ஸ்
* பயோ பிசிக்ஸ் சொசைட்டி ஆஃப் கனடா
* பயோ பிசிக்கல் சொசைட்டி ஆஃப் தைவான்,
* பெல்ஜியன் பயோ பிசிக்கல் சொசைட்டி
* தி கொரியன் பயோ பிசிக்கல் சொசைட்டி

உயிரி இயற்பியல் துறையின் சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் பரிசுகள்/விருதுகள்/பதக்கங்கள்...

* நோபல் பரிசு, ஸ்வீடிஷ் அகாடெமி ஆஃப் சயின்சஸ், ஸ்வீடன்
* பிரிட்டிஷ் பயோ பிசிக்கல் சயின்ஸ் சொசைட்டி மெடல், இங்கிலாந்து
* அலெக்ஸாண்டர் ஹொல்லாண்டர் பரிசு, நேஷனல் அகாடெமி ஆஃப் சயின்சஸ், அமெரிக்கா
* ஹெய்நேக்கன் பரிசு, நெதர்லாந்து
* சாஃப்ட் மேட்டர் அண்ட் பயோ பிசிக்கல் கெமிஸ்ட்ரி அவார்ட், ராயல் சொசைட்டி ஆஃப் கெமிஸ்ட்ரி, இங்கிலாந்து
* பேராசிரியர் ஜே.சி.போஸ் டிராவல் அவார்டு, இண்டியன் பயோ பிசிக்கல் சொசைட்டி, இந்தியா
* பேராசிரியர் ஜி.என்.ராமச்சந்திரன் ட்ராவல் அவார்டு, இண்டியன் பயோ பிசிக்கல் சொசைட்டி, இந்தியா
* மேக் ஆலி-ஹோப் அவார்ட், ஆஸ்திரேலியா
* ஜவஹர்லால் நேரு மெடல், இண்டியன் அகாடெமி ஆஃப் சயின்சஸ், புதுடெல்லி, இந்தியா
* யங் சயின்டிஸ்ட் அவார்டு, டிபார்ட்மென்ட் ஆஃப் சயின்ஸ் அண்டு டெக்னாலஜி, புதுடெல்லி, இந்தியா

உயிரி இயற்பியல் துறை படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் நிறுவனங்கள் சில...

* டிபார்ட்மென்ட் ஆஃப் சயின்ஸ் அண்டு டெக்னாலஜி, புதுடெல்லி
* கவுன்சில் ஃபார் சயின்டிபிக் அண்ட் இண்டஸ்ட்ரியல் ரிசர்ச், புதுடெல்லி
* இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி கல்வி நிறுவனங்கள்
* ஆல் இண்டியா இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்சஸ், புதுடெல்லி
* உயிரி இயற்பியல்  துறையைக் கொண்ட கல்வி மற்றும் ஆய்வு நிறுவனங்கள்
* மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம், புதுடெல்லி
* இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ், பெங்களூரு
* இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் எஜுகேஷன் அண்டு ரிசர்ச் அமைப்புகள்
* நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் எஜுகேஷன் அண்டு ரிசர்ச், புவனேஸ்வர்
* பாபா அடாமிக் ரிசர்ச் சென்டர், மும்பை

(அடுத்த இதழில் தாவர நோயியல்  Plant Pathology)

தொகுப்பு: வெ.நீலகண்டன்