காலணி தயாரிப்பில் கலக்கலாம் வாங்க!



சுலபமாக செய்யலாம் சுயதொழில்

‘‘1957ம் ஆண்டு ‘சென்ட்ரல் ஃபுட்வேர் டிரெயினிங் சென்டர்’ என்ற பெயரில் துவங்கப்பட்ட இந்த நிறுவனம், 1996ம் ஆண்டு, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. அதன் பின்புதான் ‘சென்ட்ரல் ஃபுட்வேர் டிரெயினிங் இன்ஸ்டிடியூட்’ என்று பெயர் மாற்றம் பெற்றது. இந்தியா மட்டுமல்லாமல் நைஜீரியா, மொரீஷியஸ், பிலிப்பைன்ஸ், ஃபிஜி, கயானா, உகாண்டா, ஜாம்பியா போன்ற வெளிநாடுகளிலிருந்து இங்கு வந்து படிக்கும் அளவுக்கு சிறப்பு பெற்ற இன்ஸ்டிடியூட் இது!’’ என்கிறார் இந்த மையத்தின் இயக்குனர் முரளி.

‘‘தென்னிந்திய மாணவர்களுக்கு காலணி வடிவமைப்பு பயிற்சியை வழங்க வேண்டும் என்பதற்காகவே இந்நிறுவனம் துவங்கப்பட்டது. ஆனால், பெரும்பாலும் வட இந்தியாவைச் சேர்ந்தவர்கள்தான் இங்கு வந்து பயிற்சிகளை மேற்கொண்டு வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்’’ என்ற ஆதங்கத்தோடு, இங்கு வழங்கப்படும் பயிற்சிகள் பற்றிய தகவல்களைப் பகிர்கிறார் அவர்...

‘‘ஷூ அப்பர் கிளிக்கிங், ஷூ அப்பர் குளோசிங், ஷூ லாஸ்ட்டிங், மேக்கிங் மற்றும் ஃபினிஷிங், காலணி இயந்திர பராமரிப்பு, தோல் பொருட்கள் தயாரிப்பு போன்றவை நான்கு வாரப் பயிற்சிகளாகும். இதற்கு எட்டாம் வகுப்பு படித்திருந்தால் போது மானது. வயது வரம்பு 35.

ஃபுட்வேர் டிசைன் மற்றும் பேட்டர்ன் கட்டிங், அட்வான்ஸ்டு ஷூ ஸ்டைலிங் 12 வார பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கான கல்வித் தகுதி பத்தாம் வகுப்பாகும். இதற்கும் வயது வரம்பு 35தான். பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு பகுதி நேர படிப்புகளும் உள்ளன. மூன்று வாரப் பயிற்சிகளான குவாலிட்டி கன்ட்ரோல், மெட்டீரியல் மேனேஜ்மென்ட், புரொடக்ஷன் மேனேஜ்மென்ட், மார்க்கெட்டிங் மேனேஜ்மென்ட்,

 டிஃபரன்ட் ஃபுட்வேர் கன்ஸ்டிரக்ஷன்ஸ் போன்ற படிப்புகளை பகுதி நேரமாகப் படிக்கலாம்.  இது மாலை நேர படிப்பாகும். ஷூ கேட், பிராசஸ் மற்றும் ப்ராடக்ட் சார்ந்த ஈடிபி பயிற்சிகள் நான்கு வார படிப்பாகும். இதுவும் மாலைநேர படிப்பே. இந்தப் படிப்புகளுக்கு வயது வரம்பு கிடையாது. ஃபுட்வேர் டெக்னாலஜியில் சான்றிதழ் படிப்பு படிக்க பத்தாம் வகுப்பு வெற்றி அல்லது தோல்வி போதுமானது. வயது வரம்பு 35.

அடுத்து பட்டயப் படிப்பு... இதில் டிப்ளமோ இன் ஃபுட்வேர் டிசைன் அண்ட் புரொடக்ஷன் இரண்டு ஆண்டு கால படிப்பாகும். +2 படித்தவர்கள்... 17 முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள் இந்தப் படிப்பை படிக் கலாம். போஸ்ட் டிப்ளமோ இன் ஃபுட்வேர் டெக்னாலஜியில் சேர ஏதாவது ஒரு பட்டயப் படிப்பும், போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ இன் ஃபுட்வேர் டெக்னாலஜியில் சேர ஏதாவது ஒரு பட்டப் படிப்பும் படித்திருக்க வேண்டும்.இந்த ஒவ்வொரு படிப்புக்கும் ஆண்டுக்கு 60 சீட்கள் உள்ளன. இதில் ஆண், பெண் இரு பாலருக்கான சேர்க் கையும் உண்டு. குறுகிய காலப் பயிற்சிகளுக் கான கட்டணம் ரூ. 6,000 முதல் 18,000 வரை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு கல்விக் கட்டணம், வயது வரம்பில் சலுகைகள் உண்டு. வெளியூர் மற்றும் உள்ளூர் மாணவர்களுக் கான விடுதி வசதிகளும் உள்ளன. கல்விக்கான வங்கிக் கடன் வசதியும் நிர்வாகத்தால் ஏற்பாடு செய்து தரப்படுகின்றன’’ என்கிறார் அவர் உற்சாகத்தோடு.இந்தப் பயிற்சிகளுக்கான விண்ணப்பங்களை www.cftichennai.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது நேரடியாக அலுவலகத்திலும் பெற்றுக் கொள்ள லாம். விண்ணப்பக் கட்டணம் ரூ.500.

இங்கு பயிற்சிகளை மேற்கொள்ளும் அனைவருக்கும் வேலை வாய்ப்புகளை சிதிஜிமி நிர்வாகமே ஏற்படுத்தித் தருகிறது. ஒன்று அல்லது இரண்டு வருடங்கள் வரை பணி அனுபவம் பெற்று விட்டால், வங்கிகளில் கடன் வாங்கி காலணி தயாரிப்பதற்கான தொழிற்சாலை கூட தொடங்கலாம். பெரிய அளவில் காலணி தயாரிக்கும் கம்பெனி களின் பணி வாய்ப்புகளைப் பெற்று தொழில் முனைவோர் ஆகலாம்!’’ என்கிறார் முரளி நிறைவாக.

- எம்.நாகமணி