வேலை ரெடி!



வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு வழிகாட்டும் பகுதி. இந்த இரண்டு வாரங்களில் வெளியான முக்கிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள் இங்கே...

பட்டதாரிகளுக்கு ஏர் இந்தியா வேலை!


நிறுவனம்: மத்திய விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா லிமிடெட்

வேலை: கேபின் க்ரூ டிரெயினி. வடக்கு மற்றும் தெற்கு மண்டல பணியிடங்களை நிரப்புவதற்கானது.

காலியிடங்கள்: மொத்தம் 161. இதில் வடக்கு மண்டலத்துக்கு ஆண்கள் 20 பேரும், பெண்கள் 101 பேரும், தெற்கு மண்டலத்துக்கு ஆண்கள் 10 பேரும், பெண்கள் 30 பேரும் தேவைப்படுகிறார்கள்.

கல்வித் தகுதி: ஏதேனும் பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அல்லது, ப்ளஸ் டூவுக்குப் பிறகு ஹோட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் கேட்டரிங் டெக்னாலஜியில் டிப்ளமோ படிப்போ அல்லது விமானப் பிரிவில் பேசஞ்சர் இன்டர்பேஸ் படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்

வயது வரம்பு:
18 முதல் 35க்குள். எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓ.பி.சி பிரிவினருக்கு வயது தளர்ச்சி உண்டு

தேர்வு முறை:
எழுத்து, குழுத் தேர்வு, ஆளுமைத் தேர்வு மற்றும் மருத்துவப் பரிசோதனைகள்

விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 18.11.14

விண்ணப்பிக்கும் முறை மற்றும் மேலதிக தகவல்களுக்கு:  www.airindia.in


டிப்ளமோ படித்திருந்தால் ராணுவத்தில் ஆபீஸர்!


நிறுவனம்: மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ், புனேயிலுள்ள டிஃபென்ஸ் எஸ்டேட் டிபார்ட்மென்ட்

வேலை:
சப் டிவிஷனல் ஆஃபீசர். இதில் 2 பிரிவுகளில் வேலை அறிவிக்கப்பட்டுள்ளது

காலியிடங்கள்: மொத்தம் 25. இதில் கிரேட் 1 சப் டிவிஷனல் ஆஃபீசர் வேலையில் 1 இடமும், கிரேட் 3 சப் டிவிஷனல் ஆஃபீசர் வேலையில் 24 இடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன

கல்வித் தகுதி:
முதல் வேலைக்கு சிவில் எஞ்சினியரிங்கில் டிகிரியோ அல்லது அதே படிப்பில் அனுபவத்தோடு டிப்ளமோவோ அவசியம். இரண்டாவது வேலைக்கு பத்தாவது படிப்பில் அறிவியல் பாடங்களை எடுத்துப் படித்திருப்பதுடன் சர்வே மற்றும் டிராஃப்ட்ஸ்மென் படிப்புகளில் டிப்ளமாவும் அவசியம்.

வயது வரம்பு: முதல் வேலைக்கு 18 முதல் 30 வயதுக்குள்ளும், இரண்டாவது வேலைக்கு 18 முதல் 27 வயதுக்குள்ளும் இருத்தல் வேண்டும். சில பிரிவினருக்கு வயது தளர்ச்சி உண்டு.

தேர்வு முறை: எழுத்துத் திறன் தேர்வு, மற்றும் நேர்முகம் உண்டு

விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 30.11.14

விண்ணப்பிக்கும் முறை மற்றும் மேலதிக தகவல்களுக்கு: www.dgde.gov.in



பெங்களூருவில் மத்திய அரசு வேலை!

நிறுவனம்: பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்ட மத்திய அரசின் ‘நீராதாரம் மற்றும் நதிகள் மேம்பாட்டு ஆணையம்’

வேலை: ஸ்கில்ட் ஒர்க் அசிஸ்டென்ட் எனும் உதவியாளர் வேலை மற்றும் படகுத் துறையில் எஞ்சினியர் மற்றும் டிரைவர்

காலியிடங்கள்:
மொத்தம் 101. இதில் முதல் வேலையில் 95 இடங்களும் இரண்டாம் வேலையில் 6 இடங்களும் காலியாக உள்ளன

கல்வித் தகுதி:
இரண்டு வேலைகளுக்குமே பத்தாவது படிப்பு அடிப்படைத் தேவை. இத்தோடு, முதல் வேலைக்கு படகு பழுது பார்த்தலில் சான்றிதழ் படிப்பும் டிரைவர் லைசென்சும் அவசியம். இரண்டாவது வேலைக்கு ஐ.டிஐ படித்திருக்க வேண்டும்

வயது வரம்பு: 18 முதல் 30க்குள். எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு 5 வருடமும், ஓ.பி.சியினருக்கு 3 வருடமும் வயது தளர்ச்சி உண்டு

தேர்வு முறை: நேர்முகம், தொழிற்திறன் தேர்வு

விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 30.11.14

விண்ணப்பிக்கும் முறை மற்றும் மேலதிக தகவல்களுக்கு: www.cwc.gov.in

செயில் மருத்துவமனையில் பல்வேறு பணிகள்

நிறுவனம்: ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா எனும் அரசு இரும்பு தொழிற்சாலையின் நிர்வாகத்தின் கீழ் ஒடிசாவில் செயல்படும் ரூர்கேலா மருத்துவ
மனையில் வேலை

வேலை: மூன்று பிரிவுகளாக உள்ள மெடிக்கல் ப்ரொஃபஷனல் வேலை

காலியிடங்கள்: மொத்தம் 20. இதில் மெடிக்கல் ஆபீஸர் 12, ரேடியாலஜி டெக்னீஷியன் 2 மற்றும் லேப் டெக்னீஷியன் 6. சில சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு உண்டு.

வயது வரம்பு: முதல் பிரிவுக்கு 30 வயதுக்குள்ளும், இரண்டாம் மற்றும் மூன்றாம் பிரிவுகளுக்கு 28 வயதுக்குள்ளும் இருத்தல் வேண்டும். இதில் எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு 5 வருடமும், ஓ.பி.சி பிரிவினருக்கு 3 வருடமும் வயது தளர்ச்சி உண்டு.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 22.11.14

விண்ணப்பிக்கும் முறை மற்றும் மேலதிக தகவல்களுக்கு: www.sail.co.in

மருந்து ஆராய்ச்சித் துறையில் பணியிடம்

நிறுவனம்: மத்திய அரசின் கீழ் ஜம்மு மாநிலத்தில் செயல்படும் இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்டகிரேடிவ் மெடிசின் எனும் மருந்து ஆராய்ச்சி நிறுவனம்

வேலை:
டெக்னிக்கல் ஸ்டாஃப். இதில் 2 வகையான வேலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

காலியிடங்கள்: மொத்தம் 14. இதில் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் 6, டெக்னீஷியன் 8

கல்வித் தகுதி: முதல் வேலைக்கு துறைக்கேற்ப பி.எஸ்சியும் இரண்டாம் வேலைக்கு பத்தாம் வகுப்புடன் ஃபார்மஸி டிப்ளமா படிப்போ அல்லது அது தொடர்பான படிப்புகளோ அவசியம்

வயது வரம்பு: 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 26.11.14

விண்ணப்பிக்கும் முறை மற்றும் மேலதிக தகவல்களுக்கு: www.iiim.res.in


ராணுவத்தில் டெக்னிக்கல் வேலை


நிறுவனம்: இந்திய ராணுவம்

வேலை: 5 வருட பயிற்சிக்குப் பின் டெக்னிக்கல் துறையில் வேலை. இந்த வேலைக்கான தேர்வு ப்ளஸ் டூ டெக்னிக்கல் என்ட்ரி ஸ்கீம் என்றழைக்கப்படுகிறது. இந்த வேலைகளுக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்

காலியிடங்கள்:
மொத்தம் 90

கல்வித் தகுதி:
ப்ளஸ் டூ படிப்பில் ஃபிசிக்ஸ், கெமிஸ்ட்ரி மற்றும் கணிதப் பாடங்களை எடுத்து 70 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உயரம் மற்றும் எடை குறித்த உடல் தகுதியும் உண்டு.

வயது வரம்பு:
16 1/2 முதல் 19 1/2 வரை

விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 28.11.14

விண்ணப்பிக்கும் முறை மற்றும் மேலதிக தகவல்களுக்கு: www.joinindianarmy.nic.in


முதுகலை பட்டதாரிகளுக்கு அரசு வேலை


நிறுவனம்:
டி.எஸ்.எஸ்.எஸ்.பி எனும் டெல்லியிலுள்ள டெல்லி துணை நிலை சேவை பணியாளர் தேர்வு வாரியத்தின் டெல்லி அரசின் துறைகளுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு

வேலை
: பல்வேறு துறைகளில் டையர் 1 எனும் முதல்நிலை வேலைகள்

காலியிடங்கள்:
மொத்தம் 101

கல்வித் தகுதி: வேளாண்மை, உயிரியல், வேதியியியல், வர்த்தகம், பொருளாதாரம், கணிதப் பாடங்களில் முதுகலை படித்தவர்களும், ஆங்கிலம், உருது, இந்தி, சமஸ்கிருதம் போன்ற மொழிப் பாடங்களில் முதுகலை படித்தவர்களும் இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 29.11.14

விண்ணப்பிக்கும் முறை மற்றும் மேலதிக தகவல்களுக்கு: www.delhigovt.nic.in

அரசு கட்டுமான ஆய்வு நிறுவனத்தில் பணி

நிறுவனம்:
சென்ட்ரல் சயின்டிஃபிக் அண்ட் இண்டஸ்ட்ரியல் ரிசர்ச் எனும் மத்திய அரசு ஆய்வு நிறுவன நிர்வாகத்தின் கீழ் உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள சென்ட்ரல் பில்டிங் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்.

வேலை:
எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஜியாலஜி, கம்ப்யூட்டர் போன்ற 7 பிரிவுகளில் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் வேலை

காலியிடங்கள்: மொத்தம் 15. இதில், பொதுப் பிரிவினருக்கு 8, எஸ்.சியினருக்கு 2, எஸ்.டியினருக்கு 1, மற்றும் ஓ.பி.சி. யினருக்கு 4 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கல்வித் தகுதி:
சில பிரிவுகளுக்கு எஞ்சினியரிங் டிப்ளமா படிப்பும் சிலவற்றுக்கு பி.எஸ்சி படிப்பும் அவசியம்.

வயது வரம்பு: 28 வயதுக்குள் இருத்தல் வேண்டும். சில பிரிவினருக்கு வயது தளர்ச்சி உண்டு.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 25.11.14

விண்ணப்பிக்கும் முறை மற்றும் மேலதிக தகவல்களுக்கு: www.cbri.res.in